Friday, 29 May 2020

துன்பமும் எழுச்சியும்

வாழ்வின் எந்தத் துயரில் இருந்தும் அல்லது தோல்வியில் இருந்தாலும் ஒருவன் அதனைக் கடந்து எழுச்சி பெற முடியும்

வெற்றி

வெற்றி என்பது வாழ்க்கையில் வந்து போகும் ஒரு வானவில் மட்டுமே. அதுவே வாழ்க்கை அல்ல... எஸ்.ராமகிருஷ்ணன்

Saturday, 23 May 2020

எஸ்.ராமகிருஷ்ணன்

மண்ணை நேசிக்கும் ஒருவன் அதன் வழியே spiritual wisdom ஒன்றினை அடைகிறான், அந்த மெய்ஞானமே அவனது விவசாயத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் அடிப்படையானது, இன்று அது போன்ற  spiritual wisdom அற்றுப்போயவிட்டது, ஆகவே மனிதர்கள் தங்களின் தொழில்சார்ந்து எவ்விதமான ஆத்மஞானத்தையும் பெறுவதில்லை, அதை உள்ளுற நேசிப்பமில்லை,

அன்பு

மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்? *ஜெ

அன்பு

இந்த உலகின் மிகப்பெரிய அற்புதம் அன்புதான்...  I mean compassion 💙
#Jeyamohan

Saturday, 16 May 2020

தோழமை

ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

–அண்ணா

Thursday, 14 May 2020

சிறிய சந்தோஷங்கள்

சிறிய சந்தோஷங்கள் வாழ்வில் ஒரு போதும் மறப்பதேயில்லை # எஸ்.ராமகிருஷ்ணன்

Saturday, 9 May 2020

தேவதேவன் கவிதை

உனக்குச் சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்குச் சூரியன்
உதாரணமாய் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு நண்பனின் முகம்
ஒரு குவளை தண்ணீர்
ஒரு கண்ணாடி
இன்னும்,,,
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக்கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லையெனில்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையெனில்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லையெனில்
ஒரு குவளை தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லையெனில்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகைகொள்ள இயலவில்லையெனில்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்
உணர்ந்துகொள்:
‘நீ இருக்குமிடம் சூர்யமறைவுப் பிரதேசம்!’

Wednesday, 6 May 2020

விதையும் மரமும்

எல்லாக் குழந்தைகளும் ஒரே ஒரு தடவை, ஒரே ஒரு விதையையாவது
அவர்களுடைய கையில் வைத்திருக்க வேண்டும்.  ஒரு விதையை வைத்திருப்பது ஒரு முழு வாழ்வையே வைத்திருப்பது என்பதைப் பின்னர் ஒரு நாள் அக் குழந்தை உணரக் கூடும். அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என, எல்லோரும் ஒன்றாக நிற்பதற்குப் போதுமான நிழலை, அந்த ஒரே ஒரு சின்ன விதை தனக்குள் வைத்திருக்கிறது என்பதை அந்தக் குழந்தை அறியும் எனில், இப்போது நம்முடன் இருக்கும் மரங்கள், இன்னும் ஆனந்தத்துடன் காற்றின் பாடல்களைப் பாடும்.

Tuesday, 5 May 2020

பிரபாகரன் சேரவஞ்சி

இந்த வாழ்வில் எல்லாமே அதிசயங்கள் தான். அதைப் புரிந்துகொள்ள ஒரு மனிதன் எத்தனை நேர்மையாய், சிரத்தையுடன் அதை நோக்கிப் பயணிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனுக்கு அதிசயத்தின் தரிசனம் கிடைப்பது சாத்தியமாகிறது.எதையாவது தீர்க்கமாக நம்புங்கள். எதையாவது தீர்க்கமாக நேசியுங்கள். அது உங்களுக்குக் கைகொடுக்கும். இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வரம். அனுபவியுங்கள் இதை அணுவணுவாய்.

Monday, 4 May 2020

கல்யாண்ஜி கவிதை

ஒரு வானத்தை.

மூடிய அறை
ஒரு பொருட்டல்ல ஓவியனுக்கு.
ஒரு பறவையை வரைகிறான்.
பறந்து அது
ஒரு வானத்தை
உண்டாக்கிவிடுகிறது
உடனடியாக.

கடவுள்

காதலோடு செய்யப்படும் பணி தான் கடவுள்.#கார்த்திக் நேத்தா

Sunday, 3 May 2020

வாழ்வு

இப்படித்தானே நாம் இருக்க வேண்டும், இப்படி இருக்கத் தானே நாம் எல்லாம் வந்திருக்கிறோம். துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியும் எனில், இந்தச் சிரிப்பிலும் அழியும் அல்லவா. இது வெறும் சிரிப்பா?  ஆனந்தமே அல்லவா? எதையும்ஒளித்துவைக்காமல், பொத்திவைக்காமல், எதிராளிக்கு மறைக்காமல் ஒரு காட்டு ஓடையென ஆரவாரமற்று கூழாங்கல் உருட்டிப் பிரவகிக்கும் நீர்மையின்  பளிங்கும்  துல்லியமும் உடைய  இந்த   ஊனமறு    நல்லழகு   எவ்வளவு மடங்குகள்  அருமையானது.

Saturday, 2 May 2020

வண்ணதாசன்

ஒருகனியை முன்னிட்டு இதுவரை எந்த ஒரு  பறவையும் எந்த ஒரு மிருகமும் இதுவரை ஒரு சிறு யுத்தம் கூடச் செய்திராதபடியே தான் காலம் காலமாக எல்லா மரக் கிளைநுனிகளும் காய்த்தும் கனிந்தும்  தன்னைத் திறந்துவைத்திருக்கின்றன.

அணில்கள்

Friday, 1 May 2020

ஸ்டார்ஸ்

கன்னங்கரிய வானத்தில் கண்கூசவைக்கும் அளவுக்கு நட்சத்திரங்கள்

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை