Monday, 8 January 2018

நாமு

ஆண்: வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏணி கட்டு
மேகத்தை அள்ளி மாலை கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
ஓ... ஓ....
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா

(இசை...)

ஆண்: கவலை நம்மை சில நேரம்
கூரு போட்டு துண்டாக்கும்
தீயினை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதி யாவும்
தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும் கூட மழையாய் மாறி
மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம்போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும்
அதில் முதலும் இல்லை முடிவும் இல்லை
புரிந்தால் துயரம் இல்லை
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு.

ஓ... ஓ...
வா வா நிலவை புடிச்சுத் தரவா
வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும் போதுதான்
மறைஞ்சு போகுமே
கட்டிப்போடு மெதுவா

(இசை...)

ஆண்: ஆஹா...
இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லை என்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் நீயும் வாழாதே
கலையும் போது வருந்தாதே
கனவில் பூக்கும் பூக்களை எல்லாம்
கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்தது போனால் மறுபடி ஒன்று
புதிதாய் உருவாகும்...

குழு: வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
வா வா கட்டலாம் அன்பால் படி கட்டு...
ஓ... ஓ...

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை