Tuesday, 28 August 2018
அம்மா
நான் பள்ளிக்கூடத்திலிருந்து வரும் நேரத்துக்கு அம்மா வாசலில் காத்து நிற்பார். கொஞ்சம் பிந்தினாலும் துடித்துப் போய்விடுவார். தூரத்தில் அம்மாவை கண்டதும் ஓடத்துவங்குவேன். அம்மாவை கட்டிப்பிடித்ததும் நான் அப்பொழுதுதான் பிறந்ததுபோல அவர் என் உடம்பு முழுவதையும் தடவிப் பார்ப்பார். அவர் கேட்கும் முதல் கேள்வி 'ஆராவது அடித்தார்களா?' என்பதுதான். அந்தக் காலத்தில் பள்ளிக்கு போய்வந்தால் வீட்டுக்கு ஏதாவது காயத்துடன் திரும்பி வருவதுதான் வழக்கம். வாத்தியார்மார் அடிப்பார்கள். அல்லது கூடப்படிக்கும் பெடியன்கள் என்னைப்போட்டு மிதிப்பார்கள். இது இரண்டும் நடக்காவிட்டால் நானாகவே விழுந்து முழங்காலையோ, முழங்கையையோ உடைத்துவிடுவேன். ஒருநாள் நான் பிந்தி வந்தபோது அம்மா பாதி தூரம் ஓடிவந்துவிட்டார். அன்றைக்குத்தான் என்னை நாடகக் குழுவுக்கு தேர்வு செய்திருந்தார்கள். அந்த செய்தியை சொன்னதும் அம்மா தானே தெரிவு செய்யப்பட்டதுபோல எனக்காக மகிழ்ந்தார்.
புகைப்படம்
ஒருவருக்கு அதிக மகிழ்ச்சி அளிக்கக்கூடியது என்னவென்றால் அவருடைய ஆகச்சின்ன வயது புகைப்படத்தை பார்ப்பது.
A.Mu
எவருடைய நூலைப் பற்றியாவது சிலாகித்துப் பேசுகையில் அதில் வரும் மிகச் சிறந்த வசனத்தை சுட்டிக் காட்டி "இந்த ஒரு வசனத்திற்கே புத்தகத்திற்கு கொடுத்த மொத்த விலைப்பணமும் சரியாய்ப் போய்விட்டது" என்று குறிப்பிடுவது அ.முத்துலிங்கம் அவர்களின் வழக்கம்
Vaanam
பல்லாயிரம் கோடி ஓவியர்கள் கூடி பல்லாயிரம் வருடம் நில்லாமல் வரைந்தாலும் வானத்தின் தோற்றங்களை வரைந்து மாளுமா என்ன?
இலக்கியம்
மானுடச் சிறுமைகள் முன்பு மனம் சுருங்குகையிலும், மானுட அவலம் முன்பு மனம் பதைக்கையிலும் மானுட மேன்மையை ஒளியுறக் காட்டி நம்மை இவ்வுலக வாழ்க்கையை நேசிக்கச் செய்யும் பெரும் பொக்கிஷங்கள் தான் பேரிலக்கியங்கள்..
Monday, 27 August 2018
வீடு
Sunday, 26 August 2018
நா.மு
யார் இந்த பெண்தான் என்று கேட்டேன் முன்னாலே
இவள் எந்தன் பாதி என்று கண்டேன் தன்னாலே
என்னை பார்க்கிறாள் ஏதோ கேட்கிறாள் எங்கும் இருக்கிறாள் ஓ
கண்ணால் சிரிக்கிறாள் முன்னால் நடக்கிறாள் நெஞ்சை கிழிக்கிறாள் ஓ
கூட்டத்தில் இருந்தும் தனியாக தெரிந்தாள்
தோட்டத்தில் மலர்ந்த பூவாக திரிந்தாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)
என் வீட்டு முற்றத்தில் இவள் போடும் கோலங்கள்
எப்போதும் வேண்டும் என்று கேட்டேன்
அணில் ஆடும் கூடத்தில் இவள் பாடும் ராகத்தில்
அதிகாலை சூரியனை பார்த்தேன்
கண்ணாடி வளையலை போலே
கையோடு நானும் பிறக்கவே துடிப்பேன்
கால் தீண்டும் கொலுசில் என்னோட மனசை
சேர்த்து கோர்க்கவே தவிப்பேன்
காதோடு தவழும் கம்மல் போல் கிடப்பேன்
கன்னத்தை உரசி என் ஜென்மம் முடிப்பேன்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)
நான் கொஞ்சம் பார்த்தால் எங்கேயோ பார்ப்பாள்
பார்க்காத நேரம் என்னை பார்ப்பாள்
என்னை பார்த்து சிரிப்பாள் நான் பார்த்தால் மறைப்பாள்
மெய்யாக பொய்யாகத்தான் நடிப்பாள்
பெண் நெஞ்சம் புதிததை போல எப்போதும்
யாரும் அறிந்ததே இல்லை
ஆண் நெஞ்சின் துடிப்பும் அன்றாட தவிப்பும்
பெண்கள் மதிப்பதே இல்லை
மனம் நொந்த பிறகே முதல் வார்த்தை சொல்வாள்
மழை நின்ற பிறகே குடை தந்து செல்வாள்
என்னை ஏதோ செய்தாள்
(யார் இந்த..)
படம்: பாஸ் என்கிற பாஸ்கரன்
இசை: யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்: ஹரிசரன்
வரிகள்: நா. முத்துக்குமார்
Saturday, 25 August 2018
Past. Present.
Friday, 24 August 2018
பிடித்த பாடல்
அபியும் நானும் - வா வா என் தேவதையே
வா வா என் தேவதையே
பொன் வாய் பேசும் தாரகையே
பொய் வாழ்வின் பூரணமே
பெண் பூவே வா
(வா வா என் தேவதையே)
வான் மிதக்கும் கண்களுக்கு மயிலிறகால் மையிடவா
மார் உதைக்கும் கால்களுக்கு மணிக்கொலுசு நானிடவா
(வா வா என் தேவதையே)
செல்லமகள் அழுகைப் போல்
ஒரு சில்லென்ற சங்கீதம் கேட்டதில்லை
பொன்மகளின் புன்னகைப் போல்
யுகப் பூக்களுக்குப் புன்னகைக்கத் தெரியவில்லை
என் பிள்ளை எட்டு வைத்த நடையைப் போல
இந்த இலக்கண கவிதையும் நடந்ததில்லை
முத்துக்கள் தெறிக்கின்ற மழலைப் போல
ஒரு முந்நூறு மொழிகளில் வார்த்தை இல்லை
தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா
என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே
(வா வா என் தேவதையே)
பிள்ளை நிலா பள்ளி செல்ல
அவள் பையோடு என் இதயம் துடிக்கக் கண்டேன்
தெய்வமகள் தூங்கையிலே
சில தெய்வங்கள் தூங்குகின்ற அழகைக் கண்டேன்
சிற்றாடைக் கட்டி அவள் சிரித்த போது
என்னைப் பெற்றவள் சாயல் என்று பேசிக் கொண்டேன்
மேல்நாட்டு ஆடை கட்டி நடந்த போது
இவள் மீசையில்லாத மகன் என்று சொன்னேன்
பெண் பிள்ளை தனியறை புகுந்ததிலே
ஒரு பிரிவுக்கு ஒத்திகையைப் பார்த்துக் கொண்டேன்
(வா வா என் தேவதையே)
Abhiyum Naanum - Vaa Vaa En Devadhai
Wednesday, 22 August 2018
Tuesday, 21 August 2018
கல்பற்றா நாராயணன்
நெடுஞ்சாலைப் புத்தர்
நேற்று நான்
நெடுஞ்சாலையைக் குறுக்கே கடக்கும்
புத்தனைக்கண்டேன்
சாயங்காலப் பரபரப்பில்
கடக்க முடியாமல்
இப்பக்கம்
வெகுநேரமாக நின்றிருந்தேன்
ஐம்பதோ
அறுபதோ
எழுபதோ
வருடம் நீளமுள்ள வாழ்வில்
எப்படிப் பார்த்தாலும் ஒரு ஒன்றரை வருடம்
நாம் இப்படி கடக்க முடியாமல்
காத்து நிற்கிறோம்
என்று எண்ணியபடி …
அப்போது ஒருவன்
சற்றும் தயங்காமல்
மெதுவாக நெடுஞ்சாலையை கடப்பதைக் கண்டேன்
அவனைப் பின் தொடரத் தொடங்குகையில்
ஒரு வண்டி
குரோதத்துடன் என்னை நோக்கி வந்தது
எந்த வண்டியும்
அவனுக்காக வேகத்தைக் குறைக்கவில்லை
இயல்பான
அகன்ற
தனித்த
எப்போதும் அங்கிருக்கும் பாதையில்
அவன் நடந்து மறுபக்கம் சேர்ந்தான்
Monday, 20 August 2018
Kozhandhaigal
வீட்டில் ஏதேனும் பொருள் காணவில்லை என்று முடிவெடுக்கும் முன்பு உங்கள் குழந்தையிடம் ஒரு தடவை கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்!!!
Friday, 17 August 2018
கவிஞர் நா.முத்துக்குமார் நினைவு தினத்தன்று எழுத்தாளர் பவா செல்லதுரை அவர்கள் எழுதியது
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான்
ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் இருந்து இதைஎழுத நேர்ந்த துரதிஷ்டம் பிடித்தநாள் இந்தசனிக்கிழமை.
தன் வாழ்நாள் எல்லாம் அதைக் கண்டு ஓடி ஒளிந்தஒரு குழந்தையிடம் போய் ஈவிரக்கமின்றி தன் சகலஅகங்காரத்தையும் காட்டி நின்றிருக்கிறது மரணம்.
நாற்பத்தியோரு வயதிற்குள் முத்துக்குமார் அடைந்தஉயரமும், அவன்மீது விழுந்த வெளிச்சமும்அவனாலேயே இறுதிவரை நம்ப முடியாதது.
ஒரு அடர்மழை பிடித்துப் பெயர்ந்த ஒரு முன்னிரவில்தன் நண்பன் நந்தலாலாவோடு என் வீட்டிற்கு நனைந்தஉடம்போடு வந்து நின்று,
‘‘ஒரு துண்டு கொடுண்ணே, என் பேரு முத்துக்குமார்,என் தூர் கவிதையை நீ எல்லா மேடைகள்லேயும்சொல்றீயாமே, தோ இப்ப எனக்கும் சொல்லு’’
என்ற கணம், அண்ணன் தம்பிகளற்ற எங்கள்வாழ்வில் அவனுக்கு அவ்விடம் தரப்பட்டது.
நானும், ஷைலஜாவும் எங்கள் கைபேசி பெயர்சேகரிப்பில் அவன் எண்ணை ‘தம்பி’ என்றேபதிந்திருக்கிறோம்.
எதிலிருந்தும் சட்டென விலகி தனித்திருப்பதையேஎப்போதும் விரும்புவான். அந்த வெள்ளெலி உணவுசேகரிப்பதற்காகவே வயல் வரப்புகளில் மேயும். மற்றபடிஅது தன் ஈரம் படர்ந்த பொந்துக்குள்தான் எப்போதும்இருக்க விரும்பும்.
தன் மூன்றரை வயதில் பள்ளியிலிருந்து பாதியில்வீட்டிற்கு தன் மாமாவின் சைக்கிளில்அழைத்துவரப்பட்டு, வீட்டு வாசலில் அம்மாவின் உடல்பூமாலைகளுக்கு இடையே கிடத்தப்பட்டிருப்பதைவெறித்து பார்க்க பார்க்க, யாரோ ஒரு அத்தையால்கைபிடித்து அழைத்துப் போகப்பட்டு ஒரு கரும்பு துண்டுகைகளில் திணிக்கப்பட்ட நாளில், அவன் இந்த வாழ்வின்எல்லாக் கசப்பையும், ஏதோ ஒரு இனிப்புசுவை கொண்டுஏமாற்றக் கற்று கொடுக்கப்பட்டவன்.
புத்தகங்களை மட்டுமே தன் வாழ்நாளின் ஒரேசொத்தாக பாவித்த அப்பாவின் நிழல்தான் இன்றளவும்அவன் தேகத்தின் மேல் படிந்திருப்பது.
முத்துக்குமாரின் பால்யம் அம்மாவின் மடியற்றது.அப்பாவின் பேரன்பைத் தாங்க முடியாதது. தன்வயதையொத்த நண்பர்களால் குதூகலமானஉலகத்துக்கு அழைத்து செல்லப்பட்டது. ஆனாலும்அவன் வசிப்பிடம் அந்த எலி பொந்துதான்.
வளர்ந்து ஆளானபின் அவன் ஷைலஜாவை அக்காஅக்காவென வாய்நிறைத்து அழைத்தாலும்அவளுக்கான இடம் தன் அம்மாவுடையது என்பதைஅவர்கள் இருவருமே அறிந்திருந்தார்கள்.
பிறந்து ஐந்து மாதங்கூட தன் மகள் கருவில்உருவாகிவிட்டாள் என்ற செய்தியை ஒரு அதிகாலையில்,
‘‘அக்கா எனக்கு ஒரு ஆனந்த யாழ் பிறக்கப் போறா’’என அவன் அவளுக்கே முதன்முதலில் சொன்னான்.
நானறிந்து அவன் அப்பா அவனை ஒருகோழிக்குஞ்சைப் போல தன் சேட்டைகளின் இதமானசூட்டிலேயே கடைசிவரை வைத்திருந்ததும். தன் மகன்ஆதவனை ஒரு கங்காரு தன் குட்டியைவயிற்றுக்குள்ளேயே சுமப்பதை மாதிரி முத்துக்குமார்சுமந்ததும் வேறு யாராலும் அடைய முடியாத உறவின்உச்சம். தான் ஒரு கவிஞன் மட்டுமே என ஒவ்வொருவிநாடியும் தனக்குள்ளேயும், பொதுவெளியிலும்சொல்லிப் பார்த்துக் கொண்டவன், சமூகம் தன்பாடலுக்காகத் தன்னைக் கொண்டாடிய போதெல்லாம்கூச்சப்பட்டு அதே பொந்துக்குள் ஓடி ஒளிந்துகொள்ளமுயன்றவன்.
‘‘நீ இ.பி.ல தானேண்ணா வேலை பாக்குற.எவனாவது உன்னை இ.பி.க்காரன்னு சொல்றானா?நான் சினிமாவுக்குப் பாட்டெழுதுறேன். என்னை மட்டும்ஏன்னா பாடலாசிரியன்னு சொல்றாங்க, அப்படி சொல்றஎவன் முன்னும் என் கவிதைத் தொகுப்புகளை எடுத்துவன்மத்தோடு. வீசுவேன்’’
‘கவிஞன்’ என்ற ஒரு சொல்லின்மீது அவனுக்கிருந்தஅதீத வெறியும், அது கலையும்போது அவனுக்கேற்பட்டஆற்றாமையும் சொல்லில் அடங்காதது.
முத்துக்குமாரின் உலகம் சமூகம் சார்ந்ததல்ல. தன்உரைநடையில் இரண்டாமிடத்தையே எப்போதும்சமூகத்திற்கென ஒதுக்கி வைத்திருப்பான். முதலிடம் தன்ரத்த உறவுகளுக்கு.
அப்பா நாகராஜில் ஆரம்பித்து ஆதவனில் தொடர்ந்துஅவனுக்கு எத்தனை சித்திகள்? எத்தனை அத்தைகள்?எத்தனை மாமாக்கள்? எங்கெங்கோ பூமிக்கடியில்அக்குடும்ப வேர்களுக்கு அவன் மட்டுமே கடைசிவரை நீர் வார்த்தான். மழை அரிப்பின் அதன் மண் அரிப்புக்குத்தன் சதையையே மண்ணாக்கி வேர் காத்தான்.அதனால்தான் அவன் எழுத்து அதைச் சுற்றியேசுழன்றன.
பிரத்தேயமான சில குணாம்சங்களைக்கொண்டிருந்தவன். எங்கள் வீட்டில் ஒரு காலையில்உணவருந்திவிட்டு அவன் போன பத்தாவது நிமிடத்தில்அதற்காகவே காத்திருந்தது போல் வந்து சூழ்ந்தவெறுமையை, ஒரு தொலைபேசி அழைப்பில்துடைத்தெறிந்தவன்.
‘‘அக்கா, என் ஆனந்த யாழ் பாட்டுக்கு நேஷ்னல்அவார்டு’’
அவ்வளவுதான். கவிஞர்கள் எப்போதும் வார்த்தைக்கருமிகள்தான். அதிலும் என் தம்பி முத்துக்குமார் மகாகருமி.
நானும், நண்பர் எஸ்.கே.பி. கருணாவும்தான் அவன்திருமணத்தின் மாப்பிள்ளைத் தோழர்கள். அங்கு குவிந்ததிரைப்பட நட்சத்திரங்களின் வருகை அவனைஇம்மியளவும் ஈர்க்கவில்லையென்பதை கவனித்தேன்.அப்போதும் தன் ஆயாவின் கைகளைப் பற்றிக்கொண்டுமண்டபத்துக்கு எதிரே ஒரு ஓரமாக நின்றிருந்தகிராமத்துப் பையனின் ஆழமான உறவை தன்ஆயாவிடம் அவன் காட்டிய நெருக்கத்தில்கண்டிருக்கிறேன்.
அவன் எப்போதுமே யாருமே கணிக்க முடியாத ஒருகணத்தால் நம்மைக் கடப்பான்.
கணையாழி விழாவில் சுஜாதா அவனுடைய தூர்கவிதையை வாசித்து, ‘இதை எழுதியது யாரெனத்தெரியாது. இக்கூட்டத்திலிருந்தால் மேடைக்கு வா: எனஅழைத்தபோது, ஒரு கவிதை மட்டும் எழுதிய அப்பாவிப்பையனாய் மேடையேறி கூட்டத்தைப் பார்த்து மலங்கமலங்க முழித்தபோது, யாரோ ஒருவர் தன்பாக்கெட்டிலிருந்து 1000 ரூபாயை அக்கவிதைக்காகஅவனுக்குப் பரிசளித்தபோது, கவனமாக அம்மேடையில்நின்று தொகை சரியாய் இருக்கிறதாவென எண்ணிப்பார்த்த வினாடி எதிரில் எழுந்த கைத்தட்டல்களையும்,சிரிப்பொலியையும்,
‘இத்தொகையை கணையாழியின் வளர்ச்சி நிதிக்குத்தருகிறேன்’
எனச் சொல்லி மௌனமாக்கியவன்.
அவனை யாராலும் அவதானித்துவிட முடியாதபடிவாழ்வாற்றில் தன் போக்கில் போய்க் கொண்டிருந்தகுழந்தை அது.
தன் சக படைப்பாளிகளில் வறுமையிலிருப்பவரெனஅவன் கருதிய எல்லோருக்கும் தன்னிடம் வந்தபாடலுக்கான பணத்தைப் பகிர்ந்து தந்திருக்கிறான்.
தன் உடம்பில் ஒரு புற்றுமாதிரி உருவாகி தினம்தினம் வளர்ந்த தனிமைக்குத் தின்ன, தன்னையேகொடுக்க முடியாத ஒரு தருணத்தில்தான் அவன் குடிக்கஆரம்பித்திருக்க வேண்டும்.
நானும் ராமசுப்பும் (இயக்குனர் ராமை முத்துஎப்போதும் அப்படியே அழைப்பான்) அவன் குடிக்கானகாரணத்தை கடைசிவரை மையப்படுத்த முடியாமல்தவித்திருக்கிறோம்.
எங்கோ ஒரு அடி (அது நிச்சயம் தன் உறவிலிருந்துமட்டுமே) எப்போதோ பலங்கொண்ட மட்டும் அவனுக்குவிழுந்திருக்கிறது. அதன் வலியை ஒரு சிறுவனால்வளர்ந்த பின்னும் தாங்க முடியவில்லை. அதன் ரணம்எப்போதுமே, எதனாலுமே ஆற்ற முடியாதது. தன்குடியால் அதை ஆற்றிவிட முடியுமென நினைத்தஅறியாத குழந்தைதான் அவன்.
தொடர் வாசிப்பை எதன் பொருட்டும்இழந்தவனில்லை. அலைவுறும் தன் திரைப்பட வாழ்வைபணம் தருகிறது என்பதால் மட்டுமே ஏற்றுக்கொண்டவன்.
‘சென்னைக்கு வெளியே ஏதாவதொரு நகரத்து அரசுக் கல்லூரியில் தமிழ் சொல்லிக்கொடுக்கணும்ணே. அதான் என் ஆசை’
முத்துக்குமார் என்ற அக்கவிஞன் பெருங்கனவுகள்எதுவுமற்றவன். கையில் சேரும் பணத்தைக்காக்கைகளுக்கும் பங்கு வைப்பவன். உறவுகள் தொப்புள்கொடியைப் போல அவனைச் சுற்றியிருந்ததைரகசியமாக ரசித்தவன்.
தான் எத்தனை படித்திருக்கிறோம் என்பதைமேடையில் உரத்த வார்த்தைகளில் சொல்லதுணியாதவன். ஒரு குழந்தையின் ஒரு நிமிடஇடுப்பசைவு மட்டுந்தான் அவன் மேடைப்பேச்சு. அதற்குமேலில்லை. குழந்தையின் நடனம் பார்க்க எதிர்பெஞ்சில் வெகுநேரம் உட்கார்ந்திருக்கும் ஒருஅப்பாவுக்கு அது போதும். அது மட்டுமே போதும்.
அப்படித்தான் எங்களிடமிருந்து ஒரு நிமிடஇடைவெளியில், நின்றெரியும் நாடக மேடைவிளக்கொளியைப் போல் எங்கள் நட்சத்திரம் மறைந்தது
Tuesday, 14 August 2018
நா.மு
ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் குழலோடு விளையாடும் காற்றாக உருமாறி
முந்தானை படியேறவா மூச்சோடு குடியேறவா
உன் இடையோடு நடமாடும் உடையாக
நான் மாறி எந்நாளும் சூடேறவா
என் ஜென்மம் ஈடேறவா...
(இசை...)
ஆண்: ஆழியிலே முக்குளிக்கும் அழகே
ஆவியிலே தத்தளிக்கும் அழகே
உன் திம்மென்ற கன்னத்தில்
திம்மென்ற நெஞ்சத்தில் இச்சென்று இதழ் வைக்கவா
இச்சைக்கோர் விலை வைக்கவா
உன் உம் என்ற சொல்லுக்கும் இம்மென்ற சொல்லுக்கும்
இப்போதே தடை வைக்கவா
மவுனத்தை குடி வைக்கவா
(இசை...)
ஆண்: அகம் பாதி முகம் பாதி
நகம் பாயும் சுகம் மீதி
மறைத்தாலும் மறக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அடிவானம் சிவந்தாலும் கொடிப்பூக்கள் பிளந்தாலும்
உனைப் போல இருக்காது அழகே...
அழகே... அழகே... வியக்கும் அழகே....
அழகே... அழகே... வியக்கும் அழகே....
Monday, 13 August 2018
Kavikko
மலரின் நறுமணம் போகுமிடம் - பழநிபாரதி
இங்கே ஒருநாள்
மரணத்தைக் குடித்து
மலரும் ஒரு பூவாக
என்னைக் காண்பீர்கள்
- அப்துல் ரகுமான்
கவிதைக்கு உப்பாக இருந்தவர் கவிக்கோ அப்துல் ரகுமான். கடலுக்குப் பக்கத்தில்தான் அவரது வீடும் இருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையில், பனையூரில் அமைந்த அவரது இல்லத்தில் எங்கள் சந்திப்புகள் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருந்தன. அவருடைய பவளவிழா நினைவாக ‘மகரந்த மழை’ என்று அவர் எழுதிவைத்திருந்த பாடல்களை ஒரு தனி இசைத் தொகுப்பாக ‘தமிழ் அலை’ இசாக் வெளியிட நினைத்தார். அதற்காக அண்ணன் அறிவுமதி, இசையமைப்பாளர் தாஜ்நூர், இசாக், நான் நான்கு பேரும் அவரைச் சந்திக்கப்போயிருந்தோம்.
எப்போது அவரைச் சந்திக்கப் போனாலும் அவரை மட்டும் சந்தித்துவிட்டுத் திரும்பமுடியாது. அவரோடு கலீல் ஜிப்ரான் இருப்பார்; வயலார் இருப்பார்; கண்ணதாசன் இருப்பார்; வட இந்திய இசையமைப்பாளர் நௌஷாத், இளையராஜா, மிர்ஸா காலிப், ஜாவீத் அக்தர், ஓஷோ, ரூமி, எஸ்ரா பவுண்ட் எனப் பலரும் வந்து வந்துபோவார்கள். அத்தகைய உரையாடல்கள் கால எந்திரத்தில் பயணம் செய்வதுபோல இருக்கும். படிமங்களாலேயே அடுக்கப்பட்ட மலையாளக் கவி வயலாரின் பாடலொன்றைத் தனது மடிக்கணினியில் தேர்ந்தெடுத்து ஒலிக்கவிடுவார். அதன் அழகையும் அர்த்தத்தையும் தேவராஜனின் இசையையும் சொல்லிச் சொல்லி எங்களை வெகுதூரம் கூட்டிச் சென்றுவிடுவார்.
வாணியம்பாடியில் அவர் பேராசிரியராகப் பணியாற்றிய 30 ஆண்டுகள் (1961-1991) கவிதைக்கு அணி சேர்த்த காலம். அவரிடம் படித்த மாணவர்களில் பெருங்கூட்டம் கவிதையைக் காதலிக்கத் தொடங்கியது. அப்போது ‘கவி ராத்திரி’ என்று அவர் நடத்திய கவிதைக் கலையரங்கம் குறிப்பிடத்தக்கது. ‘குருட்டுப் பிச்சைக்காரனின் பாத்திரத்தில் விழுந்த செல்லாத காசு’, ‘நீருக்குத் தாகம்’, ‘அந்தி சிவப்பதேன்?’ இப்படிப் புதிய தலைப்புகள், பல சுற்றுகள்கொண்ட புதிதான மேடைக்கவி நிகழ்வு அது. கஸல், கவ்வாலி, முஷைரா போன்ற கவிதையின் பிறமொழி நிகழ்த்துக் கலைகளைக் கவிதைக் காதலர்களுக்கு அறிமுகம் செய்து, தமிழுக்கு அந்தச் சுவையையும் மணத்தையும் அள்ளி அள்ளிக் கொடுத்தவர் அப்துல்ரகுமான். அவரது ஆழ்ந்த கவியுளம் அறிந்து ‘ஜூனியர் விகடன்’ அவருக்கு அளித்த 102 வார இலக்கியத் தொடர், வெகு ஜனங்களை உலக இலக்கியத்தின் அழகுகளை ரசிக்கவைத்தது. உருது, அரபு, சீனம், ஜப்பானியம், ஆங்கிலம், பிரெஞ்சு எனக் கவிக்கோ காட்டிய கவிதையின் திசைகள் வாசகர்களுக்கு ஒரு புதிய தேடலை உண்டாக்கியது.
என் அப்பாவின் நண்பரான அப்துல் ரகுமானை, சிறுவயதில் நான் சந்தித்த சித்திரம் இன்னும் என் நினைவில் நிறம் மாறாமல் இருக்கிறது. வாணியம்பாடியில் இருந்து ஒரு கவியரங்கத்திற்காகச் சென்னைக்கு வந்திருந்தார். தியாகராயர் நகரில் ஒரு விடுதியில் தங்கியிருந்தார். அப்பா என்னை அவருக்கு அறிமுகப்படுத்தினார். பிறகு வந்து கூட்டிச் செல்வதாகப் பக்கத்தில் எங்கோ போயிருந்தார்.
கவிக்கோ என்னுடனான சில வார்த்தைகளுக்குப் பிறகு எழுதுவதில் தீவிரமானார். நான் அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரு கையில் சிகரெட், இன்னொரு கையில் பேனா, இரண்டிலும் நெருப்பு அணையவே இல்லை. எழுதுவதற்காக ஒரே மாதிரி சின்னஞ்சிறியதாக நறுக்கப்பட்ட தாள்கள், முத்துமுத்தான கையெழுத்து, அவர் வேறோர் உலகத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தார். என் அப்பாவிற்குப் பிறகு, எழுதும்போது நான் அருகிருந்து கவனித்த கவிஞர் கவிக்கோதான். அன்று மாலை அந்தக் கவிதையை அவர் மேடையில் பாடியபோது கேட்ட கைத்தட்டல்கள் அவருக்கானதாக மட்டுமே ஒவ்வொரு மேடையிலும் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
மேடைக் கவிதை வாசிப்பில் மக்களை ஈர்க்கும் அப்படியான ஒரு காந்தமொழியை அவர்தான் கட்டமைத்தார் என்றால், அது மிகையல்ல. கம்பன் விழாக் கவியரங்கங்கள் அவருக்குப் பெரும்புகழைப் பெற்றுத் தந்தன. ‘ரகுமான்! கவியரங்கங்களில் நீ எப்போதும் பிறரை வெல்வாய்! இன்று உன்னையே நீ வென்றுவிட்டாய்’ என்று தமிழறிஞர் அ.ச.ஞானசம்பந்தன் புகழ்ந்ததையும் ‘கம்பனுக்குத் தோன்றாத கற்பனைகள் ரகுமானுக்குத் தோன்றுகின்றன’ என்று வாகீசக் கலாநிதி கி.வா.ஜ. வியந்ததையும் இங்கே மேற்கோள் காட்டுவது பொருந்தும்.
அப்துல் ரகுமான் புல்லாங்குழலால் கவிதை எழுதுகிறவர் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன். இது அலங்கார வர்ணனை அல்ல. குழலின் துளைகளில் சிலவற்றை மூடிச் சிலவற்றைத் திறந்தால்தான் கானம். இது ஓர் அழகான முரண். ‘படைப்புக்குத் தேவை இரு முரண்கள். ஆண்மை - பெண்மை என்ற இரு முரண்கள். முரண் வெறும் உத்தியல்ல; அது பிரபஞ்ச ரகசியம். உண்டும் இல்லையும் சேர்ந்ததே முழு உண்மை’ என்கிறார் அப்துல் ரகுமான். வாழ்வின் இந்த முரண்களுக்கிடையில் முழு உண்மையைத் தேடி நடந்த ஒரு யாத்திரைதான் கவிக்கோவின் கவிதைகள். அவருடைய ‘பித்தன்’ தொகுப்பில் பக்கத்திற்குப் பக்கம் முரண்கள் அப்படி முன்னும் பின்னுமாக மோதுவதைப் பார்க்க முடியும். முகமூடிகள் கழன்று விழுகிற சத்தத்தைக் கேட்கமுடியும். தமிழில் இது ஒரு புதுமையான சித்தர் இலக்கியம்.
பித்தன் கடைத்தெருவில் நின்று ‘அனாதையை ஆதரிப்பார் யாருமில்லையா?’ என்று கூவுகிறான்.
‘யார் அந்த அனாதை?’ என்று கேட்கிறார் கவிக்கோ.
‘உண்மை’தான் அந்த அனாதை என்ற பித்தன், “அதை யாருமே அடையாளம் கண்டுகொள்ளவில்லை’ என்கிறான். ‘ஏன்?’ என்கிறார் கவிக்கோ.
‘நெற்றியில்
திருநீறோ நாமமோ
இல்லை;
மார்பில்
சிலுவை இல்லை;
தலையில்
தொப்பியில்லை
அதனால் அதை
யாருமே
அடையாளம் கண்டுகொள்ளவில்லை’
என்கிறான் பித்தன். ‘நீ மட்டும் எப்படி அடையாளம் கண்டுகொண்டாய்’ என்று கேட்கிறார் கவிக்கோ.
‘யாருமே
அடையாளம்
கண்டுகொள்ளாதிலிருந்து
அதைநான்
அடையாளம் கண்டுகொண்டேன்’
என்கிறான் பித்தன்.
அப்துல் ரகுமானின் வார்த்தைகள் சாதி மதமற்ற அமைதியான ஓர் இடத்தைத் தேடி நகர்ந்துகொண்டே இருந்தன. பூமி புன்னகைப் பூக்களால் நிறைந்திருக்க வேண்டும்; வானம் வெள்ளைப் புறாக்களால் விரிந்திருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
திராவிட இயக்க ஈர்ப்பு, பொதுவுடைமை இலட்சியம், தலித்தியம், ஆன்மீகப் பற்று, இறைத் தத்துவம் அனைத்தையும் கொண்டாடினார். ‘ஏனிந்த முரண்பாடு?’ என்று அவரிடம் கேட்கமுடியாது. முரண்பாடுகளுக்கிடையில் வலைவீசி அவர் ஒரு முழு உண்மையைக் கையில் வைத்திருப்பார்.
‘தன்னைத்தானே
உடைத்துக்கொண்ட
கண்ணாடி நான்
இப்போது
நான் என்பது
பன்மை’
என்பார். எப்படி மறுக்க முடியும்? ‘நெருப்புக் காய்களால் சதுரங்கமாடும் விரல்கள்’ என்று தன் கவிதை குறித்து அவர் எழுதிய சொற்றொடர் ஒன்று எனக்கு முன்னால் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது.
‘திரையை எரி - மர்மச்
செய்திகள் தெரியட்டும்
கரையை உடை - தேக்கக்
கனவுகள் ஓடட்டும்
தரையை விடு - வானத்
தத்துவம் விளங்கட்டும்
உரையை முடி - மௌனம்
உண்மைகள் பேசட்டும்’
வார்த்தைகளை அதீதமாகக் காதலித்து, அதீதமாக வெறுத்து, அவற்றின் இயலாமையைப் புரிந்துகொண்ட ஒரு கவிஞனால்தான் இப்படி வாழ்வின் திரையை விலக்கி அதன் சுயதரிசனத்தைக் காட்ட முடியும்.
‘ஞானிகள் செய்ய முடியாததை
விஞ்ஞானி செய்துவிட்டான்
இதோ
நீயே மழித்துக்கொள்கிறாய்;
நீயே துவைத்துக்கொள்கிறாய்;
ஏன்
கழிப்பறையைக்கூட
நீயே கழுவிவிடுகிறாய்
இனி
யாரைப் பார்த்து
‘எட்டி நில்’ என்பாய்?’
கவிக்கோ ஒரு சூஃபியாக விஸ்வரூபமெடுத்துக் கேட்கிற கேள்வி இது. ‘இறைவா உன்னைக் கேட்கிறேன்... நீ இந்துவா முஸ்லிமா?’ என்று கேட்கிற துணிச்சலும் அதனாலேயே அவருக்குள் இருந்தது.
உலகின் மிகச்சிறந்த நூல்களுள் ஒன்றான ‘மிர்தாதின் புத்தகம்’ பற்றி - ‘இதயத்தால் படிக்க வேண்டிய புத்தகம் இது’ என்று ஓஷோ குறிப்பிட்டிருப்பார். அந்த வார்த்தைகளின் நிழல் அப்துல் ரகுமானின் கவிதைகள் மீதும் கவிழ்ந்து பரவி நிற்கிறது.ஆமாம்... இதயத்தால் படிக்கவேண்டிய கவிதைகளையே அப்துல் ரகுமான் எழுதினார். கவிதை என்பது மூளையால் படிக்கவேண்டியது என நினைக்கும் நவீனக் கவிஞர்களின் கண்களை நாம் திறக்க வேண்டியதில்லை. ‘உன் தோட்டத்தில் பூத்திருக்கிறது என்பதற்காக அரளிப் பூவே அழகானது என்கிறாய். வேறு தோட்டத்தில் பூத்திருக்கிறது என்பதற்காக ரோஜாவைப் பூவே இல்லை என்கிறாய்’ என்கிற அவரது வரிகள் அவர்களுக்கு அப்படியே பொருந்தும்.
“அப்துல் ரகுமானோடு உரையாட வாய்ப்பு கிடைத்த ஒருவர், கொஞ்ச நேரத்தில் அவரின் கவிதை குறித்த அறிதல் பரப்பின் அகலத்தையும் புரிதல் குறித்த ஆழத்தையும் எளிதாக உணர்ந்து கொள்ளலாம். ‘கவிதை’ என்ற அந்தப் பேரழகைக் குறித்துத் தவிர வேறு எதையும் தனது உரையாடலில் கலந்துவிட அவர் அனுமதிப்பதில்லை’’ என்று பேராசிரியர் க.பஞ்சாங்கம் சொல்வதைக் கவிக்கோவோடு பழகும் ஒவ்வொரு பொழுதும் நான் உணர்ந்திருக்கிறேன். அதனாலேயே அவர் திரையிசைக்குப் பாடல் எழுத வரவில்லை. இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் இருவரும் அவரை அழைத்தார்கள். அந்த அன்பின் அழைப்பை அதே அன்பின் நெகிழ்வோடு அவர் தவிர்த்தார்.
கவிஞர் முத்துலிங்கத்திற்கு ‘கவிக்கோ விருது’ வழங்கும் விழா சென்னை கவிக்கோ மன்றத்தில் 28.4.2017-ல் நிகழ்ந்தது. விருதை அளித்துச் சிறப்பிப்பதற்காக இசைஞானியை அழைத்திருந்தார் கவிக்கோ.
கவிக்கோவின் கவிதைகள் குறித்து உயர்வாகவும் நெகிழ்வாகவும் உரையாடினார் இளையராஜா. அவரது ‘சுட்டுவிரல்’ தொகுப்பில் உள்ள ஒரு கவிதையின் முதல் நான்கு வரிகளை இரண்டு மெட்டுகளில் இசையமைத்துப் பாடினார். ‘இது அம்மியா சிற்பமா?’ என்று கவிக்கோவைப் பார்த்துக் கேட்டார். பாடல் எழுதுவது குறித்து - ‘அம்மி கொத்தச் சிற்பி எதற்கு?’ என்று கேட்ட அப்துல் ரகுமான், இளையராஜாவின் குரலில் தன் கவிதையைப் பாடலாகக் கேட்டபோது பரவசத்தோடு முகத்தை மட்டும் மேலும் கீழும் அசைத்தார். இருவரும் இணைந்து தமிழுக்குத் தர நினைத்த அந்த முதல் பாடலின் பல்லவி என்னவாக இருக்கும் என்று எழுதாமலேயே எல்லோரையும் யோசிக்கவைத்து மௌனமாகிவிட்டார் கவிக்கோ.
இந்த இடைவெளியில்தான் நண்பர் இயக்குநர் தாமிரா தனது ‘ஆண் தேவதை’ படத்திற்குக் கவிக்கோவின் கவிதையொன்றை இடம்பெறவைக்க விரும்பினார். அதை ஜிப்ரான் இசையமைத்தார். எந்த வார்த்தைகளையும் மாற்றக் கூடாது என்று கட்டளையிட்டிருந்தார் கவிக்கோ.
‘மலரின் நறுமணம் போகுமிடம்
குழலின் பாடல்கள் போகுமிடம்
அணைந்த சுடர்கள் போகுமிடம்
அதுதான் நாமும் போகுமிடம்...’
என்று தொடங்கும் அந்தப் பாடலின் இறுதி வரிகள் இப்படி முடியும்.
‘மதுவும் வண்டும் வேறில்லை
கண்ணீர் புன்னகை வேறில்லை
அதுவும் இதுவும் வேறில்லை
அனைத்தும் ஒன்றே உண்மையிலே’
வரிகளில் மௌனமாகக் கண்ணீர் வழிவதைத் தவிர்க்க முடியவில்லை.
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...