Tuesday, 30 October 2018

ஞானம்

கருத்து சொல்வதற்கு அல்ல, கடந்து செல்வதற்கே அதிக ஞானம் தேவைப்படுகிறது

தெய்வீகம்

மனைவி அடிக்கும் போது ஒரு கணவன் சிரிக்கிறான் என்றால் அவன் தெய்வீக நிலை அடைந்திருப்பான் .

Tuesday, 16 October 2018

கனவு

கோடி கோடியா கண்ணுக்குள்ள கனவிருக்கு

Wednesday, 10 October 2018

ஈரோடு கதிர்

ஒன்றும் இல்லாத இடத்தில் தனக்கு வேண்டியதை உருவாக்க ஒவ்வொருவருமே விரும்புவதும், முயல்வதும் வாழ்தலின் முக்கிய விதி.

Monday, 8 October 2018

கீதை

எது உனக்குரிய செயலோ அது. எந்தச் செயலுக்காக நீ பிறந்திருக்கிறாயோ அது. அதைச் செய்யும்போதே மனநிறைவும் வாழ்வின் முழுமையும் கிடைக்கும். 

விவசாயம்

விஞ்ஞானம் வளர்ந்த அளவுக்கு..

விவசாயம் வளரவில்லை..!!

Saturday, 6 October 2018

நா.மு

விழிகளிலே விழிகளிலே புது புது மயக்கம் யார் தந்தார்
அருகினிலே வருகையிலே புது புது தயக்கம் யார் தந்தார்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்

விழிகளிலே...

இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ...
இன்பத்தில் இது என்ன வகை இன்பமோ
நெருப்பில் எரிவதை உணருது வயது
இது வரையில் எனக்கு இது போல் இல்லை
இருதய அறையில் நடுக்கம்
கனவுகள் அனைத்தும் உன் போல் இல்லை
புதியதாய் இருக்குது எனக்கும்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே ..

சொந்தத்தில் இது என்ன வகை சொந்தமோ
இறைவன் தந்த வரம் இணைந்தது நெஞ்சம்
மொத்தில் இது என்ன வகை பந்தமோ
இதழ்கள் சொல்லவில்லை புரிந்தது கொஞ்சம்
இது என்ன கனவா நிஜமா
இதற்கு யாரிடம் கேட்பேன் விளக்கம்
இது என்ன பகலா இரவா
இரவின் அருகினில் சூரியன் வெளிச்சம்
உன்னோடு இருக்கும் பொன்னான நிமிடம்
எந்நாளும் தொடர்ந்திட நெஞ்சம் ஏங்கும்
விழிகளிலே...

விழிகளிலே விழிகளிலே.

Thursday, 4 October 2018

புன்னகை

புன்னகை என்பது கண்களில் தொடங்கி இதழ்களில் முடிய வேண்டும் 

கல்விக்கூடங்கள்

குழந்தைகள்

விலையேற்றம்

நேத்து நைட் வண்டிய கேட் முன்னாடியே மறந்து நிப்பாட்டிட்டேன் சாவி கூட எடுக்கல...

இப்போ எழுந்ததும் சாவிய காணோம்னு பதறியடிச்சிட்டு போய் வண்டியப்பார்த்தா வண்டி அங்கனவே இருந்துச்சு!

பெட்ரோல் மட்டும் திருடுப் போய்ருக்கு...

மோடி ஜி'க்கு நன்றிகள்

Wednesday, 3 October 2018

Friends

நம்ம கூட இருக்க சில நண்பர்கள் டேபிள் மேட் போல எத்தனை வகையா வேணா பயன்படுத்திக்கலாம்!!!

மனிதன்

சமூகத்தைவிட சாதியைவிட மதத்தைவிட மனிதனே முக்கியம்

Monday, 1 October 2018

காந்தி

1. நோபல் பரிசிற்காக 5 முறை மகாத்மா காந்தி பரிந்துரை செய்யப்பட்டார்.

2. மகாத்மா காந்தி 4 கண்டங்களிலும், 12 நாடுகளிலும் குடியுரிமை இயக்கத்தினைத் தொடங்கிவைத்தார்.

3. மகாத்மா காந்தி தீவிரமாக எதிர்த்த நாடான பிரிட்டன், அவரைப் பெருமைப்படுத்தி ஒரு தபால் தலையை அவர் இறந்து 21 ஆண்டுகள் கழித்து வெளியிட்டது.

4. ஒரு நாளைக்கு மகாத்மா காந்தி 18 கிலோமீட்டருக்கும் அதிகமாக நடந்தார்.

5. மகாத்மா காந்தி டால்ஸ்டாய், ஐன்ஸ்டீன், ஹிட்லர் உட்பட உலகின் பல பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தார்.

6. மகாத்மா காந்தி சுடப்படும்போது அணிந்திருந்த ஆடை உள்ளிட்ட அவர் பயன்படுத்திய பல பொருட்கள், மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

7. மகாத்மா காந்தி இறந்துபோவதற்கு ஒரு நாளைக்கு முன்னால், காங்கிரஸைக் கலைத்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்தார்.

8. மகாத்மா காந்தி ஆங்கிலத்தை, ஐரிஷ் மொழியின் சாயல் கலந்து (Irish accent) பேசினார். அதற்குக் காரணம், அவருடைய ஆங்கில ஆசிரியர் ஒரு ஐரிஷ் மனிதர்.

9. இந்தியாவில் 53 பெரும் சாலைகளும் (சிறு சாலைகளை இதில் சேர்க்கவில்லை), இந்தியாவிற்கு வெளியில் 48 சிறு சாலைகளும் காந்தி பெயரால் அழைக்கப்படுகின்றன.

10. 1996ஆம் ஆண்டு முதல் அச்சடிக்கப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளிலும் காந்தியின் படம் இடம்பெறுகிறது.

கலை

கலை எதையும் சாதிக்கும் வல்லமை கொண்டது.

இசை

முத்தத்தில் துவங்கி முத்தத்தில் முடியும் உறவு மிகவும் அபூர்வமாகவே வாய்க்கிறது... இசை

பெருமாள் முருகன்

இயற்கையைத் தொந்தரவு செய்யாமல் அதன் இயல்புகளைப் புரிந்து அதாவது இயற்கையோடு இயைந்து வாழ்வது பேறு

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை