Saturday, 31 March 2018
Friday, 30 March 2018
பாவண்ணன்
அனுபவங்களால் மெல்லமெல்ல பக்குவமடைகிற மனம் மட்டுமே இயற்கையின் பேராற்றலையும் நிரந்தரத் தன்மையையும் உணர்ந்துகொள்கிறது.
பாவண்ணன்
Tuesday, 27 March 2018
Sunday, 25 March 2018
டத்துவம்
கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு இரண்டு பன்றிகள் வாலை ஆட்டிக் கொண்டே வந்தது.
யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது.
அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது.
அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டது.
அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:
"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்."
நீதி : தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள்.
Friday, 23 March 2018
Thursday, 22 March 2018
கணினி மயமும் மனிதமும்
முழுவதுமாக கணினி மயமாக உருவாக்கப்படும் தொழில்நுட்பத் துறையில் எத்தனை சாதனைகளை வேண்டுமென்றாலும் செய்யலாம். ஆனால், அது எப்போதும் மனித வாழ்வியலுடன் நூறு சதவிகிதம் ஒன்று சேராது.
Tuesday, 20 March 2018
Mazhai
(அந்த மழையில்... - கவிதை)
அந்த மழையில்...
“அந்த மழைநாளில்
மிகப்பெரிய ஆச்சர்யமொன்று
நடந்தது.
மொட்டை மாடியில்
காய்ந்த துணிகளை
அவசர அவசரமாக
அள்ளியெடுக்க விரைந்தபோது
அவளைப் பார்க்க நேர்ந்தது.
எதிர் வீட்டின் மொட்டை
மாடியில் இரு கைகளையும்
அகல விரித்தபடி
வானம் பார்த்து
நின்றிருந்தாள்.
அச்சிறுமியை இதற்கு
முன்னும் பார்த்திருக்கிறேன்
இன்றவள் புதிதாய்த் தெரிந்தாள்.
விரித்த இரு கைகளாலும்
ஏந்தி ஏந்தி எறிந்து
கொண்டிருந்தாள் மழைத்துளிகளை.
அவ்வப்போது ஒரு
அரை வட்டமடித்து
மழையின் அனைத்துத்
துளிகளையும்
மேனியெங்கும் வாங்கிக்
குதூகலித்தாள்.
இப்பெரு நகரத்தில்
இது பேராச்சர்யம் எனக்கு...
ஒரு கணம்
அவளாகியிருந்தேன் நான்.
என் பதினைந்து வருடங்களைப்
பின் தள்ளிவிட்டு.
மழை இரைந்துகொண்டே
இருந்தது.
குக்கர் விசில் சத்தம்
என்னைப் பதட்டப்படுத்த
அவசரமாகப் படியிறங்கினேன்.
அவளின் சிறு குழந்தைமையை
எக்கணத்திலும் நிராகரித்துவிடாத
புகுந்தவீடொன்று அமைய வேண்டுமென்ற
அவளுக்கான பிரார்த்தனைகளோடு...”
- இரா.பூபாலன்.
Wednesday, 14 March 2018
கலைஞன்
வாழும் உத்வேகம் எல்லையற்ற புள்ளிவரைக்கும் நீண்டுசெல்லும் அற்புதத்தை நுட்பமாகக் கண்டடைகிறான்... கலைஞன்
Tuesday, 13 March 2018
Monday, 12 March 2018
Naanum rayilum
நகரத்தை அடுத்து
கிராமத்துக்குள்
நுழைந்தது ரயில்...
கான்கிரீட் உலகத்தை
உதறிவிட்டு
கரிசல் பூமிக்குள் நான்.
பச்சை வயல்களில்
நெல் பயிர்களை
காற்று தாலாட்டியது.
அழகான குளம்
சிறுவர்களை
குளிப்பாட்டிக்
கொண்டிருந்தது.
ஆடு, மாடுகள்
தோலுரித்து
கொக்கியில்
தொங்கவில்லை...
புல்வெளியில்
சுதந்திரமாக
அமர்ந்து
அசைப்போட்டுக்
கொண்டிருந்தன.
பச்சை விளக்குக்காக
ரயில் காத்திருக்கையில்
மரக்கிளைகளில்
குருவிகளும்
பறவைகளும்
இளையராஜாவாக
இசைத்துக்கொண்டிருந்தன.
எங்கள் பெட்டியில்
உட்கார்ந்திருந்த
எட்டுப்பேரில்
ஒருவர் தூங்கிக்
கொண்டிருந்தார்.
ஆறுப்பேர்
கைப்பேசியில்
மூழ்கி இருந்தனர்.
நானும் ரயிலும்
ரசித்துக்கொண்டிருந்தோம்
Sunday, 11 March 2018
சகாயம் இ.ஆ.ப
எனக்குச் சுடுகாட்டில் படுக்கப் பயமில்லை. ஆனால், இந்த சுதந்திர நாட்டில் இருப்பதற்குத்தான் பயமாக இருக்கிறது
Thursday, 8 March 2018
Comedy
வாட்ஸப் வடிவேலு

அதாகப்பட்டது நண்பர்களே...
ஆதார் கார்டு இல்லையா... அதாகப்பட்டது... அதாவது அப்படின்னுகூட சொல்லலாம். உஸ்ஸ்... ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பாங்க போலருக்கே..
இவ்வளவு நாள் சிரியாவுக்காக மிஸ்டு கால் கொடுப்போம், மெரினாவில் ஒன்று திரள்வோம்னு சொன்னவங்கல்லாம் எங்க போனாங்கன்னே தெரியல. அதே போலத்தான், பழைய புக்குல வந்த காமெடியெல்லாம் ஒண்ணு திரட்டி எனக்கு 50 ஜோக்குகளை அனுப்பிட்டு ஓடிப்போன ஆள தேடிக்கிட்டு இருக்கேன். சரி உங்களுக்கு நேரமிருந்தா இந்த ஜோக்குகளைப் படித்து (சிரிப்பு வந்தால்) கெக்கே பெக்கெ என்று சிரிச்சுக்கிட்டு இருங்க. நான் அந்த ஆள தேடிட்டு வரேன்.
1. மனைவி: கொஞ்ச நாளைக்கு என்கூடச் சந்தோஷமா இருக்கிற மாதிரி நடிங்க.
கணவன்: ஏன்?
மனைவி: அதைப் பார்த்துட்டுத்தான் கண்ணை மூடுவேன்னு உங்கம்மா அடம் பிடிக்கிறாங்களே.
2. டாக்டர் கோபமா இருக்காரே, ஏன் ?
ஆபரேஷன் தியேட்டர்ல யாரோ உடல் மண்ணுக்கு, உயிர் டாக்டருக்கு-னு எழுதி வெச்சிருக்காங்களாம்.
3. என்னம்மா உங்க கணவர் காணாம போய் இருபது நாள் ஆச்சுன்னு சொல்றீங்க..... ஏன் இவ்வளவு நாள் கழிச்சு வந்து கம்ப்ளைண்ட் பண்றீங்க ?
இன்னிக்குத் தான் சார் அவரோட சம்பள நாள்.
4. தரகரே.. நீங்க பெரிய விஷயத்தை மறைச்சுட்டீங்க.. இப்படி
செய்யலாமா..?
ஏங்க.. என்ன ஆச்சு இப்போ..?
பொண்ணு அஞ்சரை அடி உயரம்னு சொன்னீங்க.. சரி.. மூணு அடி அகலம்னு சொன்னீங்களா..?
5. நிருபர்: நீங்க இருபது வருசமா கட்சியிலே இருக்கீங்க. எம்.பி.க்கு ஏன் நிக்கல்லே...
நடிகை: இருபத்தி ஐந்து வயது ஆனவங்கதான் தேர்தல்லே நிற்கணுமாமே?
6. கணவன் ; சாமி கிட்ட என்ன... மா வேண்டிகிட்ட?
மனைவி ; அடுத்த ஜென்மத்திலும் நீங்க தான் என் புருஷனா வரணும் னு வேண்டிகிட்டேன் ங்க...
நீங்க என்னங்க வேண்டிகிட்டீங்க?
கணவன் ; எனக்கு அடுத்த ஜென்மமே வேணாம் னு வேண்டிகிட்டேன்...
7. உங்க மாமியாருக்கு ஆபரேஷன் பண்ணணும், ரெண்டு லட்சம் ரூபாய் ஆகும்…!
என்ன டாக்டர், கூலிப் படையை விட அதிகமா சொல்றீங்க…!
8. டைரக்டர்: நம்மளோட அடுத்த படம் 100நாள் ஓடணும்....
பவர் ஸ்டார் : இல்லை 500நாள் ஓடணும்...
டைரக்டர்: ஜோக் அடிக்காதிங்க சார் !!
பவர் : ங்கொய்யால! முதல்ல ஜோக் அடிச்சது யாரு நீயா? நானா?..
9. பஸ் சார்ஜ் எவ்வளவு ஏறினாலும் எனக்குக் கவலை இல்லை…
நிஜமாவா?
ஆமாம், செக்கிங் ஏறினால்தான் கவலை..!!!???..
10. என்ன இவ்வளவு சோகமா இருக்கீங்க...
என்னோட வைஃப் ஒரு மாசம் என்கூட பேசமாட்டேன் என்று சொல்லிட்டா.
அதுக்கு நீங்க சந்தோஷம் தானே படணும்...
எப்படிங்க...இன்னையோட அந்த ஒரு மாசம் முடியுதே...
11. எட்டு மணிக்கு மேலே விசிட்டர் யாரும் ஹாஸ்பிட்டல்ல இருக்கக்கூடாது..!
இருந்தா?
அவங்களையும் ‘அட்மிட்’ பண்ணிடுவோம்…!!
12. டாக்டர் ; ஏன் சார்.. எதுக்கு நர்ஸ் கையை தடவிப் பார்த்தீங்களாம்..?
நோயாளி ; நீங்கதானே சொன்னீங்க.. ஊசி போட்ட கையை தடவிக் கொடுங்கன்னு..!
13. ஆபரேஷன் முடிஞ்சு தையல் போடுற நேரத்துலதான் அவரு போலி
டாக்டர்னு தெரிஞ்சுது…!
எப்படி?
தையலை, சாதாரண நூல்ல போடவா. இல்லை மாஞ்சா நூல்ல
போடவான்னு கேட்டாரே..?
14. கிளினிக்கில் எதுக்கு 12 ராசிகளின் பெயர்களை டாக்டர் எழிலன் சார்
எழுதி வெச்சிருக்கிறாரு?
ராசியில்லாத டாக்டர்னு யாரும் சொல்லிடக் கூடாது
பாருங்க, அதான்!
15. நான் என்ன சொன்னாலும், என் மருமகள் ’உங்க வாய்க்கு
சர்க்கரைதான் போடணும் அத்தை’னு சொல்றா !
இதிலே என்ன இருக்கு ?
எனக்கு சர்க்கரை வியாதி இருக்கு !
16. நேத்து நான் என் மனைவியை முட்டி போட வெச்சிட்டேன்!
நிஜமாவா, எப்படி?
அவ என்னை அடிக்க வரும்போது நான் கட்டிலுக்கு அடியிலே போய் ஒளிஞ்சிகிட்டேன்!'...
17. பல்லு எப்படி விழுந்திச்சு ?
அத வேற யாருகிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிரும்னு என் மனைவி சொல்லியிருக்கா டாக்டர்!
18. சொந்த ஊர் எது? ....
அந்த அளவுக்கு வசதி இல்லீங்க....
சொந்த வீடுதான் இருக்கு!
19. காதலி: நம் காதலை ஏன் அப்பாகிட்ட சொல்ல அவசரப்படுத்துறீங்க...?
காதலன்: அப்பதான் உனக்கு வேற இடத்தில் சீக்கிரம் மாப்பிள்ளை பார்ப்பார்.
20. கருமம், கண்றாவியா எப்படித்தான் இத குடிக்கிறீங்களோ? இப்பவாவது புரிஞ்சுக்கிட்டியே, ஏதோ நாங்கள்லாம் ஜாலியா குடிச்சுட்டுருக்கோம்னு நினைத்தாயா?!
21. உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்.
22. டார்லிங், ராத்திரி என்ன டிபன்? (கோபத்துடன் மனைவி) ஒரு டம்ளர் விஷம்!... ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
23. என்னங்க நம்ம கல்யாண நாளைக் கூட மறந்துட்டீங்களே...!! உனக்குத்தான் தெரியுமே... நான் நல்ல விஷயத்தை மறக்க மாட்டேன்னு...
24. ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?.... வீட்ல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
25. கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..
நண்பன்-தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?
கோபு-இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!
26. மாப்பிள்ளை வீட்டார்: பொண்ணு புடிச்சிருந்தா தான் சாப்பிடுவோம்.
பெண் வீட்டார்: பொண்ணு புடிச்சிருக்குன்னு சொன்னாதான் சமையலே ஆரம்பிப்போம்..!
27. நோயாளி-"ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
டாக்டர்-"ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
28. ராமு : முதலாளி.. எனக்கு கல்யாணமாயிருச்சு.. கொஞ்சம் சம்பளத்தை சேர்த்துக் கொடுங்க..
முதலாளி : கம்பெனி வளாகத்துக்கு வெளியே நடக்கற விபத்துகளுக்கு நான் நஷ்ட ஈடு தர இயலாது..!
29. நண்பனுக்கும், நல்ல நண்பனுக்கும் என்ன வேறுபாடு..?
நீங்க உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் இருந்தா,
நண்பன் சொல்லுவான்,, " சீக்கிரம் குணமடைஞ்சு வீட்டுக்கு வரணும்டா..!
நல்ல நண்பன் சொல்லுவான்.. " நர்ஸ் டக்கரா இருக்கா மாப்ளே.. கொஞ்சம் ஆற அமர டிஸ்சார்ஜ் ஆவு..!
30. வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
31. நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?
டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடையாது... பீஸ் வாங்குவேன்...
32. கணவன் : ச்சீய்! காப்பியாடி இது? நாய்கூட இதை குடிக்காதுடி.
மனைவி : ஆமாங்க! அதனாலதான் நம்ம நாய்க்கு ஹார்லிக்ஸ் போட்டு வச்சுருக்கேன்.
கணவன் : ????!!!!
33. நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
34. நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது
சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்
35. நோயாளி : என்ன டாக்டர் இது, மருந்து சீட்டில் சா-வுக்கு முன், சா-வுக்கு பின் அப்படினு போட்டிருக்கீங்க.
டாக்டர் : அதுக்கு ஏன் இப்படிப் பதற்றீங்க! சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் அப்படின்னு எழுதியிருக்கேன்.
36. ஆசையே துன்பத்துக்குக்காரணம்னு இப்பதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்
எப்படி?
என் மனைவியை நான் ஆசைப்பட்டுத்தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
37. பையன்-அம்மா எதிர் வீட்டு ஆண்டி பேரு என்னம்மா?
அம்மா-விமலாடா..
பையன்-அப்பாவுக்கு இது கூட தெரிய மாட்டேங்குதம்மா அந்த ஆண்டிய "டார்லிங்"னு கூப்பிடுறார்.
38. டாக்டர்-"சாரிங்க, நான் எவ்வளவோ போராடிப் பார்த்தேன், பேஷண்ட்டை காப்பாத்த முடியலை."
நர்ஸ்-"டாக்டர் உளராதீங்க, நீங்க செஞ்சிட்டு வர்றது போஸ்ட்மார்ட்டம்!"
39. வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
40. வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.
நம்மவர் : வரணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.
41. தலைவர்-என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது?
தொண்டர்-ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..
42. "எங்க வீட்டு நாயைக் காணோம் சார்..." "அடையாளம் சொல்லுங்க..." "அது கோபமா குரைக்கும் பொழுது, என்னோட மாமியார் மாதிரியே இருக்கும்.......!"
43. "என்னை, பெண் பார்க்க வந்தன்னிக்கு, நீங்க டிபனை தொடவே இல்லையே ஏன்?" "ரெண்டாவது 'ஷாக்' எதுக்குன்னு, தான்..!"
44. நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" "போடா நான் பத்திரமா பீரோ பின்னாடி போய் நின்னுக்கிட்டேன்.
45. என்னதான் ஒருவன் குண்டா இருந்தாலும் அவனை துப்பாக்கிக்குள்ள போட முடியாது.
46. நண்பன்-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
நண்பன்1-இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
47. பக்கத்துவீட்டுகாரர்-வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே?
ராமு-மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா.
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.
48. மனைவி : என்னங்க செத்துட்டா சொர்க்கத்துல கணவன் மனைவி தனியாத்தான் இருகனுமாம்ல..............
கணவன் : அதனால தாண்டி அது சொர்க்கம் ...........!
மனைவி . . . . ????
49. பூச்சி night walking போச்சு .
ஒரு பூச்சிக்கு ரொம்ப குளிரிச்சு ,
இன்னொரு
பூச்சிக்கு குளிர்ல ,Why?
அது "கம்பளி பூச்சி "
எப்புடி !!! ??????? நாங்கெல்லாம் பூச்சிக்கே காட்சிக் காட்டுவோம்ல.
50. ஒருவன்: டேய்! ஏன்டா ஃபேனை ஆப் பண்ணிட்ட?
மற்றொருவன்: எங்கப்பாதான் சொல்லி இருக்காரு,
வியர்வை சிந்தி சாப்பிடணும்னு
Monday, 5 March 2018
நேசிப்பு
உங்களுடைய அன்னையை, சகோதரியை, தோழியை இன்னமும் ஆழமாக, தெளிவாகப் புரிந்துகொள்கிறபோது அவர்களை மென்மேலும் நேசிக்க முடியும்.
Saturday, 3 March 2018
நா.மு
Movie Name:Paiyaa
Song Name:Thuli thuli thuli
Singer:Haricharan
Music Director:Yuvan Shankar Raja
Lyricist:Na.Muthukumar
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
பார்த்தால் பார்க்க தோன்றும்
பேரை கேட்க தோன்றும்
பூப்போல் சிரிக்கும் பொது
காற்றாய் பறந்திட தோன்றும்
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா .
அழகாய் மனதை பறித்து விட்டாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
தேவதை அவளொரு தேவதை
அழகிய பூமுகம் காணவே
ஆயுள் தான் போதுமோ
காற்றிலே அவளது வாசனை
அவளிடம் யோசனை கேட்டு தான்
பூக்களும் பூக்குமோ
நெற்றி மேலே ஒற்றை முடி ஆடும்போது
நெஞ்சுக்குள்ளே மின்னல் பூக்கும்
பார்வை ஆளை தூக்கும்
கன்னம் பார்த்தால் முத்தங்களால்
தீண்ட தோன்றும்
பாதம் ரெண்டும் பார்க்கும் போது
கொலுசாய் மாற தோன்றும்
அழகாய் மனதை பரிதுவிட்டாலே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
சாலையில் அழகிய மாலையில்
அவளுடன் போகவே ஏங்குவேன்
தோள்களில் சாயுவேன் பூமியில் விழுகிற வேளையில்
நிழலையும் ஓடிப்போய் ஏந்துவேன் நெஞ்சிலே தாங்குவேன்
காணும் போதே கண்ணால் என்னை கட்டி போட்டாள்
காயம் இன்றி வெட்டி போட்டாள்
உயிரை ஏதோ செய்தாள்
மெளனமாக உள்ளுக்குள்ளே பேசும்போதும்
அங்கே வந்து ஒட்டு கேட்டால்
கனவில் கூச்சல் போட்டாள்
அழகாய் மனதை பறித்து விட்டாளே
செல் செல் அவளுடன் செல்
என்றே கால்கள் சொல்லுதடா
சொல் சொல் அவளுடன் சொல்
என்றே நெஞ்சம் கொல்லுதடா
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
துளி துளி துளி மழையாய் வந்தாளே
சுட சுட சுட மறைந்தே போனாளே
Friday, 2 March 2018
திருமணமும் காமமும்...
கற்பு என்ற புனிதக் கற்பிதத்தின் பெயரில் பத்மாவதி என்னும் அரசி, மற்ற பெண்களுடன் சேர்ந்து நெருப்புக்குப் பலியானதைக் கொண்டாடுகிற இந்த நாட்டில்தான் நிர்பயா கொடூரங்கள் இன்னமும் தொடர்கின்றன. நிர்பயா பற்றிப் பரவலாகப் பேசப்பட்டபோது, அவருக்கு நீதி கோரியவர்கள் நாள்தோறும் நாட்டின் பல பகுதிகளிலும் அமுதாக்கள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளையும் படுகொலைகளையும் எதிர்த்துக் குரல் கொடுப்பதில்லையே ஏன் என்ற நியாயமான கேள்வி எழுந்தது. இந்தப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், ஏதோ தீப்பெட்டியில் தீக்குச்சி உரசப்படுவது போன்று இயல்பானதொரு நிகழ்வாகக் கடக்கப்படுவது கலாசாரப் பெருமிதங்களின் போலித்தனத்தைக் காட்டுகிறது.
ஆயினும், நாடு தழுவிய போராட்டங்களுக்கு மட்டுமல்லாமல் விரிவான விவாதங்களுக்கும் நிர்பயா இட்டுச்சென்றது உண்மை. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஜே.எஸ்.வர்மா தலைமையில் ஒரு குழு அமைத்தது. அதன் பரிந்துரைகள் அடிப்படையில் சில புதிய விதிகளைக் கொண்டுவந்தது உள்ளிட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டாக வேண்டிய கட்டாயங்களை நிர்பயா ஏற்படுத்தியதும் மறுக்கவியலாதது.
வன்புணர்வுக் குற்றத்துக்கு மரண தண்டனை வழங்கப்பட வேண்டும், சிறார் என்பதற்கான வயது வரம்பு 18 என்றிருப்பதை 16 எனக் குறைக்க வேண்டும், வன்புணர்வுக் குற்றவாளியின் ஆண்மையை நீக்க வேண்டும் என்றெல்லாம் வர்மா குழுவுக்கு ஆலோசனைகள் வந்தன. குற்றங்களைத் தடுக்க வேண்டும் என்பதைவிட, குற்றவாளிகள்மீது ஏற்படும் உடனடி ஆவேச உணர்வுகளைத் தணிக்க மட்டுமே உதவக்கூடிய இப்படிப்பட்ட ஆலோசனைகளை நீதிபதி வர்மா குழு ஏற்கவில்லை.
மண உறவில் வன்புணர்வு
மற்றொரு முக்கியமான ஆலோசனையை ஏற்றுக்கொண்ட வர்மா குழு, அதைத் தனது பரிந்துரையாகவும் அளித்தது. ஆனால், அதை அன்றைய மன்மோகன் சிங் அரசு ஏற்கவில்லை. அப்படியொரு சட்டத் திருத்தம் கொண்டுவர இன்றைய நரேந்திர மோடி அரசும் தயாராக இல்லை. திருமண உறவில் வன்புணர்வு தண்டனைக்குரிய குற்றச் செயலாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதே அந்தப் பரிந்துரை.
அந்தப் பரிந்துரை ஏற்கப்படாததற்கான காரணம் ஊகிக்க முடியாததல்ல. ஆணாதிக்கக் கட்டமைப்பில் ஒரு பெரிய விரிசலை ஏற்படுத்தக்கூடிய சட்டத் திருத்தத்துக்கான பரிந்துரை அது. பெருநகரம், நகரம், கிராமம் என்ற வேறுபாடில்லாமல், பணக்காரர், நடுத்தரம், ஏழை என்ற பாகுபாடில்லாமல், அந்தச் சாதி, இந்தச் சாதி, அந்த மதம், இந்த மதம் என்ற மாறுபாடில்லாமல் ஆதிக்கம் செலுத்துவதல்லவா `ஆண்மை’? அதிலே ஒரு `கர்வபங்கம்’ ஏற்பட ஏற்பாடு செய்வது தங்கள் தலையில் தாங்களே மண்ணை வாரிப்போட்டுக்கொள்கிற வேலை என்று அதிகாரம் மட்டுமே அரசியல் இலக்காகக்கொண்டவர்கள் எச்சரிக்கையோடு இருப்பதில் வியப்பில்லை.
கட்டிலறையில் நிலைநாட்டப்படும் ஆணாதிக்கம்
சமுதாயத்தின் சாதியாதிக்கக் கட்டமைப்புக்கான ஆதாரத்தளங்களில் ஒன்று கோயில் கருவறை. அதேபோல் ஆணாதிக்கக் கட்டமைப்புக்கான ஆதாரத்தளங்களில் ஒன்றுதான் கட்டிலறை. கட்டிலறையே ஒரு மாளிகை போலக் கட்டப்பட்டிருக்கிற கூடமாகட்டும், கட்டிலே இல்லாத பாய்த் தரையாகட்டும் அது சமத்துவம் உலாவும் இடமாக இல்லையே! மண வாழ்க்கையின் முக்கியக் கூறாகிய உடலுறவில் ஆணின் ஆதிக்கம்தான் காலகாலமாக நிறுவப்பட்டுவந்திருக்கிறது.
படுக்கையில் பெண்தான் ஆளுமை செலுத்துகிறாள், பெண்ணின் முன்னால் அப்போது ஆண் மண்டியிட்டுவிடுகிறான் என்பதாகவெல்லாம் கற்பனைக் கவிதைகள் நிறையப் புழங்கிவந்துள்ளன. விதிவிலக்காக இப்படிப்பட்ட நிகழ்வுகள் சில அங்கும் இங்குமாக இருக்கலாம். ஆனால், விதிவிலக்கு ஒருபோதும் பொது விதியாகாது.
உடலின் பாலியல் வேட்கை இயற்கையானது. அதில் பாலின வேறுபாடு எதுவுமில்லை. ஆனால், ஆணுக்கு எந்த நேரத்தில், எந்தச் சூழலில் அந்த உந்துதல் ஏற்பட்டாலும் அதற்கு இணங்க வேண்டியது பெண்ணின் இல்லறக் கடமையாக்கப்பட்டிருக்கிறது. வெளியே அலைந்து திரிந்து, பொருளாதாரப் போட்டிகளில் முனைந்து, குடும்பத்துக்காக உழைத்துக் களைத்து வருகிறான் என்ற தகுதி, படுக்கையில் சாய்ந்ததும் அவன் தன் வேட்கையை வெளிப்படுத்தக்கூட வேண்டியதில்லை, இணையாளின் ஒப்புதலையே இணக்கத்தையோ கோர வேண்டியதில்லை என்ற அதிகாரத்தைத் தருகிறது. நேரடியாக அவன் செயல்படத் தொடங்கலாம். அதில் எவ்வளவு மூர்க்கத்தையும் காட்டலாம். அப்படிச் செயல்படுவது ஆண்மையின் ஓர் இலக்கணம்.
இதுவே, பெண் தனது இயற்கையான வேட்கையை வெளிப்படுத்தினால், போதுமான அளவுக்கு எதிர்பார்த்தால், உடற்பசிக்கு அலைகிறவள் என்ற பட்டம் மாட்டப்படும். பல்வேறு வலிகளின் விளைவாகப் பெண் மணமுறிவு கோரும் நிலை ஏற்படுகிறது என்றால், அவளுடைய மற்ற வலிகளை மறைத்துவிட்டு, அவளுடைய உடற்பசியை உற்றவனால் தணிக்க முடியவில்லை என்பதால் வெளியேறுகிறாள் என்ற செய்தி பரப்பப்படும். உண்மையாகவே அப்படியோர் உடற்பசி இருந்தால், அந்தப் பசியாற்றும் உணவு கிடைக்காதபோது பெண்ணின் ஏக்கத்தில் உள்ள நியாயத்தை யாரும் பேசுவதில்லை. அந்த ஏக்கத்தை அடக்கிக்கொண்டு வாழ்ந்தால் உத்தமி மகுடம் அணிவிக்கப்படும்.
வாரிசின் விளைநிலம் மட்டும்தானா பெண்?
ஆனால், ஆணின் பசியாற்றுகிறவளாக பெண் தன்னை எப்போதும் தயாராக வைத்திருக்க வேண்டும். அது, குடும்ப ஆலோசனைகளாக மட்டுமல்ல; சமூக அறிவுரைகளாகவும் புகட்டப்பட்டு வந்திருக்கிறது. அச்சம், நாணம், மடம் என்ற இலக்கண வரிசையில் கடைசியாக வரும் பயிர்ப்பு என்பதன் பொருள் கணவனின் வாரிசைப் பெற்றுத்தரும் விளைநிலமாக, அவனது உடல் வெப்பத்தைத் தணிக்கும் குளிர் நீராகப் பெண் தன்னைத் தகுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான். இவ்வாறு கற்றுக்கொடுத்து அடுத்தடுத்த பெண்களைத் தயார் செய்வது பெண்களின் மூலமாகவே நடத்தப்படுகிறது. பாலியல் உறவிலும் ஆணாதிக்கத்தின் வெற்றி இப்படிப் பெண்ணின் மூலமாகப் போதிப்பதில்தான் இருக்கிறது.
தப்பித்தவறி யாராவது இப்படிப்பட்ட குடும்பப் பாலியல் ஒடுக்குமுறையில் தலையிட்டு, இது நியாயமா என்று கேட்டுவிட்டால், “உனக்கும் அவளுக்கும் என்ன சம்பந்தம்?” என்று கேட்டுக் கொச்சைப்படுத்திவிட்டு, “என் பெண்டாட்டி நான் எப்போது நாடினாலும் ஒத்துழைக்கத்தான் வேண்டும். அதற்குத்தானே திருமண உறவு” என்ற நியதியை எடுத்துச் சொல்வார்கள். இது, தலையிட வந்தவர்களை வாயடைக்கச் செய்வதற்காக மட்டுமல்ல’ மனைவிக்கு உணர்த்தி ஒழுங்குபடுத்துவதற்காகவும்தான்.
ஆறுதல் தரும் தீர்ப்பு
இப்படியான குடும்ப யதார்த்தங்களின் பின்னணியில்தான், நீதிபதி வர்மா குழுவின் பரிந்துரையை மத்திய ஆட்சியாளர்கள் புறக்கணித்திருக்கும் நிலைமையில்தான், டெல்லி குடும்ப நீதிமன்றம், தற்போதுள்ள சட்டங்களின் துணையுடனேயே அருமையானதொரு தீர்ப்பை அளித்திருக்கிறது. திருமணமாகி 16 ஆண்டுகளுக்குப் பிறகு மணமுறிவு கோரி வழக்குத் தொடுத்திருக்கிறார் ஒரு கணவர். பாலியல் உறவுக்கு மனைவி ஒத்துழைக்கவில்லை, தன்னிடம் கொடூரமான முறையில் நடந்துகொண்டார் என்பது குற்றச்சாட்டு. உண்மையில், மனைவியின் மனநிலை, உடல்நிலை இரண்டையும் பொருட்படுத்தாமல் உடலுறவுக்குக் கட்டாயப்படுத்துவது, அதற்காக வன்முறைகளைப் பயன்படுத்துவது, வாழ்க்கையை நாசமாக்கிவிடுவதாக அச்சுறுத்துவது உள்ளிட்ட அத்துமீறல்களைச் செய்தவர் கணவர்தான். அதற்கான உரிமம் – அவர் ஆண் என்பதும் அவர்களுக்குக் கல்யாணமாகிவிட்டது என்பதும்தான். மற்ற பல பெண்களைப் போலவே, தங்கள் பெண் குழந்தையின் எதிர்கால நலன் கருதிப் பொறுமையாக இருந்த மனைவி, பத்தாண்டுகளுக்கு முன்பாகத்தான், தனது சகோதரரிடம் தொடர்புகொண்டு வீட்டில் நடக்கிற கொடுமைகள் பற்றி எடுத்துச் சொல்லியிருக்கிறார். பின்னர் குடும்பத்தினர், நண்பர்கள் ஒத்துழைப்புடன் கணவரின் துன்புறுத்தல்களைத் தட்டிக்கேட்கத் தொடங்கினார்,
இதையெல்லாம் ஆதாரங்களுடன் அவர் நிறுவியதைத் தொடர்ந்து, கணவரின் மனுவைத் தள்ளுபடி செய்தார் முதன்மை நீதிபதி தர்மேஷ் சர்மா. இனி, அந்தக் கணவரை வேண்டாம் என்று தள்ளுவது பெண்ணின் உரிமை. அந்தத் தீர்ப்பில் அவர் கூறிய கருத்துகள் முக்கியமானவை... நாடு முழுவதும் நீதிமன்றங்களில் மட்டுமல்லாமல் மக்கள் மன்றங்களிலும் எடுத்தாளப்பட வேண்டியவை.
“திருமண வாழ்க்கை என்பதில் பாலியல் உறவும் உள்ளார்ந்ததாக இருக்கிறது என்பது உண்மைதான். பாலியல் உறவற்ற திருமண வாழ்க்கை ஒரு சாபக்கேடு என்று சொல்லப்படுகிறது. ஆனால், திருமணம் ஒரு சட்டபூர்வ பாலியல் நுகர்வு ஒப்பந்தம் அல்ல. மனைவியின் ஒப்புதல் அல்லது ஏற்பு இல்லாமல் பாலியல் உறவு கொள்ளக் கணவன் கட்டாயப்படுத்துவதற்குக் கணவனுக்குத் தங்கு தடையற்ற உரிமை உண்டு என்பதல்ல திருமணத்தின் பொருள். திருமணத்தால் மனைவியை வலுக்கட்டாயப்படுத்துகிற மேலாதிக்க நிலை கணவனுக்குக் கிடைக்கிறது என்றாகிவிடாது. மனைவியின் உடலுக்கும் மனசுக்கும் ஆன்மாவுக்கும் நலக்கேடு ஏற்படுத்தும் வகையில் கணவன் பாலியல் உறவுக்கு வற்புறுத்த முடியாது” என்று அந்தத் தீர்ப்பில் எழுதப்பட்டுள்ளது.
பாலியல் உரிமைப் பிரச்சினையில் பெண்கள் இதுவரையில் சந்தித்துவந்துள்ள அவமதிப்புகள், விருப்பமில்லாமல் இணங்க வேண்டிய கட்டாயங்கள், ரசனையோடு ஈடுபடும் இயற்கையான சுகம் மறுக்கப்படும் வன்மங்கள் ஆகியவற்றை அறிந்தவர்கள் இது சாதாரணமான தீர்ப்பல்ல, பெண்கள் சாதித்து நிலைநாட்டுவதற்குத் துணையாக வந்துள்ள நீதி என ஏற்றுக்கொள்வார்கள்.
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...