இயற்கையை எதிர்த்து வெற்றி என்பது ஏதுமில்லை.
உண்மையைத் தேட வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். ஆனால், நம்பிக்கைக்கு எதுவும் தேவையில்லை, நீ வெறுமனே நம்பலாம்.
அன்பும் மௌனமும் இசைந்த வாழ்க்கை உண்மையிலேயே மிகவும் வளமான வாழ்வாக இருக்கும்.
முதலில் உன்னை நேசி, பின் நேசத்தை அதிர்வலையாக உன்னிடமிருந்து பரப்பு. இந்த பிரபஞ்சம் முழுமையும் சென்றடையும் வண்ணம் அதை பரப்பு.
தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.
முழுமையாக விழிப்புணர்வோடு வாழும் வாழ்க்கை இறைமை தன்மை கொண்ட வாழ்வாகிறது.
தர்க்கத்தின் மூலம் நீ அளவில் சிறிய மனதை மட்டுமே பெற முடியும். விரிந்து பரவ முடியாது.
நட்புணர்வுக்கு எல்லையே இல்லை, அது ஓர் உறவுமுறை அல்ல. அது உன்னுடைய இயல்பு, குணம், தன்மை.
யாராவது ஒருவரைப் பிடித்து வைத்துக்கொள்வது அவரை நேசிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அழித்துவிடும்.
அன்பிற்குத் தடையாய் இருப்பது போலித்தனமாய் நாம் கடைப்பிடிக்கும் அன்பே.
இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.
நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.
சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.
சாட்சிபாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்கமுடியும்.
பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாகத் தூய்மையாக இருத்தலாகும்.
கடந்த காலத்தைப் பொறுத்தவரை இறந்துவிடு. அப்போதுதான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்க முடியும்.
ஒருவர் இந்தக் கணத்தை முழுமையாக வாழும்போது புத்துணர்வு பிறக்கும்
No comments:
Post a Comment