தமிழ்ல உயர்திணை , அஃறிணை உண்டு.
மனிதனை எப்படி உயர்திணை யில் வைத்தார்கள்?
விலங்குகளை விட மோசமால்ல இருக்கான்..
தமிழ்ல உயர்திணை , அஃறிணை உண்டு.
மனிதனை எப்படி உயர்திணை யில் வைத்தார்கள்?
விலங்குகளை விட மோசமால்ல இருக்கான்..
குழந்தைகளுக்கு தான் எவ்வளவு தைரியம்!??
பின்ன 'லூசு மாதிரி பேசாதம்மா' என்று சொல்வதற்கு முடிகிறதே!!
புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்தார்னு சொன்னா, அப்போ அதுக்கு முன்னாடி உலகில் புவி ஈர்ப்பு விசை இருந்ததில்லையான்னு கேட்க எவ்வளவு முட்டாள்தனம் வேணுமோ, அதே அளவு முட்டாள்தனம் தான்
பெரியார் அப்படி என்ன செய்தார்னு கேட்பதற்கும் வேணும்!!
வண்ணப் புதையலா உன்னை எண்ணி
வச்சிருப்பேன் நெஞ்சில் பத்திரமா..
சின்ன சிரிப்புல என்னை வளைச்சுட்ட
சித்தன்ன வாசலு சித்திரமா...
காதல் எல்லாவகையிலும் அழகானதே. இது உங்கள் வாழ்க்கையின் உணர்ச்சிகரமான ஓர் அத்தியாயம். அது இளமையின் ஒரு நல்ல நினைவு.
முறைகேடாய் கிடைத்த ஒவ்வொரு வெற்றியும் எங்கோ ஓர் திறமையாளனின் கனவை கொடூரமாய் சிதைத்திருக்கும்!
பழைய போட்டோல நம்ம போட்டுருக்குற ட்ரெஸ் எல்லாம் பார்க்கும்போது அந்த காலத்து நடிகர்கள் படம் பாக்குற மாதிரி பீலிங்கு..!!
புடிச்சவங்கள பிரியும்போது உடனே வலிக்கும். நம்மள புரிஞ்சுகிட்டவங்கள பிரியும்போது லேட்டா வலிக்கும். ஆனால் ரொம்ப வலிக்கும்.
மற்றவரின் பெரிய தவறுகள் பேசப்பட்டு, நம் தவறு மறைக்கப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சியில் குற்றவுணர்வும் கலந்திருக்கும்!
சுத்தியால் பத்துஅடி அடித்தும் உடையாத கருங்கல்,
11வது அடியில் உடைந்தால்,
முதலில் அடித்த அந்த பத்து அடிகளும் வீணாபோனதோ அல்லது மதிப்பு இல்லாததோ அல்ல!!!
எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம் " என்ற மனநிலை எப்போது வருகிறதோ அப்போது தான் நாம் பயம் என்ற உணர்வில் இருந்து விடுபட முடியும்.
உங்கள பத்தி நிறைய சொல்லிருக்காங்கனு யாராச்சும் சொல்லும் போது நாம செஞ்ச தப்பு மட்டும் ஒரு நிமிசம் கண்ணு முன்னாடி வந்து போகும்
கடும்பசி இருந்தும், பக்கத்தில் உணவு இருந்தும் நமது வருகைக்காகக் காத்திருக்கும் ஜீவன்கள் வாழ்க்கையை நெகிழ்வடைய செய்கிறார்கள்!
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை