நிஜம் கற்பனையை விட சுவாரஸ்யமானது மட்டுமல்ல கொடூரமானது
Saturday, 29 September 2018
Friday, 28 September 2018
கொடுத்தல்
வேல் முருகன்
காதல் என்னுள்ளே வந்த நேரம் அறியாமல்
நாட்கள் இப்படி ஓடுதே வாழ்வில்
நானும் உன்னுடன் நடக்கிற நேரம் இன்னாளில்
சாலை அத்தனை அழகாய் மாறும்
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
என் சுவாச அறையாகி யெனை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ
(காதல்)
அர்த்தம் இல்லா வீணான வார்த்தைகளை
நான் போசும் வேளையிலும் ரசிப்பாய்
அளவில்லா காதலையும் எந்த சூழலிலும்
நான் கேட்கும் முன்னே தருவாய்
உன் முக தசைகளில் எங்கே வெட்கம் உள்ளதென்று
நீ பேசும் நேரம் எல்லாம் நானும் தேடி பார்ப்பேன்
குளிர் காய்ச்சல் யேதும் வந்தால் உன்னுள்ளே நானும் வந்தால்
மெதுவாய் சரியாய் அது போகாதா
(காதல்)
வாழ்வினிலே உன் மூச்சு தூரத்திலே
உன்னோடு இல்லையென்றால் தவிப்பேன்
வாழும் நாட்களும் ஆயுல் முழுதிலும்
உன் வாசத்திலே பிழைப்பேன்
என் பலம் பலவீனம் எல்லாமும் தெரிந்தாலும்
உன் அன்பு வந்த பின்னே நாளும் மாறிப்போகும்
என் குனம் குனவீனம் உன்னோடு சேர்ந்துவிட்டால்
நலமாய் நலமாய் அது மாறாதா
(காதல்)
என் வீட்டை திடலாக்கி விளையாடும் பறவைப் போல்
மனதினில் உள்ளே வந்தாடுவதாரோரோ
என் சுவாச அறையாகி யென்னை தாங்கும் உடலாகி
உயிர் வாழ கூட்டிச்செல்வது யாரோ
Thursday, 27 September 2018
கபிலன்
CastAshwin Kakumanu, SshivadaMusic DirectorNivas K PrasannaSinger’sAnirudh RavichandharLyricistKabilan
Uyire Un Uyirena Song Lyrics
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Ithamaai Un Idhayathil Kaathirupen Kaname
Kanavai Un Vizhigalai Paarthirupen Dhiname
Mazhaiyai En Manadhinil Nee Vizhundhaai
Vizhundhaai Oar Vidhaiyena Naan Ezhundhen
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Viralukkum Idhazhukkum Piranthidum Isaiyena
Iruvarum Irupom Idam Porul Marappom
Unakena Enakena Mudhal Yedhu Mudivedhu
Yedhuvarai Iruppom Adhuvarai Pirappom
Yaar Nee Yaar Naan
Vaan Nee Meen Naan
Ulagin Kadhavai Thaal Thirappom Uyire
Mazhalai Mozhiyai Magizhnthiruppom
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Uyire Un Uyirena Naan Irupen Anbe
Inimel Un Idhazhinil Naan Siripen
Idhamaai Un Idhayathil Kaathirupen Kaname
Kanavai Un Vizhigalai Paarthirupen Dhiname
Mazhaiyai En Manadhinil Nee Vizhundhaai
Vizhundhaai Oar Vidhaiyena Naan Ezhundhen
Uyire Un Uyirena Song Lyrics In Tamil Font
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
விரலுக்கும் இதழுக்கும் பிறந்திடும் இசையென
இருவரும் இருப்போம் இடம் பொருள் மறப்போம்
உனக்கென எனக்கென முதலெது முடிவெது
எதுவரை இருப்போம் அதுவரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ்திறப்போம் உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன் அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன் கனவே
கனவாய் உன் விழிகளைப் பார்த்திருப்பேன் தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய் ஓர் விதையென நான் எழுந்தேன்
உயிரே
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய் பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான் எழுந்தேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
விரலுக்கும் இதழுக்கும்
பிறந்திட இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்
உனக்கென்ன எனக்கென்ன
முதலேது முடிவேது
எது வரை இருப்போம்
அது வரை பிறப்போம்
யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ் திறப்போம்
உயிரே
மழலை மொழியாய் மகிழ்ந்திருப்போம்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான் இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில் நான் சிரிப்பேன்
இதமாய் உன் இதயத்தில் காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய் பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில் நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான் எழுந்தேன்
Wednesday, 26 September 2018
வைரமுத்து
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிப்போச்சு
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்கத் தேரு தேரு
மேலமாசி வீதி வருது
வயசு கன்னியோ மனசு கடவுளோ
புடவ கட்டிப் போகும் பொல்லாத குழந்தையோ
சிறுத்த இட போல என் உசுரு வாடுது
பெருத்த பணம் போல பிரியமுமோ கூடுது
ஒரு மெல்லிய மேகமா போகுறா
அந்த மீனாட்சி கிளி இவளோ
ஒரு மின்னலின் பிள்ளையா பாக்குறா
நாளை என் தாயின் மருமகளோ
ஏலே ஏலே மருது இவ எந்த ஊரு கருது
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
தரும தேவதை கருணைப் பார்கையில்
சபலம் பறக்குது சரீரம் மறக்குது
ஆண்டு பதினெட்டில் அனைவருக்கும் தாயடி
அன்னை தெரசாவின் பேத்தியும் நீயடி
எந்த பெண்ணோடும் எழுவது காமமே
அடி உன்னோடு தோணலையே
சிறு முந்தாணை மூடிடும் தெய்வமே
உன்ன முத்தாட தோணலையே
ஏலே ஏலே மருது ஹே ஹே
இவ எந்த ஊரு கருது ஹே ஹே ஹே
பாரு பாரு தங்க தேரு தேரு
மேலமாசி வீதி வருது
சுத்தமுள்ள உத்தமி குணத்துக்கு
இந்த மனம் விழுந்தாச்சு
அவ முத்துப்பல்லு தெரியும் சிரிப்புக்கு
மொத்த உசுர் பறிபோச்சு
யாரோ யாரோ ஒருத்தி
முன்ன போறா என்னக் கடத்தி
ஆளக் கொல்லும் அந்த கொள்ளிக் கண்ணில்
உசுரோட என்னக் கொழுத்தி
Movie:
Pandiya Naadu
பாண்டிய நாடு
Music:
D. Imman
Lyrics:
Vairamuthu
Singers:
Sooraj Santhosh
வண்ணதாசன்
*நான் ஒரு எழுத்தாளன் என்பதைவிட சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் மாணவனாகவோ அல்லது பேராசிரியராகவோ இருந்திருக்கக் கூடாதா என எண்ணுகிறேன். இங்கே கவிதை குறித்துப் பேசுவது கோபுரப் புறாக்களுக்கு தானியம் வீசுகிறவனைப் போன்று எனக்குத் தோன்றுகிறது. இளைய மாணவ கவிஞா்களுக்கிடையில் என் கவிதைகளைப் பகிா்வது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.
வேட்டைச் சமூகம் சாா்ந்த நம் தொல்குடியில் பிறந்த குழந்தையைச் சுற்றி அதன் உறவினா்கள் தங்கள் போா்க்கருவிகளை வைப்பது போல, என் தந்தையும் என் சகோதரனும் என்னைச் சுற்றி பேனாவை வைத்து என்னை எழுத வைத்தாா்கள். ஒரு குழந்தை எதிரில் தோன்றும் பொருள்களைத் தம்பால் ஈா்க்கும் தருணத்தில் எப்பொருளைத் தொடுகிறதோ அதிலே சிறந்து விளங்குவது போல எனக்குக் கிடைத்த பேனா, நூல்கள் போன்ற பொருள்கள் தான் என்னைக் கவிஞனாக்கியது.
நான் எழுதிய பதினைந்து கவிதைத் தொகுதிகளில் என் வாழ்வையே நான் முன்வைத்திருக்கிறேன். கருப்பு வளையல் கவிதைக்குப் பின்னால் ஆயிரம் கவிதைகளை நான் எழுதி இருக்கிறேன். ஆனால் அவற்றைச் சொல்கிறவா்கள் அக்கவிதையையே மேற்கோள் காட்டுகிறாா்கள். நீங்கள் எப்போதும் கவிஞா்களைத் தொடா்ந்து கொண்டே இருக்க வேண்டும். இன்னும் ஒருபடி மேலாய் அவா்களைத் தாண்டிச் செல்ல வேண்டும். என் கவிதை வரி உண்மையானது, பாசாங்கற்றது. மத்தியான வெயிலில் அமா்ந்திருக்கும் மீன்கொத்தி போன்றது. என் கவிதையின் மொழி எளியது. பேனா என்னும் ஆறாவது விரலோடு ஐம்பத்தாறு ஆண்டுகளாகத் தொடா்ந்து எழுதி வருகிறேன். கவிஞன் அவனது படைப்புகளோடு தொடரப்படவேண்டும். அந்தச் சுதந்திரத்தை அவன் வாசகா்களுக்குக் கொடுப்பான்.
