Friday, 31 May 2019

Osho

இயற்கையை எதிர்த்து வெற்றி என்பது ஏதுமில்லை.


உண்மையைத் தேட வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். ஆனால், நம்பிக்கைக்கு எதுவும் தேவையில்லை, நீ வெறுமனே நம்பலாம்.


அன்பும் மௌனமும் இசைந்த வாழ்க்கை உண்மையிலேயே மிகவும் வளமான வாழ்வாக இருக்கும்.


முதலில் உன்னை நேசி, பின் நேசத்தை அதிர்வலையாக உன்னிடமிருந்து பரப்பு. இந்த பிரபஞ்சம் முழுமையும் சென்றடையும் வண்ணம் அதை பரப்பு.


தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.


முழுமையாக விழிப்புணர்வோடு வாழும் வாழ்க்கை இறைமை தன்மை கொண்ட வாழ்வாகிறது.


தர்க்கத்தின் மூலம் நீ அளவில் சிறிய மனதை மட்டுமே பெற முடியும். விரிந்து பரவ முடியாது.


நட்புணர்வுக்கு எல்லையே இல்லை, அது ஓர் உறவுமுறை அல்ல. அது உன்னுடைய இயல்பு, குணம், தன்மை.


யாராவது ஒருவரைப் பிடித்து வைத்துக்கொள்வது அவரை நேசிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அழித்துவிடும்.


அன்பிற்குத் தடையாய் இருப்பது போலித்தனமாய் நாம் கடைப்பிடிக்கும் அன்பே.


இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.


நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.


சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.


சாட்சிபாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்கமுடியும்.


பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாகத் தூய்மையாக இருத்தலாகும்.


கடந்த காலத்தைப் பொறுத்தவரை இறந்துவிடு. அப்போதுதான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்க முடியும்.


ஒருவர் இந்தக் கணத்தை முழுமையாக வாழும்போது புத்துணர்வு பிறக்கும்


Thursday, 30 May 2019

பரிசுத்த வாழ்வு

வாழ்வின் மிக அற்பமான விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிப்பதுதான் பரிசுத்த வாழ்வின் ரகசியமாகும்.

--காந்தி

Tuesday, 28 May 2019

பசி

திரும்பத் திரும்ப பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்றியே, நீ திருந்தவே மாட்டியா?” என்று கேட்ட நீதிபதியிடம், எத்தனை முறை பிக்பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டணைய திரும்ப திரும்ப தர்றீங்களே, சட்டத்த எப்பதான் திருத்தப்போறீங்க என்று கேட்டான் மாரியப்பன் என்ற கைதி.


பதிலேதும் சொல்ல முடியாத நீதிபதி தண்டணையை அறிவித்துவிட்டு ஜெயிலரைத் தனியே அழைத்துப் பேசினார்.


அடுத்த நாள் ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த 10 பேரை ஒரு இடத்தில் தனியாக வைத்தார். அவர்களுக்குச் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.


உங்களுக்கு தினமும் இலவச சாப்பாடு கிடையாது. உழைத்து சம்பாதிக்க வேண்டும். தினமும் 200 ரூபாய் சம்பளம். இங்குள்ள கேண்டீனில் டிபன் ஐம்பது ரூபாய், மதிய உணவு 100 ரூபாய் எனச் சொல்ல, மாரியப்பன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். மற்ற 9 திருடர்களையும் ஜெயிலர் தனியே அழைத்து, ஒவ்வொரு நாளும் தினம் ஒருவராக மாரியப்பன் வாங்கும் சம்பளத்தை பிக்பாக்கெட் அடிக்க வேண்டும். வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் உங்கள் 9 பேருக்கும் சாப்பாடு கிடையாது என்று கூறினார்.


அதன்படியே ஒவ்வொரு நாளும் ஆளுக்கொருவராக மாரியப்பனின் பணத்தைத் திருட, கையில் காசில்லாமல் அவனும் பசியால் வாட, ஏதோ அரைக் கவளம், ஒரு வாய் என இரக்கப்பட்டுச் சிறிதளவே உணவு கொடுக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கும் அது வருத்தமளித்தாலும், ஒரு ஆள் பட்டினி கிடைப்பது பெரிதா? 9 பேர் பட்டினி கிடப்பது பெரிதா என்ற நோக்கத்தில் யோசித்து செய்தனர்.


ஒவ்வொரு நாளும் ஜெயிலில் இருக்கும் நாட்களில் பசியின் கொடுமை, வேதனை, வலி மட்டுமல்லாது பிக்பாக்கெட் அடிப்பதால் வரும் இழப்பினையும் கஷ்டத்தையும் மாரியப்பன் உணர்ந்தான். உடனிருக்கும் மற்ற 9 பிக்பாக்கெட் திருடர்களும் உணர்ந்தனர்.


பசியின் வேதனையும் கொடுமையும் உணர்ந்தால் மட்டுமே உணவு வீணாவதைத் தடுக்க முடியும். பட்டினியால் வாடுபவர்களை காக்க முடியும்


Sunday, 26 May 2019

வண்ணதாசன்

நேற்று என்னைக் கொன்றீர்கள்.


அதற்காக


நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?


- வண்ணதாசன்


Friday, 24 May 2019

வண்ணதாசன்

தேவையற்ற இலைகளை உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாகப் பறவைகளும் இருக்கையில்,
-தேவையற்றதெல்லாம் உதிரும் படியாகவே வாழ்வும் இருக்கும்.

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை