கனவுக்கும் எதார்த்தத்துக்கும் இடையிலான இடைவெளியைக் கடந்து செல்ல ஏதோ ஒரு நுண்ணறிவு தேவைப்படுகிறது.
Thursday, 31 May 2018
Wednesday, 30 May 2018
ஓஷோ
‘ஏசுவின் போதனைகளைப் பின்பற்றுவதைவிட, ஏசுவாக வாழ முயற்சி செய்யவேண்டும்’ என்பது ஓஷோவின் புகழ்பெற்ற வரி.
Tuesday, 29 May 2018
Su.Ra
வாழ்வுக்கும் நமக்கும், காலத்திற்கும் நமக்கும், மொழிக்கும் நமக்கும் இடையேயான உறவுகளைச் செழுமைப்படுத்துவது ஒரு கலைஞனின் முக்கியமான பங்களிப்பாக இருக்க முடியும். சுந்தர ராமசாமியின் சிறுகதைகள் இதைப் பெருமளவில் நிறைவாகச் செய்திருக்கின்றன.
அவருடைய பிறந்தநாள் இன்று...மே 30
Monday, 28 May 2018
தவளை
தவளை
நீங்கள் நிறுத்தக்கூட தேவையில்லை.
அது உங்களால் இயலாத காரியம்.
விரைந்து செல்லும் உங்கள் காலச்சக்கரம்
வேறு கதியில் சுழல்கிறது.
ஆனால்
ஒரே ஒரு மந்திர கணம்
நீங்கள் தயங்கினால் போதும்
நான் தப்பித்துக் கொள்வேன்.
இதோ
ஒரே ஒரு தாவல்தான்
தவளை நான் பிழைத்திருப்பேன்.
(வேணு வேட்ராயன்)
குழந்தை
Friday, 25 May 2018
கவிதை
ஒரு மேஜை. அதன் மேல் உணவுப்பொருட்கள் இருக்கின்றன. ஆடைகள் இருக்கின்றன. வண்ணப்பாத்திரங்களும் மின்னணுச்சாதனங்களும் இருக்கின்றன. இன்னும் நாம் அன்றாட வாழ்க்கையில் புழங்கும் ஏதேதோ பொருட்கள் இருக்கின்றன. அந்த மேஜையில் ஒரு வைரம் கொண்டு வந்து வைக்கப்பட்டால் என்ன நிகழும்? அந்த அத்தனை பொருட்களும் வைரத்தாலேயே மதிப்பிடப்படும். ஒரு வைரத்தின் மதிப்பில் எத்தனை சதவீதம் அந்தப்பொருட்கள் பெறும் என்பதே நம் எண்ணமாக இருக்கும்.
வைரம் எந்தப் பயன்மதிப்பும் அற்றது. வெறும் ஒரு கல். ஆனால் அத்தனை பயன்பொருட்களையும் மதிப்பிடும் ஒன்றாக அது தன் அழகால் தன்னை ஆக்கிக்கொண்டிருக்கிறது. அதுவே கவிதை. உலகியலுக்கு முற்றிலும் அப்பாற்பட்ட அழகு அது. நம் உலகியலின் மதிப்பு என்ன என்று நமக்குக் காட்டித்தருவது என்பதே அதன் ஒரே உலகியல் மதிப்பு.
படித்தது
மனிதனால் உயிருள்ள ஒரு புழுவைக்கூட செயற்கையாக உருவாக்க முடியாது. ஆனால், கடவுள்களை உருவாக்கிக்கொண்டே இருப்பான்....
அ.முத்துலிங்கம்
ஓர் இரவு உண்ணாமல் படுத்துத் தூங்கிவிட்டேன் என்பதற்காக நடு இரவில் என்னை எழுப்பி உணவூட்டிய பக்கத்து வீட்டு அன்னம்மா ஆச்சியை எப்படி மறப்பது...அ.முத்துலிங்கம்
Monday, 21 May 2018
வைரமுத்து
படம் : காலமெல்லாம் காதல் வாழ்க
இசை : தேவா
பாடியவர் : ஹரிஹரன்
பாடலாசிரியர் : வைரமுத்து
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
பாடினால் அந்த பாடலின் ஸ்வரம் நீயடியோ
தேடினால் விழி ஈரமாவதும் ஏனடியோ
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
வாசம் மட்டும் வீசும் பூவே
வண்ணம் கொஞ்சம் காட்டுவாயா
தென்றல் போல எங்கும் உன்னைத் தேடுகிறேன்
நான் தேடுகிறேன்
தேடி உன்னைப் பார்த்துப் பார்த்து
கண்கள் ரெண்டும் வேர்த்து வேர்த்து
சிந்தும் விழி நீரில் நானே மூழ்குகிறேன்
நான் மூழ்குகிறேன்
வீசிடும் புயல் காற்றிலே நான் ஒற்றை சிறகானேன்
காதலின் சுடும் தீயிலே நான் எரியும் விறகானேன்
மேடைதோறும் பாடல் தந்த வான்மதியே
ஜீவன் போகும் முன்பு வந்தால் நிம்மதியே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
ஒ... ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
உந்தன் முகம் பார்த்த பின்னே
கண்ணிழந்து போவதென்றால்
கண் ரெண்டும் நானிழப்பேன் இப்போதே
நான் இப்போதே
உந்தன் முகம் பார்க்கும் முன்னே
நான் மறைந்து போவதென்றால்
கண்கள் மட்டும் அப்பொழுதும் மூடாதே
இமை மூடாதே
காதலே என் காதலே எனை காணிக்கை தந்துவிட்டேன்
சோதனை இனி தேவையா சுடும் மூச்சினில் வெந்து விட்டேன்
காதல் என்னும் சாபம் தந்த தேவதையே
காணலாமோ ராகம் நின்று போவதையே
போதும் கண்ணே நீ நடத்தும் நாடகமே
தூங்கும் போதும் தூங்கவில்லை உன் ஞாபகமே
ஒரு மணி அடித்தால் கண்ணே உன் ஞாபகம்
டெலிபோன் குயிலே வேண்டும் உன் தரிசனம்
Sunday, 20 May 2018
Thursday, 17 May 2018
கவிதை
மழலையுடனான பயணம்
ஒரு முழு வாழ்வின்
ஜென்ம பிரயாசைகளை
மீட்டெடுத்துத் தருவது
பேருந்தின் முன்னால் அமர்ந்திருக்கும்
குழுந்தையின் பிரதியுபகாரமெனவும் கொள்ளலாம்.
அப்படித்தான் அக்குழந்தை என்னை வழிநடத்துகிறது
உருண்டு திரண்ட விழியில்
கழிந்து போகும் நிமிடங்களின் வனப்புகளை
பச்சைப் பசேலென்ற சமவெளியாய்
ஜன்னலுக்கருகாமையில் இறைத்து நிரப்புகிறது.
எத்துணை அரிய வெளிக்காட்சியனைத்தும்
காற்றில் படபடத்துப் போகும்
மழலையின் மயிர்க் கற்றைகளில்
முட்டி மோதி தாழ்ந்து வீழும் அத்தருணம்
ஒரு வரலாற்றுப் பேழையின்
பக்கங்களை ஒத்தது.
ஒரு குழந்தையாகவே அக்குழந்தையை
நான் பாவித்துக்கொண்டிருக்கையில்
அது என்னை ஒரு குழந்தையாகவோ
அல்லது மிருகக்காட்சி சாலையின்
கை கால் முளைத்த ஒரு ஜந்துவாகவோ
உருவகிக்க எத்தனித்து இருக்கலாம்.
இன்னுமின்னும் தன் சிறு கரம் நீட்டி
என்னை அது ஏதோ உணர்த்த முயலும் வேளை
அரைகுறை புரிதல்களிலேயே
என் இருப்பிடம் நோக்கி
என்னை
எறிந்துவிட்டுச் செல்கிறது
வாழ்க்கை.
Sunday, 13 May 2018
தாய்மை
பொது இடத்தில் குழந்தையின் பசிக்கு தாயானவள் மார் திறக்கையில்..
வேறுபக்கம் திரும்பும் ஆண்களின் கண்களுக்கு தாய்மை என்று பெயர்.
Mother's Day
என்னைக்கு தமிழ் நாட்டுல முதியோர் இல்லம் இல்லாம போகுதோ அன்னைக்குத்தான் அன்னையர் தினம் கொண்டாடுறதுல அர்த்தமிருக்கும்.
Saturday, 12 May 2018
பாடல்
தூரத்து காதல்
ஓஒ என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும்
உன் மெய் முத்தம் போல அல்ல
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே கேப்பாயா
என் கை கோர்ப்பாயா
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
காலத்தை கொஞ்சம்
ஹேய் பின் நோக்கி ஓட சொல்லு
வேகங்கள் வேண்டாம்
ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே கேப்பாயா
என் கை கோர்ப்பாயா
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று
தெரியாத ஊரில் நடப்போமே இன்று
நமக்கு பிடிக்கா கலைகள் ரசித்து
வேதியல் இயற்பியல் கணிதம் படித்து
விழியில் சுடர் ஆட
ஒலி நாட பாட
உன் விழியில் நானும்
என் வாழ்க்கையினை தேட
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே
விண்மீன்கள் எண்ணி துயில்வோமா பெண்ணே
கொட்டும் அருவியில் கட்டிக்கொண்டே குளிப்போம்
நீர் வாழை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம்
குறும்பார்வை வேண்டும்
குறும்ச்செய்தி அல்ல
கை பேசி வீசி
நாம் கை வீசி செல்ல
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
ஓ ஓஹ் காதலி
நீ என்னோடு வா உலவிரவு
தூரத்து காதல்
ஹேய் என் கோப்பை தேநீர் அல்ல
மின் முத்தம் ஏதும்
உன் மெய் முத்தம் போல அல்ல
நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே கேப்பாயா
என் கை கோர்ப்பாயா
என் கை கோர்ப்பாயா
என் கை கோர்ப்பாயா
என் கை கோர்ப்பாயா
Singer : Karthik
Lyrics : Madhan Karky
Music : Karthik
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...