Saturday, 12 May 2018

பாடல்

தூரத்து காதல்
ஓஒ என் கோப்பை தேநீர் அல்ல

மின் முத்தம் ஏதும்
உன் மெய் முத்தம் போல அல்ல

நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே கேப்பாயா
என் கை கோர்ப்பாயா

ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு 
ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு

காலத்தை கொஞ்சம்
ஹேய் பின் நோக்கி ஓட சொல்லு

வேகங்கள் வேண்டாம்
ஹே பெண்ணே நீ கொஞ்சம் நில்லு

நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே கேப்பாயா
என் கை கோர்ப்பாயா

ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு 
ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு

பேருந்தில் ஏறி பெருந்தூரம் சென்று
தெரியாத ஊரில் நடப்போமே இன்று
நமக்கு பிடிக்கா கலைகள் ரசித்து
வேதியல் இயற்பியல் கணிதம் படித்து

விழியில் சுடர் ஆட
ஒலி நாட பாட
உன் விழியில் நானும்
என் வாழ்க்கையினை தேட

ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு 
ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு

கூடாரம் போட்டு குளிர் காய்ந்த பின்னே 
விண்மீன்கள் எண்ணி துயில்வோமா பெண்ணே
கொட்டும் அருவியில் கட்டிக்கொண்டே குளிப்போம்
நீர் வாழை பிடித்து தீயில் வாட்டி சமைப்போம்

குறும்பார்வை வேண்டும் 
குறும்ச்செய்தி அல்ல
கை பேசி வீசி
நாம் கை வீசி செல்ல

ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு 
ஓ ஓஹ் காதலி 
நீ என்னோடு வா உலவிரவு

தூரத்து காதல்
ஹேய் என் கோப்பை தேநீர் அல்ல

மின் முத்தம் ஏதும் 
உன் மெய் முத்தம் போல அல்ல

நேரில் நீ நிற்பாயா
என் ஆசை எல்லாமே கேப்பாயா
என் கை கோர்ப்பாயா
என் கை கோர்ப்பாயா
என் கை கோர்ப்பாயா
என் கை கோர்ப்பாயா

Singer : Karthik 

Lyrics : Madhan Karky

Music : Karthik

 

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை