Tuesday, 30 January 2018

குழந்தைகள்

“திறந்திருக்கும் கேட் வழியாக

வேகமாக தெருவுக்கு வரும் பந்து...

தெரு வழியாக செல்லும்

எனது இரு சக்கர வாகனத்தின்

வேகத்தை உடனே குறைக்க

வைக்கிறது...

பந்துக்கு பின்னாலே

ஒரு குழந்தை வேகமாக

ஓடி வருமென்று..!”

Es.Ra

சந்தேகத்தின் நிழல்!

‘ஒருவரது வீட்டுக்குள் சந்தேகம் நுழையும் போது சந்தோஷம் வெளியேறிப் போய் விடும்’என்பார்கள். சந்தேகம் என்பது தீர்க்க முடியாத மன வியாதி; சமூகத்தில் வேகமாக பரவி வரும் விஷக் கிருமி!

உண்மையை மறைப்பதே சந்தேகத்தின் தோற்றுவாய். உண்மையை அறிந்துகொள்ள சந்தேகம் தேவைப்படுகிறது. அரசும் அதிகாரமும் தங்களை ஏமாற்றுகிறது என மக்கள் சந்தேகம் கொள்வது தவறில்லை. சுயலாபங்களுக்காக வணிக நிறுவனங்கள் மோசடி செய்கின்றன என்று சாமானியன் சந்தேகப்படுவது தவறில்லை. நீதி மறுக்கப்படும்போதும், உரிமைகள் பறிக்கப்படும்போதும் அதிகாரத்தை சந்தேகம் கொள்ளவேண்டியது இயற்கையே. ஆனால், குடும்ப உறவுகளை சந்தேகப்படுவதும்,வீண்சந்தேகத்தின்பேரில் தன்னை வதைத்துக்கொள்வதும்,கண்டிக்கவும் களையவும் வேண்டிய விஷயம்!

கவிஞர் தஞ்சை என்.ராமையாதாஸ் ஒரு பாடலில் ‘தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்; அதற்கு சந்தர்ப்பம் சூழ்நிலை தாய் தந்தையாகும்’ என்கிறார். மிகச் சரியான விளக்கம் அது.

இந்திய வரலாற்றில் சந்தேகத்தின்பேரில் கொல்லப் பட்டவர்கள் ஏராளம். அதில், சிலரே வஞ்சகர்கள். பெரும்பாலும் அப்பாவிகளே சந்தேகத்தின்பேரில் துரோகிகளாக சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். காலம் கடந்து உண்மை வெளிப்பட்டபோதும் அவர்கள் மீது படிந்த கறை நீங்குவதில்லை.

ஷேக்ஸ்பியரின் ஒத்தல்லோவை சந்தேகத்தின் உருவமாகச் சொல்வார்கள். அவன் மனைவி டெஸ்டிமோனாவைச் சந்தேகம்கொண்டு கொன்றுவிடுகிறான். முடிவில்,அவள் அப்பாவி எனத் தெரியவருகிறது. ஒத்தல்லோவிடம் இருந்து உலகம் பாடம் கற்றுக் கொள்ளவில்லை. மாறாக, ஊருக்கு ஒரு ஒத்தல்லோ உருவாகி வருகிறார்கள்.

இன்று, எத்தனையோ குடும்பங்கள் சந்தேகத்தால் பிரிந்து, நீதிமன்ற வாசல்களில் நிற்கின்றன. சமூக ஊடகங்கள் அதுவும் ஃபேஸ்புக் போன்றவற்றின் வளர்ச்சி சந்தேகத்தின் வேகத்தை அதிகமாக்கிவிட்டது. ஃபேஸ்புக்கில் தனது மனைவி அல்லது காதலி தனக்குத் தெரியாமல் யாருடனோ பேசிப் பழகிவருகிறாள் என்ற சந்தேகம் ஆண்கள் பலருக்கு இருக்கிறது. இதுபோலவே கணவன் அல்லது காதலன் யாருடனோ ரகசியமாகப் பழகுவதாக நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள். இரண்டிலும் சந்தேகப்பட வேண்டிய காரியங்கள் நடக்கவும் செய்கின்றன. ஆனால் எது நிஜம் என்று அறியாமல்,சந்தேகத்தின் விஷம் ஒருவருக்குள் ஆழமாக இறங்கி வன்கொலையில் போய் முடிகிறது என்பதே துயரம்.

ஸ்பை கேமரா, ஸ்பை ரெக்கார்டர் போன்றவை இன்று அதிகமாக விற்பனையாகின்றன. இவற்றை வாங்கிப் பயன்படுத்துகிறவர்கள் துப்பறியும் நிபுணர்கள் இல்லை;சந்தேகவாதிகளே. பரஸ்பர நம்பிக்கைகள் தகர்ந்துவருவதும்;வீட்டுக்குள்ளாக ஒருவரையொருவர் ஏமாற்றி வாழமுடியும் என்ற கள்ளத்தனம் உருவானதும், அறம் அழிந்துபோன சமூகச் செயல்களுமே சந்தேகத்துக்கான முக்கிய காரணங்கள்!

‘ஒரு சொட்டு சந்தேகம் போதும் ஒருவரின் வாழ்க்கை நரகமாக!’என்கிறது துருக்கி கதை. பாக்தாத் நகரில் மாறாத அன்பு கொண்ட இரண்டு சகோதரர்கள் இருந்தார்கள். இருவரும் ஒன்றாகவே கடை நடத்தினார்கள். சகோதரிகளை திருமணம் செய்துகொண்டிருந்தார்கள். ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் அன்பைக் கண்டு வியக்காதவர்களே கிடையாது. சந்தையில் அவர்கள் நடந்து போகும்போது ‘அண்ணன், தம்பி என்றால் இப்படித்தான் வாழ வேண்டும்!’ என்று அடையாளம் காட்டுவார்கள். அவ்வளவு சிறப்பான மனிதர்களாக வாழ்ந்தார்கள்.

ஒருநாள் அண்ணன் கடையை மூடும்போது தங்கக் காதணி ஒன்றைப் பார்த்தான். அது தன் மனைவியின் காதணி. இது எப்படி கடைக்குள் வந்தது என்று யோசித்தான். தம்பியிடம் இதைப் பற்றி கேட்கலாம் என நினைத்தான். ஆனால், கேட்கவில்லை.

மாறாக தம்பி மீது சந்தேகம் கொள்ளத் தொடங்கினான். ஒவ்வொரு நாளும் தம்பி உச்சிவேளையில் யாருக்கும் தெரியாமல் வெளியே போவதும்,சற்று நேரத்தில் அமைதியாக வந்து வேலையைத் தொடர்வதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் அதிகமானது.

அது போலவே ஓர் இரவு தன் மனைவியிடம் தம்பி ஏதோ பேசிக் கொண்டிருப்பதும், அவள் ரகசியமாக எதையோ தருவதையும் கண்ட அண்ணனுக்கு சந்தேகம் உறுதியானது, அன்று முதல் அவன் தம்பியைக் கண்டாலே எரிந்துவிழத் தொடங்கினான். மனைவியைக் காரணம் இல்லாமல் அடித்தான். தம்பியோ அண்ணனின் கோபத்தை தாங்கிக் கொண்டான். அண்ணன் ஏன் இப்படி நடந்துகொள்கிறான் எனப் புரியாமல் தவித்தான் தம்பி.

அண்ணன் தானாக கற்பனை செய்ய ஆரம்பித்தான். தம்பி தன்னை ஏமாற்றி பணம் சேர்க்கிறான். தன் மனைவியோடு கள்ளத்தனமாகப் பழகுகிறான். தனது பிள்ளைகள் அவனுக்கு பிறந்தவையாக இருக்கக்கூடும். முடிவில் ஒருநாள் தன்னை கொன்றுவிட்டு சொத்தை முழுவதுமாக அபகரிக்க தம்பி திட்டம் போடுகிறான் என அண்ணன் நினைத்தான். இந்தக் கவலை அவனை வாட்டியது. உறக்கம் இல்லாமல் தவிக்க வைத்தது.

முடிவில் ஒருநாள் தான் வணிகத்தின் பொருட்டு வெளியூர் போய்வருவதாகக் கூறிவிட்டு உள்ளுரிலே ரகசியமாக தங்கிக் கொண்டான் அண்ணன். தான் இல்லாத நேரத்தில் தம்பி ரகசியமாக ஒரு வீட்டுக்குப் போய் பணம் தருவதையும், தன் மனைவி யாருக்கும் தெரியாமல் உணவு கொண்டுவந்து தருவதையும் கண்டு கொதித்துப் போனான். கடையை மூடிவிட்டு தம்பி திரும்பி வரும்போது, அவனை மறைந்திருந்து கொலை செய்துவிட்டு, தன் மனைவியைக் கொல்ல வீட்டுக்குப் போனான்.

மனைவி உறங்கிக் கொண்டிருந்தாள். அவளை வாளால் வெட்டி துண்டிக்கப்போகும்போது அவள் 'ஏன் என்னைக் கொல்கிறீர்கள்?அந்தக் காரணத்தை மட்டும் சொல்லுங்கள்' எனக் கதறினாள். அண்ணன் நடந்த விஷயங்களைக் கூறினான். அதற்கு மனைவி 'என் காதணியை உங்கள் சிறிய மகன்தான் எடுத்து உங்கள் சட்டைப் பையில் போட்டிருக்கிறான். அதைக் காணவில்லை என்று தேடிக் கொண்டிருந்தேன். உங்களுக்குத் தெரிந்தால் கோபம் கொள்வீர்களோ எனச் சொல்லவில்லை' என்றாள்.

‘பொய் சொல்லாதே. என் தம்பி ரகசியமாக வெளியே போவதும். நீ அவனுடன் இரவில் பேசுவதும்,அவனுக்கு சாப்பாடு தருவதும் சல்லாபம் இல்லையா?’ எனக் கத்தினான். அதற்கு அவள் சொன்னாள்: 'உங்கள் தம்பி குடற்புண்ணால் அவதிப்படுகிறார். அதற்கு வைத்தியம் பார்த்து வந்தார். இந்த விஷயம் தெரிந்தால் நீங்கள் வருத்தப்படுவீர்கள். தம்பியை ஒய்வெடுக்கச் சொல்லிவிட்டு கடைவேலையை நீங்களே பார்ப்பீர்கள் என நினைத்து அதை மறைத்துவிட்டார். அவர் மனைவிக்கு பத்தியச் சாப்பாடு செய்யத் தெரியாது என்பதால் நான் தயாரித்துக் கொடுத்தேன். உங்கள் சந்தேகம் உங்கள் மீது மாறாத அன்பு வைத்த சகோதரனைக் கொன்றுவிட்டது. இப்போது உங்களுக்காகவே வாழ்ந்து வரும் என்னை கொல்லத் துடிக்கிறது. வாருங்கள்… என் தலையைத் துண்டியுங்கள்!' என அழுதாள்.

‘உண்மையை உணர்ந்த வணிகன் தன் சந்தேகம் எவ்வளவு முட்டாள்தனமானது என உணர்ந்து அதே வாளால் தன்னை வெட்டி சாய்த்துக்கொண்டான்’ என கதை முடிகிறது.

சந்தேகத்தின் விளைவுகளைப் பற்றி இப்படி ஆயிரமாயிரம் கதைகள் உலகெங்கும் இருக்கின்றன. ஆனால், இன்றும் படித்தவர் பாமரர் எனப் பேதமின்றி மனிதர்கள் சந்தேகத்துக்கு பலியாகி வருகிறார்கள் என்பது வருத்தத்துக்குரிய விஷயமாகவே உள்ளது!

- எஸ்.ராமகிருஷ்ணன் (தி இந்து, 16.05.2017

Saturday, 27 January 2018

காதலும் காமமும்

காதல் கடல் மாதிரி.
காமம் அதில் சிறுதுளி தான். இவை நன்கு விளங்குமாயின் பெரும்பாலான காதல் முறிவுகள் இருக்காது.

Friday, 26 January 2018

Kamal

நேற்றையும் இன்றையும் ஆய்ந்து அறிந்தால் நாளை நமதே!

பார்த்ததைப் பயின்றதைப் பழகி நடந்தால் நாளை நமதே!

நிலவும் நீரும் பொதுவெனப் புரிந்தால் நாளை நமதே!

எனக்கே எனக்கென முந்தாதிருந்தால் நாளை நமதே!

மூத்தோர் கடமையை இளையோர் செய்தால் நாளை நமதே!

அனைவரும் கூடித் தேரை இழுத்தால் நாளை நமதே!

சலியா மனதுடன் உழைத்து மகிழ்ந்தால் நாளை நமதே!

முனைபவர் கூட்டம் பெருகியும்விட்டால் நாளை என்பது நமதே! நமதே!

கிராமியமே நமது தேசியம் என்றால் நாளை நமதே! நிச்சயம் நமதே!

தமிழர் தமிழால் இணைக்கப்பட்டால் நாளை நமதே! நிச்சயம் நமதே!

Wednesday, 24 January 2018

நா.மு

படம்: நீ தானே என் பொன்வசந்தம் - 2012

பாடல் : சாய்ந்து சாய்ந்து

இசை : இளையராஜா

வரிகள் : நா. முத்துக்குமார்

பாடியவர்கள்: யுவன் ஷங்கர் ராஜா, ரம்யா

---------

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது,
சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே..!
விழியோடு விழி பேச, விறலொடு விரல் பேச,
அடடா வேறு என்ன பேச....

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே ஹே..!

என் தாயை போல ஒரு பெண்ணை தேடி,
உன்னை கண்டு கொண்டேன் ஓ..!
என் தந்தை தோழன் ஒன்றான ஆண்-ஐ நான் கண்டு கொண்டேன்,
அழகான உந்தன் மாகோளம் அதை கேட்கும் எந்தன் வாசல்,
காலம் வந்து வந்து கோலமிடும் உன் கண்ணை பார்த்தாலே,
முன் ஜென்மம் போவேனே அங்கே நீயும் நானும் நாம்...

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே ஹே..!

கை வீசி காற்றில் நீ பேசும் அழகில்,மெய்யாகும் பொய்யும் ...
என் மார்பில் வீசும், உன் கூந்தல் வாசம் ஏதேதோ செய்யும்,
என் வீட்டில் வரும் உன் பாதம் எந்நாளும் இது போதும்,
இன்னும் இன்னும் என்ன தொலைதுராத்தில்,
ஆள் யாரும் பார்க்காமல் தடயங்கள் இல்லாமல்,
அன்பால் உன்னை நானும் கொள்வேன்..

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே..!
விழியோடு விழி பேச விறலொடு விரல் பேச,
அடடா வேறு என்ன பேச,

சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும் போது அடடா ஹே..!
சேர்ந்து சேர்ந்து நிழல் போகும் போது அடடா ஹே ஹே ஹே..!

கவித

வெள்ளைக் காகிதம் நானடி.
வண்ண ஓவியம் நீயடி.

Sunday, 21 January 2018

நா.மு

படம்: வெயில்
இசை: G.V.பிரகாஷ்
பாடல்: நா. முத்துக்குமார்
பாடியவர்: திப்பு, பிரசன்னா, ஜாஸி கிஃப்ட், கைலாஷ் கெர்

வெயிலோடு விளையாடி
வெயிலோடு உறவாடி
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம் போட்டோமே

நண்டூரும் நரி ஊரும்
கருவேலங் காட்டோரம்
தட்டானைச் சுத்தி சுத்தி
வட்டம் போட்டோமே

பசி வந்தா குருவி முட்டை
தண்ணிக்கு தேவன் குட்டை
பறிப்போமே சோளத்தடடை
புழுதி தான் நம்ம சட்டை
(வெயிலோடு)

வேப்பங்கொட்டை அடிச்சு வந்த ரத்தம் ரசிச்சோம்
வத்திக்குச்சி அடுக்கி கணக்கு பாடம் படிச்சோம்
தண்ணியில்லா ஆத்தில் கிட்டிப்புல்லு அடிச்சோம்
தண்டவாளம் மேல காசை வச்சு தொலச்சோம்

அஞ்சு பைசா ஃபிலிமை வாங்கி அப்பாவோட வேட்டியிலே
கண்ணாடி லென்சை வச்சு சினிமா காமிச்சோம்
அண்ணாச்சி கடையில தான் எண்ணெயில தீக்குளிச்ச
பரோட்டாக்கு பாதி சொத்தை நாம அழிச்சோம்

பொட்டல் காட்டில் பொழுதெல்லாம்
ஓட்டம் போட்டு திரிஞ்சோம்
வெயிலத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)

வெண்ணிலவை வேட்டையாடி வீட்டில் அடைச்சோம்
பொன்வண்டை கொட்டாங்குச்சி சிறையில் வளர்த்தோம்
காந்தத்தை மண்ணுல தேய்ச்சு பேயை ஆட்டுனோம்
ரெக்கார்டு டான்சு பார்க்க மீசை ஒட்டனோம்

ஊமத்தம் பூவை மாத்தி கல்யாணம் தான் கட்டிக்குவோம்
கழுதை மேல ஊர்வலமா ஊரை சுத்துனோம்
எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்
அப்ப நாங்க மின்னலுல போட்டோ புடிச்சோம்

தொப்புள்கொடியைப் போலத்தான்
இந்த ஊரை உணர்ந்தோம்
வெயிலைத் தவிர வாழ்க்கையில
வேற என்ன அறிஞ்சோம்
(வெயிலோடு)

“You are not alone in your struggle.”