என்னுடைய கவிதை மொழி பறவையின் மொழியல்ல, பறவை உதிா்த்த சிறகின் மொழி. அது வனத்தின் மொழியல்ல, வீட்டுத் தாவரத்தின் மொழி. அது சா்வதேச மொழியல்ல, என் தெருவின் மொழி. அந்தத் தெருவிலிருந்து தான் எனது கவிதைகள் தோன்றியுள்ளன. என் மொழி பிரபலமானவனின் மொழியல்ல எளிய மனிதா்களின் உண்மையான மொழி. நான் வெளிச்சங்களில் நிற்பவன் இல்லை. என் மொழி, முடிதிருத்தகங்களின் பழைய, காலாவதியான இதழ்களின் மொழி. நெருக்கடி மிகுந்த கடைவீதிகளில் கைக்குட்டை, குடும்ப அட்டைக்கான உறைகளை விற்பவனின் மொழி என் மொழி.
இன்றைய சூழலில் ஆடம்பரங்களை விட எளிமையைப் பத்திரப்படுத்துவதுதான் மிகுந்த சிரமமாக இருக்கிறது. நீ இருக்கும் திசைக்குத் தேடி வராது பூ. நீ தான் பூக்களைத் தேடிச் செல்ல வேண்டும். பூப் பூப்பது அதன் இஷ்டம். போய்ப் பாா்ப்பது உன் இஷ்டம். தேக்கும் பூக்கும் என்று ஒரு கவிதையை எழுதியிருக்கிறேன். இவ்வளவு தானா கவிதை? கவிதை நுட்பமானது. கடிதங்களின் காலம், தபால்காரா்களின் காலம் அநேகமாகக் கடந்து விட்டது. துருப்பிடித்து, சிகப்பு வண்ணம் பூசப்பட்ட அஞ்சல்பெட்டி இன்னும் எங்கள் வீட்டில் வெறுமையாக இருக்கிறது. ஒரு பறவை தன் சிறகை அப்பெட்டிக்குள் கடிதமாகப் போட்டுவிட்டுச் சென்றது. அ முதல் ஃ வரை தெரியும் எனக்கு, ஆகாயம் முழுதும் தெரியும் குருவிக்கு. ஒரு கவிதையை ஒரு கவிஞன் தன் குரலில் தரும்போது வாசகனை அவன் கட்டித் தழுவிக் கொள்கிறான்.
ஒரு யானையை ரசித்துக்கொண்டே மண்புழுவையும் தேடுபவன் தான் கவிஞனாக இருக்கமுடியும். சக மனிதா்கள் மீதான அக்கறையில்லாதவா்கள் படைப்பாளியாக, ஏன் மனிதனாகக் கூட இருக்க முடியாது. மனிதனாக இருக்கவும் கூடாது. மின்னோவியம் என்ற குறும்படங்களின் அமைப்பு மூலமாக மனிதத்தை முன்னெடுத்துச் செல்வதுதான் மாணவா்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும். மனிதத்தைப் பேசுவது தான் படைப்பாளிகளின் வேலை*
Monday, 24 September 2018
தேவதேவன்
”எல்லாவற்றையும் மனிதன் பாவம் அங்குலப்புழுவைப்போல தன்னைவைத்தே அளந்துகொள்கிறான். அவன் எல்லையின்மையைத்தொடும் ஒரு பேராளுமையாக தன்னை கண்டடைந்து கொள்ளாதவரை அவனது பார்வையும் படைப்பும் குறைவுபட்டதாகவே இருக்கிறது”
ஜெ
நெறைய வாசிச்சிருக்கேன் சார், ஒண்ணுமே ஞாபகமில்லை” என்பதைவிட அவர் மூஞ்சியில் துப்புவது மேலும் நாகரீகமானது
முற்றிலும் எதிர்பாராத சந்திப்பு, முன்னர் வாசித்ததும் இல்லை என்றால் நீங்கள் ஒரு வாசகராக அவரிடம் காட்டிக் கொள்ளவே வேண்டாம்...
எழுத்தாளர்களிடம் புத்திசாலித்தனமாக, அறிவார்ந்த முறையில் பேசவேண்டுமென்பதில்லை. நீங்கள் யாரோ அதை இயல்பாக வெளிப்படுத்தினால் போதும். நல்ல எழுத்தாளனிடம் எவரும் தன் அளவைவிட மேலதிகமாக தன்னை காட்டிக்கொள்ள முடியாது. ஐந்து நிமிடங்களில் தெரிந்துவிடும்.
Thursday, 20 September 2018
Tuesday, 11 September 2018
பிரிவு
தொடர்ந்து போன் அடிக்கிறது. தொடர்ந்து அடிக்கிறது என்றால் யாரும் எடுக்கவில்லை என்றுதானே அர்த்தம். மூத்த மகன் சோஃபாவில் படுத்திருக்கிறான். இளையவன் வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கிறான். வயது வந்தவர்கள். அது துபாயிலிருக்கும் தந்தையின் அழைப்பென்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனாலும் எடுக்கவில்லை. வயதான அம்மா நளினி சமையல் அறையிலிருந்து வருகிறார். ”அப்பாவாதான் இருக்கும், நான் தூங்கிட்டேன்னு சொல்லிடு, இல்லைனா பேசிட்டே இருப்பாரு! இங்கே நடந்த எல்லா சின்னச் சின்ன விஷயங்கள் குறித்தும் கேட்பார்” என்கிறான் மூத்தவன். ”நானும் தூங்கிட்டேன்னு சொல்லிடு” என்கிறான் இளையவன். அம்மா போனை எடுக்கிறார்.
எதிர்முனையில் வளைகுடா நாட்டில் ஐம்பது ஆண்டுகளாக உழைத்துக்கொண்டு தனிமையில் வாழ்ந்துவரும் முதிர்ந்த தந்தை நாராயணன். “ஏன் இவ்ளோ நேரம்!?” என்கிறார். சமையலறையில் வேலையில் இருந்ததாகச் சொல்கிறார் நளினி. மகன்கள் குறித்துக் கேட்க, தூங்கிவிட்டதாகப் பொய் சொல்கிறார். ”சாப்பிட்டுட்டுதானே தூங்கினாங்க, என்ன சமைச்சே?” எனக் கேட்கிறார். மகன்களுக்காக கோழிக்கறியும் மீனும் சப்பாத்தியும் புட்டும் சமைத்ததைச் சொல்கிறார். “மொய்தீன் ஊருக்கு வர்றான். எதும் பொருட்கள் வேண்டுமா!?” எனக் கேட்கிறார். திரும்பி மகன்களை ஒருமுறை பார்த்துவிட்டு நிதானித்து சற்று தணிந்த குரலில் “நாள் முழுக்க போட்டிருந்த சட்டையொன்றை துவைக்காமல் அனுப்பி வைங்க” என்கிறார். இது மலையாளத்தில் தேசிய விருது பெற்ற பத்தேமாரி படத்தில் உலுக்கும் ஒரு காட்சி. “எ..ன்...னா நளினி இது!” என்கிற நாராயணனின் கேள்வியோடு அந்தக் காட்சி நிறைவடைகிறது.
Sunday, 9 September 2018
வைரமுத்து
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
புன்னகை சொட்டு புன்னகை என்னை புலவனாய் மாற்றுதே
பூமியும் அந்த வானமும் சின்ன புள்ளியாய் போனதே
கண்களே அந்த கண்களே எந்தன் கற்பினை தீண்டுதே
பூவுக்கும் ஈட்டி வேலுக்கும் இன்று போர்க்களம் மூண்டதே
சில நேரம் வேலும் வெல்லலாம்
பல நேரம் பூவும் வெல்லலாம்
அதுதானே காதல் யுத்தம் அன்பே
வென்றாலும் இனிமை கான்பதும்
தோற்றாலும் பெருமை கான்பதும்
இங்கேதான் காணக்கூடும் அன்பே
ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
பறவைகள் பேசும் மொழிகளை காற்று அறியுமா இல்லையா
கண்களால் பேசும் மொழிகளை காதல் அறியனும் இல்லையா
மலைகளை கட்டி இழுப்பது எனக்கு சுலபம்தான் இல்லையா
மனதிலே உள்ள காதலை இறக்கி வைப்பதே தொல்லையா
போ போ போ என்னும் சொல்லுக்கு
வா வா வா என்று அர்த்தமே
அகராதி இங்கு மாறும் அன்பே
ஆடைக்குள் மூடி நிற்கிறாய்
அது கூட வேறு அர்த்தமா
ஆஹாஹா புரிஞ்சு போச்சு அன்பே
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல பட பட
பேசாத பெண்மை என்னை பேர் சொல்லும்போது கால்கள் தட தட
ஆண் வாடை காற்று என் ஆடைக்குள் மோத பட பட
போர் செய்யும் பார்வை என் நெஞ்சோடு மோத கால்கள் தட தட
ஓ மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
மே மாத மேகம் என்னை நில் என்று சொல்ல
3ஷா
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
Pubblicità
கன்னிப் பெண்ணை கையிலே வயலின் போல ஏந்தியே
வில்லில்லாமல் விரல்களாலே மீட்டுவேன்
இன்பராகம் என்னவென்று காட்டுவேன்
சுடச்சுட சுகங்களை கொடுக்கலாம் என் காதல் தேவதை
தொட தொட சிரிப்பினால் தெளிக்கலாம் என் மீது பூமழை
எங்கெங்கோ எண்ணங்கள் ஓர் ஊர்வலம் போக
கண்கொண்ட உள்ளங்கள் ஓர் ஓவியம் ஆக
ஆனந்தம் ஆனந்தமே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே ரோமியோவின் ஜீலியட் தேவதாஸின் பார்வதி
ரெண்டு பேரும் ஒன்று சேர்ந்த மாதிரி
தோன்றுவாளே நான் விரும்பும் காதலி
அவளது அழகெல்லாம் எழுதிட ஓர் பாஷை இல்லையே
அவளை நான் அடைந்தபின் உயிரின் மேல் ஓர் ஆசை இல்லையே
பூவாடை கொண்டாடும் தாய்பூமியை பார்த்து
சந்தோஷம் கொண்டாடும் என் காதலை பார்த்து
கொண்டாட்டம் கொண்டாட்டமே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அவள் உலக அழகியே... நெஞ்சில் விழுந்த அருவியே
அந்த நீள வெளியிலே... நெஞ்சம் நீந்த துடித்ததே
ஓர் வேரில்லாமல் நீரில்லாமல் கண்ணிரண்டில் காதல் பூத்ததே
ஓர் ஏடில்லாம்ல் எழுத்தில்லாமல் பாடல் ஒன்று பார்வை வார்த்ததே
Tuesday, 4 September 2018
ஓஷோ
எந்த அளவுக்கு பரபரப்பானதாக இருந்தாலும் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வாழ்க்கை என்பது ஒரு மணிநேரத்தில் சொல்லி முடித்துவிடக்கூடியதே
கலாப்ரியா
நூறு பூ தாங்க
எனக் கேட்கும்
குழந்தைக்கு
எண்ணாமல்
பத்துக் கண்ணிகள்
அதிகமாய் விட்டு
நறுக்கித் தரும்
பெண்ணுக்காகப்
பெய்கிறது மழை
பாவண்ணன்
கைக்கு அடக்கமான ஒரு சின்ன சிட்டுக்குருவி தரையிலிருந்து விர்ரென எழுந்து கண்ணைமூடிக் கண்ணைத் திறப்பதற்குள் வானத்தை நோக்கிப் பறந்து வட்டமடித்துவிட்டு, லாவகமாக ஒரு மரக்கிளையிலோ அல்லது ஒரு மதிலின் மீதோ இறங்கி அமர்வதைப் பார்த்து வியப்பில் ஆழ்ந்து போகாத மனமே இருக்க முடியாது.
Monday, 3 September 2018
Saturday, 1 September 2018
Ray Bradbury
தேவாலயத்திற்குப் போவதை விடவும் நூலகத்திற்குப் போவதற்கு அதிகம் விரும்புகிறவன் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கிறார் பிராட்பெரி
Kalyan g
இரண்டு நாட்களாகவே
எந்தக் கடிதமும் இல்லாத
ஏமாற்றம்.
இன்று எப்படியோ
என்று பார்க்கையில்
அசைவற்று இருந்தது
ஒரு சின்னஞ்சிறு
இறகு மட்டும்
எந்தப் பறவை எழுதியிருக்கும்
இந்தக் கடிதத்தை.
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...