படம் : தேவதையை கண்டேன்
பாடல் : அழகே பிரம்மனிடம்
இசை : தேவா
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : கங்கா, ஹரிஷ் ராகவேந்திரா
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருபேன் என்று நானும் சொல்லி வந்தேன்
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லமா..?
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
—
உன்னை நான் சுமப்பதினால் இதயமும் கருவறை தான்
மனதால் நானும் அன்னையே..
மறவேன் என்றும் உன்னையே
நான் பாலைவனத்தில் விதை போல்
நீ பருவம் தந்த மழை போல்
என் காதல் செடியில் பூவும் பூத்ததே
உந்தன் விழி திறந்திருந்தால் விடியலே தேவை
இல்லை
உன்னை நான் துறந்திருந்தால் உயிர் அது சொந்தம்
இல்லை
இதனையும் இனி கிடைக்குமா?
கிடைக்கும் கிடைக்கும் நான் கூட சொல்கிறேன்
—
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
—
ஏன் இந்த பிறவி என்று இது வரை நினைத்து இருந்தேன்
உயிரே உன்னை பார்த்ததும்..
உலகே புதிய தானதே
என்னை படைத்த அந்த தெய்வம்..
என்னை சுமந்த அன்னை தெய்வம்..
இவை இரண்டும் உந்தன் கண்ணில் பார்க்கிறேன்..
பருவங்கள் முடி போகும் உருவங்கள் மாறி போகும்
உன் மீது கொண்ட காதல் உயிரையும் தாண்டி வாழும்
சொன்னதெல்லாம் இனி நடக்குமா?
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன்
—
அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்
நீ என் மனைவியாக வேண்டும் என்று
ஆண்டு பல காத்திருக்க வேண்டும் என்று அவன் சொன்னான்
ஆயுள் வரை காத்திருப்பேன் என்று நானும் சொல்லிருந்தேன்
என் ஆசை நிறைவேறுமா?
என் தோழி நீயும் சொல்லமா..
நடக்கும் நடக்கும் நான் கூட சொல்கிறேன் ..
No comments:
Post a Comment