தாமரை

ஏனோ ஏனோ பனித்துளி பனித்துளிப் பெண்மேலே
தேனோ பாலோ எரியுது எரியுது தீப்போலே
மேலும் உள்ளம் உருகுது உருகுது தன்னாலே
கண்கள் பார்க்கும் போதே நெஞ்சுக்குள்ளேப் போனாய் நீ போனாய்
என் நெஞ்சம் என்ன மெத்தைதானா 
கூறாய் நீ கூறாய் உனை பூட்டிக் கொண்டாயே
வாராய் நீ வாராய் இனி என்னைவிட்டு எங்கும் செல்ல மாட்டாய்
மாட்டாய் மாட்டாயே
(ஏனோ..)

மௌனம் என்னும் சட்டை வீசி என்னைக் கீராதே
மாலைத்தென்றல் பட்டால் கூட காயம் ஆறாதே
அக்கம் பக்கம் யாரும் இல்லை வா என் பக்கம்
தேடல் கொஞ்சம் கூடல் கொஞ்சம் நீ யார் பக்கம்
ஏதோ ஒன்று என்னைத் தள்ள
நதிகளின் ஓரம் நாணல் போலே சாய்ந்தேன்
உன்னை மட்டும் எண்ணி எண்ணி
நிலவைப்போலே நீ இல்லாமல் தேய்ந்தேன் ஓ..
(ஏனோ..)

நானும் நீயும் பேசும்போது தென்றல் வந்ததே
பேசிப்போட்ட வார்த்தையெல்லாம் அள்ளிச்சென்றதே
சேலை ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி வந்தாயா
சேதி நல்ல சேதி சொன்னால் வேண்டாம் என்பாயா
திரும்பிய பக்கம் எல்லாம் நீதான் நின்றாய்
காற்றைப்போலே தொட்டு தொட்டு
தினசரி வாழ்வில் மாற்றம் செய்தே சென்றாய்
ஹோ ஹோ
(ஏனோ..)

படம்: ஆதவன்
எழுதியவர் : தாமரை
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: Shail Hada, சுதா ரகுநாதன், ஆண்ட்ரியா

ஆசைகள்.

ஆசைகள் ஆயிரம் எனக்குள் இருக்கு.
அதையெல்லாம் பேசிட நேரம் ஒதுக்கு..

கவித

உன் கண்கள் ஆயிரம் பொய் சொல்லும் அன்பே அன்பே.
அது தெரிந்தும் என் மனம் தலையாட்டும் அன்பே அன்பே.

பாவண்ணன்

எனக்கென இரகசியங்களை புதைத்து வைத்திருக்கின்றது காலைத் தென்றல்...

Saturday, 20 January 2018

இருவரிக் கவிதையைப் போலே
நினைவிலே நிற்கிறாய் அழகியத் தீயே..

Friday, 19 January 2018

பழித்தல்

“ஒழுக்க சீலரைகொடியவன் ஒருவன் பழிப்பது வானத்தைப்பார்த்து ஒருவன் எச்சிலைத் துப்புவதுபோன்றதாகும். எச்சில் ஒருபோதும்ஆகாயத்தைக் களங்கப்படுத்துவதில்லை. மாறாக, துப்பியவனையே அது களங்கப்படுத்தும்” 

தாமரை

இரவுகளில் இரவுகளில் 
முதல் முறையாய் ஏங்குகிறேன் 
நிலவொளியில் உனை நினைத்து
துளித் துளியாய் தூங்குகிறேன்
போதும் வேதனை பெண்ணே உன்னை
இப்போதே பார்த்தாக வேண்டும்
பொங்கும் காதலை சொல்லும் வரை 
காற்றோடு காற்றாக வேண்டும்

அருகினிலே உன் அருகினிலே
முதல் முறையாய் ஏங்குகிறேன்
நிலவொளியில் உனை நினைத்து
துளித் துளியாய் தூங்குகிறேன் 

This is a bluesy song
You got bluey eyes
வேண்டும் வேண்டும் நீ
But I don't hypnotize
I will pay the price
நமக்கு நேரம் right
Oh right right right
நீ எந்தன் lover girl
உன்னோடு i wanna dance
நீ எந்தன் icy swirl
என்னோடு why don't u dance
உன் கண்கள் என்னைக் கவர்ந்து
ஓ து து து கொல்லுதே

ஒரு சொல் நீ சொன்னால் 
வேண்டாம் என்றா சொல்வேன்
நீ கேட்கும் ஒன்றை 
வாங்க எங்கும் செல்வேன்
விடை வேண்டாமலே கேள்வி நான் கேட்கிறேன்
பதில் வந்தாலுமே வாங்காமல் போகிறேன்

ஓ கழுத்து சங்கிலியில் என் பெயரை 
எழுதி நீ கோர்க்கணும்
துடிக்கும் உன் இதயம் பேசுவதை 
அருகில் நான் கேட்கணும்
நெருங்கி நான் வருகிறேன்
விரும்பியே கரைகிறேன்

போதும் வேதனை பெண்ணே உன்னை 
இப்போதே பார்த்தாக வேண்டும் 
பொங்கும் காதலை சொல்லும் வரை 
காற்றோடு காற்றாக வேண்டும் 

இரவுகளில் இரவுகளில் 
முதல் முறையாய் ஏங்குகிறேன் 
நிலவொளியில் உனை நினைத்து
துளித் துளியாய் தூங்குகிறேன்
#தாமரை

தாமரை

முகம்பார்த்து பேசும் உன்னை, முதற்காதல் சொல்லும் கண்ணை, அணைக்காமல் போவேனோ ஆருயிரே....தாமரை...(முன்தினம் பார்த்தேனே பாடல் வரிகள்) எவ்ளோ பரிசுத்தமான வார்த்தைகளால் வர்ணிக்கப்படுகிறது பாருங்க..
:)

நா.மு

எனக்கு மிகவும் பிடித்த பாடலாசிரியர் நா.முத்துக்குமார்(நா.மு).. இவரோட வரிகள் அனைத்தையுமே மனதிற்கு மிக நெருக்கமாக உணர்கிறேன்... ஒரு நல்ல படைப்பாளியை நாம் தவறவிட்டுவிட்டோம்... நீங்க மறுபிறவி எடுத்தேனும் மீண்டும் பாடல்கள் எழுத வேண்டும் என்று வேண்டுகிறேன்...

Thursday, 18 January 2018

தாமரை

கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னைக் கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்னச் சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னைத் தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்

பேச எண்ணி சில நாள்
அருகில் வருவேன்
பின்பு பார்வை போதும் என நான்
நினைத்தே நகர்வேன் ஏமாற்றி

கண்கள் எழுதும் இரு கண்கள் எழுதும்
ஒரு வண்ணக் கவிதை காதல் தானா
ஒரு வார்த்தை இல்லையே இதில் ஓசை இல்லையே
இதை இருளிலும் படித்திட முடிகிறதே

இரவும் அல்லாத பகலும் அல்லாத
பொழுதுகள் உன்னோடு கழியுமா
தொடவும் கூடாத படவும் கூடாத
இடைவெளி அப்போது குறையுமா

மடியினில் சாய்ந்திட துடிக்குதே
மறுபுறம் நாணமும் தடுக்குதே
இது வரை யாரிடமும் சொல்லாத கதை

கறைகள் அண்டாத காற்றும் தீண்டாத
மனதுக்குள் எப்போது நுழைந்திட்டாய்
உடலும் அல்லாத உருவம் கொள்ளாத
கடவுளைப் போல வந்து கலந்திட்டாய்

உனையன்றி வேறொரு நினைவில்லை
இனி இந்த ஊன் உயிர் எனதில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர

- தாமரை

Wednesday, 17 January 2018

பூப்போல் சிரிக்கின்றாய் நீ.
காற்றாய்ப் பறக்கின்றேன் நான்.

மணற்மீது தூறும் மழை போலவே மனதோடு நீதான் நுழைந்தாயடி...# விண்மீன் விதையில், அபய் ஜோத்பூர்கர், சைந்தவி

நோய்கள் இலவசமாக வருகின்றன.

மருந்தைத் தான் விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது

Tuesday, 16 January 2018

குழந்தை

 “குழந்தைகள் கெட்ட வார்த்தை பேச மாட்டாங்க, கேட்ட வார்த்தைதான் பேசுவாங்க”

Sunday, 14 January 2018

பொங்கல் பதிவு

தமிழ்ப் பாரம்பர்யத்தில் விழாக்களுக்குப் பஞ்சமில்லை. அந்த விழாக்களால் வாழும் தொழிலாளர்களும் அவர்களின் குடும்பங்களும் ஏராளம். இன்று நவீனத்தின் மோகத்தில் நாம் பாரம்பர்யத்தை மட்டுமல்ல; இவ்வாறான பல தொழிலாளர்களையும் இழந்திருக்கிறோம். அந்தத் தொழிலாளர்களை மதிக்காமல் இருந்ததாலோ என்னவோ, ஆரோக்கியத்தையும் நாம் இழந்திருக்கிறோம். அதுவும் மிக மோசமாக.

அந்த அதிர்ச்சியை எதிர்கொள்ளும் முன் ஒரு சில தகவல்களைத் தெரிந்துகொண்டு அடுத்துச் செல்லுங்கள். ஒரு சமூகமாக வாழும்போது, நாமும் தற்சார்பாக இருந்தோம். நம்மைச் சுற்றி வாழ்பவர்களையும் தற்சார்பாக வாழவைத்தோம். இன்று சுயநல வெறி காரணமாகவும், பணம் மற்றும் நுகர்வின் பின் சென்றதாலும் நாம் இழந்த பாரம்பர்யத் தொழில்கள் ஏராளம். சொல்லப்போனால், நாம் அவற்றை மீட்டெடுக்க முடியாத வகையில் தொலைத்துவிட்டோம்.

மீட்டெடுக்க முடியாத தொழில்கள்

அவற்றில் சிலவற்றின் தற்போதைய நிலைமையைப் பார்ப்போம். பொங்கலுக்கு வெள்ளையடிக்கும் சுண்ணாம்புத் தொழில், கரும்பு வியாபாரம், வீடுகளில் காப்புக் கட்டுவதற்காகப் பயன்படுத்தப்படும் பூளைப்பூ விற்பனையாளர்கள், மாட்டு வண்டி தயாரிப்பாளர்கள், ஜல்லிக்கட்டு போன்ற பாரம்பர்ய விளையாட்டுகளில் ஈடுபடும் காளைகளுக்கு லாடம் கட்டும் தொழிலாளர்கள், கோலப்பொடி விற்பனையாளார்கள், அலங்காரிகள், பூசாரிகள் என்று இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.

இந்தத் தொழில்களுக்கும் நம் ஆரோக்கியத்துக்கும் என்ன சம்பந்தம்?

முதலில் சுண்ணாம்புத் தொழிலை எடுத்துக்கொள்வோம். பாரம்பர்ய குடிசைத் தொழிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தச் சுண்ணாம்பு தொழிலாளர்கள் இருந்தார்கள். தரிசு நிலங்களில் கிடைக்கும் வெள்ளை நிறக் கற்களையும், பாறைக்குழிகள், குன்றுகளிலிருந்து எடுக்கப்படும் கற்களையும் நெருப்பு மூட்டி வேகவைத்து சுண்ணாம்புக் கல் தயாரிக்கப்படுகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தச் சுண்ணாம்பு இயற்கையான பொருள்களிலிருந்து எடுக்கப்பட்டு எந்த ரசாயனக் கலவையும் பயன்படுத்தாமல் நேரடியாக நமக்குக் கொடுக்கப்படுவதால், அதிலிருக்கும் கால்சியம் தெரிந்தும் தெரியாமலும் நம்மைச் சுற்றி நிறைந்துவிடுகிறது. விசேஷ நாள்களில் வெற்றிலைப் பாக்குடன் கொடுக்கப்படும் சுண்ணாம்புக்கும், நாம் சுவர்களில் பூசும் சுண்ணாம்புக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. ஆம், நாம் உண்ணக்கூடியதைதான் சுவர்களில் பூசியுள்ளோம். இன்று நவீனம் வழங்கும் பெயின்ட்களை நாம் அதிகமாக நுகர்ந்துவிட்டால், நம் நுரையீரல் பாதிப்புக்குள்ளாகிவிடும்.

உங்களுக்கு ஓர் ஆச்சர்யமான சேதி சொல்கிறேன். இன்றும் கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்குக் கால்சியம் குறைபாடு இருக்கிறதெனில் அவற்றை சரி செய்ய, சுவர்களுக்குப் பூசப்படும் சுண்ணாம்புக் கற்களை வாங்கிவந்து தண்ணீரில் கலந்து மாடுகளுக்கு வழங்குவர். இது ஏதோ மூடச் செயல் அல்ல. நவீன கால்நடை மருத்துவர்கள்கூட கால்சியம் குறைபாட்டுக்கு இந்த முறையைத்தான் கடைப்பிடிக்கச் சொல்கின்றனர். நம் குழந்தைகள், சுவர்களில் பூசப்படும் இந்த சுண்ணாம்பை நுகர்ந்தால் அல்ல, சுவைத்தாலும் அவர்களின் உடல்நலனுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. மாறாக அவர்களின் குறைபாடுகள் நீங்கும்.

இன்று காற்று மாசுபாட்டைக் குறைக்கிறேன், சுவர்களைப் பாதுகாக்கிறேன் என்ற பெயர்களில் விளம்பரம் செய்யப்படும் சுவர்ப் பூச்சுகள் நம் உடலுக்குத் தீங்கான ரசாயனங்கள் எதுவும் இல்லாமல் தயாரிக்கப்பட்டவை என்று சொல்லும் தைரியம் இருக்கிறதா? ஆரோக்கியத்தின் அடிப்படையில் பார்க்கும்போது நமது பாரம்பர்யத்துக்கு முன் நிற்க திராணியற்று நவீனம் வீழ்ந்துவிடும். நமது ஆரோக்கியத்தைவிட, குழந்தைகளின் உயிரைவிட, நவீன வீடுகளும் அலங்காரமான சுவர்ப் பூச்சுகளும் முக்கியம். அவைதான் சமூக அந்தஸ்தை வழங்கும் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும்வரை, எதிர்காலத் தலைமுறையினரைக் காப்பாற்ற முடியாது.

ஆரோக்கியமும் பொருளாதாரமும்

நாங்கள் சம்பாதிப்பதும், இந்த அலங்காரமும் பகட்டும் குழந்தைகளுக்காகத்தான் என்று நீங்களாகவே நம்பி ஏமாறாதீர்கள். ஏனெனில், இந்த நவீன அலங்காரங்கள் உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல; உங்கள் பொருளாதாரத்தையும் சேர்த்தே உறிஞ்சுகின்றன. ஒரு சுண்ணாம்புக் கல்லை வாங்குவதற்கு உங்களுக்கு ஆகும் செலவைவிட பெயின்ட் வாங்குவதற்கான செலவு பத்து மடங்கு அதிகம். பிறகு அந்த பெயின்ட்களில் உள்ள ரசாயனங்களில் காற்றில் கலந்து நுரையீரலுக்கு ஏற்படுத்தும் பாதிப்புகளைச் சீர்செய்ய மருத்துவர்களை நோக்கி ஓட வேண்டும். அப்படிச் சென்றால், நீங்கள் பெயின்ட் அடித்த அந்த வீட்டை விற்றுத்தான் மருத்துவச் செலவு செய்ய வேண்டியிருக்கும்.

இது வெறும் எடுத்துக்காட்டுதான். இவ்வாறான பல பாரம்பர்யங்களையும் ஆரோக்கியங்களையும் நாம் நவீனம் என்ற பெயரில் தொடர்ந்து தொலைத்து வருகிறோம். இம்மாதிரியான விழாக்களிலாவது ஊர்களுக்குத் திரும்பி, சூழலுக்கு உகந்த இல்லங்களையும், இல்லங்களுக்கு உகந்த திருவிழாக்களையும் பிற தொழிலாளர்களுடனும், பாரம்பர்யத்துடனும் கொண்டாடுங்கள். இச்செயல் நம் ஆரோக்கியத்துக்கானது மட்டுமல்ல; சிதறிக்கிடக்கும் உறவுகளை இணைப்பதற்கும் நவீனத்தில் தொலைக்கப்பட்ட நம் வாழ்க்கையின் சுவையை மீட்டெடுப்பதற்கும், நம் குழந்தைகளுக்கான சிறந்த சூழலை உருவாக்குவதற்கும்தான்.

ஊர்களை நோக்கித் திரும்புங்கள். பாரம்பர்யத்தையும் வாழ்க்கையையும் சுவைத்து வாழுங்கள்.

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை