Tuesday, 13 August 2019

யார் பிச்சைக்காரன்

ஊர்வீதி எல்லாம் அத்துபடி
சந்துபொந்து குண்டுகுழி 
சாக்கடைத் தேங்கலும் கூட. 

நாய்களோடு நல்ல பரிச்சயம்
இது யார்வீட்டுப் பூனை என்பதும் தெரியும்.

எந்த மரநிழல் நிற்க ஏற்றது
எது பூத்துதிர்கிறது 
எல்லாம் அறிவான்.

யார் இட்ட கோலம் அழகு 
அவனுக்குத் தெரியும். 

முச்சந்தியில் இஸ்திரி போடுபவனிடம்
தினந்தோறும் 
பீடிக்கு நெருப்பு வாங்கி
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.

சித்தர் பாடல்களை 
அப்படியே ஒப்பிக்கிறான்.

யாரோ தந்திருக்கிறார்கள்
பீட்டர் இங்கிலாந்து சட்டை அணிந்திருக்கிறான்.

மளிகைக்கடைக்காரருக்குச் 
சில்லறை தருகிறான்.

‘ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு ?’
விசாரிக்கவும் தெரிகிறது. 

கிரிக்கெட் பந்து அவன்மீது பட்டது 
சிரித்தபடி எடுத்து வீசுகிறான்.

அவனுக்கு யார்மீதும் புகார் இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை 
விமர்சனம் இல்லை.

நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத் 
தெரிந்திருக்கிறது.

அவனைப் 
பிச்சைக்காரன் என்று 
எப்படிச் சொல்ல முடியும் ?

Sunday, 4 August 2019

நம்மாழ்வார்

மரத்தை வெட்றதும்
மார அறுத்ரதும் ஒண்ணுதான்யா...
#நம்மாழ்வார்

Thursday, 1 August 2019

புதிதாய் பிறத்தல்

தலைகீழாய் மாற்றம் கண்டிருந்தது புதிய தங்கையின் வரவைச் சுமந்த வீடு

தன் வழக்கங்களிலிருந்து விடுதலை வாங்கியிருந்தனர் அவளுடன் சேர்ந்து புதிதாய்ப் பிறந்த வீட்டினர்

வீட்டின் சப்தங்கள் யாவும் அவளின் மூடிய சிறிய கண்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டன

அவளின் மெல்லிய சிணுங்கள்களினால் வீடு பலமுறை நிலநடுக்கம் கண்டது

நலம் விசாரிக்கும் உறவுகளால் எனக்கு ஒப்பான விஷயங்கள் அவளிடத்தில் தேடப்பட்டன

வேற்றுகிரகவாசி போல் நான் தனித்து நின்ற பொழுதொன்றில்

வலுக்கட்டாயமாக அவள் கைகளுக்குள் திணிக்கப்பட்ட என் விரலை அவள் அழித்திப் பிடிக்கும் வேளையில் நானும் புதிதாய்ப் பிறந்ததை உணர்ந்தேன் !

-வித்யா சுப்ரமணியன்

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை