Sunday, 2 June 2019

தாய்மை

முலைக்காம்பை வாயில் வைத்தபடி
தூங்கிப்போகிறது சிசு
திறந்தமார்பிலேயே தூங்கிப்போகிறாள் புதுத்தாய்
இப்படியான தருணங்களில் 
துண்டுத்துணியெடுத்து தோளில் போர்த்திச் செல்கிறான் சகோதரன் 
பிள்ளையை அமத்திக் கொண்டிருக்கிறாள் என்று எல்லோரையும் வாசலோடு 
நிறுத்தி வைப்பார் அவள் தந்தை.
முந்தானை இழுத்துவிட்டு நகர்வான் தலைவன்

ஒரு குழந்தை 
வீட்டிலுள்ள எல்லா ஆண்களையும் 
தாயாக்கி விடுகிறது!

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை