Tuesday, 13 August 2019

யார் பிச்சைக்காரன்

ஊர்வீதி எல்லாம் அத்துபடி
சந்துபொந்து குண்டுகுழி 
சாக்கடைத் தேங்கலும் கூட. 

நாய்களோடு நல்ல பரிச்சயம்
இது யார்வீட்டுப் பூனை என்பதும் தெரியும்.

எந்த மரநிழல் நிற்க ஏற்றது
எது பூத்துதிர்கிறது 
எல்லாம் அறிவான்.

யார் இட்ட கோலம் அழகு 
அவனுக்குத் தெரியும். 

முச்சந்தியில் இஸ்திரி போடுபவனிடம்
தினந்தோறும் 
பீடிக்கு நெருப்பு வாங்கி
ஒரு சிநேகிதத்தைப் பெற்றுவிட்டான்.

சித்தர் பாடல்களை 
அப்படியே ஒப்பிக்கிறான்.

யாரோ தந்திருக்கிறார்கள்
பீட்டர் இங்கிலாந்து சட்டை அணிந்திருக்கிறான்.

மளிகைக்கடைக்காரருக்குச் 
சில்லறை தருகிறான்.

‘ஏந்தாயி கண்ணு கலங்கியிருக்கு ?’
விசாரிக்கவும் தெரிகிறது. 

கிரிக்கெட் பந்து அவன்மீது பட்டது 
சிரித்தபடி எடுத்து வீசுகிறான்.

அவனுக்கு யார்மீதும் புகார் இல்லை
புகழ்ச்சி இல்லை
கேள்வி இல்லை 
விமர்சனம் இல்லை.

நேற்றை மறக்க
நாளையைத் துறக்கத் 
தெரிந்திருக்கிறது.

அவனைப் 
பிச்சைக்காரன் என்று 
எப்படிச் சொல்ல முடியும் ?

Sunday, 4 August 2019

நம்மாழ்வார்

மரத்தை வெட்றதும்
மார அறுத்ரதும் ஒண்ணுதான்யா...
#நம்மாழ்வார்

Thursday, 1 August 2019

புதிதாய் பிறத்தல்

தலைகீழாய் மாற்றம் கண்டிருந்தது புதிய தங்கையின் வரவைச் சுமந்த வீடு

தன் வழக்கங்களிலிருந்து விடுதலை வாங்கியிருந்தனர் அவளுடன் சேர்ந்து புதிதாய்ப் பிறந்த வீட்டினர்

வீட்டின் சப்தங்கள் யாவும் அவளின் மூடிய சிறிய கண்களுக்குள் சென்று ஒளிந்து கொண்டன

அவளின் மெல்லிய சிணுங்கள்களினால் வீடு பலமுறை நிலநடுக்கம் கண்டது

நலம் விசாரிக்கும் உறவுகளால் எனக்கு ஒப்பான விஷயங்கள் அவளிடத்தில் தேடப்பட்டன

வேற்றுகிரகவாசி போல் நான் தனித்து நின்ற பொழுதொன்றில்

வலுக்கட்டாயமாக அவள் கைகளுக்குள் திணிக்கப்பட்ட என் விரலை அவள் அழித்திப் பிடிக்கும் வேளையில் நானும் புதிதாய்ப் பிறந்ததை உணர்ந்தேன் !

-வித்யா சுப்ரமணியன்

Thursday, 25 July 2019

வண்ணதாசன்

நமக்கு வேண்டிய சிலபேரின் சிரிப்பு நமக்கு ஏதோ நல்லது பண்ணுகிறது...#வண்ணதாசன்

Wednesday, 24 July 2019

காட்டுவாசி மனிதன்

‏காடுகளை அழித்துக்கொண்டே மனிதன் காட்டுவாசியாக மாறிக்கொண்டு இருக்கிறான்...

Tuesday, 23 July 2019

பெண்கள்

தன்னுடைய சக்தியை உணராத யானை சின்ன சங்கிலிக்கும் குச்சிக்கும் பயப்படுவதுபோல், பெண்களும் தங்களின் சக்தியை உணராமல் இருக்கிறார்கள்


விதை

"எல்லாவற்றையும் மக்க செய்கிற மண் விதையை மட்டும் துளிர்க்க செய்கிறது "

விரும்புவது

விரும்புவதெல்லாம் 
இந்த மரத்தைப் போலவும் 
இந்தப் பறவையைப் போலவும் 
இந்த மிதிவண்டியைப் போலவும் 
இவ்வுலகில் வாழத் 
தகுதி பெற்றிருத்தல் 
ஒன்றே...

# தேவதேவன்#

Sunday, 21 July 2019

கபிலன்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்

அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்
உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய்
பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான்
எழுந்தேன்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

விரலுக்கும்
இதழுக்கும்
பிறந்திட இசையென
இருவரும் இருப்போம்
இடம் பொருள் மறப்போம்

உனக்கென்ன எனக்கென்ன
முதலேது முடிவேது
எது வரை இருப்போம்
அது வரை பிறப்போம்

யார் நீ யார் நான்
வான் நீ மீன் நான்
உலகின் கதவை தாழ்
திறப்போம்
உயிரே
மழலை மொழியாய்
மகிழ்ந்திருப்போம்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

உயிரே உன் உயிரென நான்
இருப்பேன்
அன்பே
இனிமேல் உன் இதழினில்
நான் சிரிப்பேன்

இதமாய் உன் இதயத்தில்
காத்திருப்பேன்
கனவே
கனவை உன் விழிகளாய்
பாத்திருப்பேன்
தினமே
மழையாய் என் மனதினில்
நீ விழுந்தாய்
விழுந்தாய்
ஒரு விதையான நான்
எழுந்தேன்.


Saturday, 20 July 2019

கன்னியர் நினைவு

கன்னியர்  நினைவு இல்லையென்றால் காளைகள் உலகம் பாலைவனம்தான்

Friday, 12 July 2019

Na.mu

சோற்றுக்கு வரும் நாயிடம் யார் போய் சொல்வது வீடு மாற்றுவதை" ~ நா.முத்துக்குமார்.

கவிதை

அணு அணுவாய் சாவதென்று முடிவு செய்த பின் காதல் சரியான வழி தான்

Tuesday, 9 July 2019

புலமைப்பித்தன்

உலகமெல்லாம் உண்ணும்போது


நாமும் சாப்பிட எண்ணுவோம் ..


உலகமெல்லாம் சிரிக்கும்போது


நாமும் புன்னகை சிந்துவோம்’


Saturday, 22 June 2019

தேவதேவன் கவிதைகள்









வாழ்க்கை

”வாழ்க்கை என்பது வாரிவாரிவைத்துக்கொள்வதற்காக மட்டுமில்லை. கொஞ்சமாவது கொடுக்கவும்பழகிக்கொள்ளவேண்டும்”

Tuesday, 18 June 2019

Periyaar

பொதுவாழ்வுக்கு வந்துவிட்டால் அவமானங்களுக்கு அஞ்சாதே

Saturday, 15 June 2019

யதி

"எப்போது நாம் தத்தளிப்பின் எல்லையில் இனியென்ன என்று தவிக்கிறோமோ அப்போது நமது அந்தரங்கத்திலிருந்து அதுவரை நாமறிந்திராத ஓர் உள்ளொளி உதயமாகி நம்மை புதிய சாத்தியங்களின் வாசல்களை நோக்கி இட்டுச் செல்கிறது. அது தரும் தன்னம்பிக்கையும் துணிவும் என்றும் நமது வழித்துணையாக இருக்கும். சற்றும் எதிர்பாராதபடி ஓர் எரிமலை நம்முள் உடைந்து தீக்கங்குகளை உமிழும்போது, வானைத் துழாவும் தீ நாக்குகளை நாம் செயலற்றுப் பார்த்திருக்குபோது, அவ்வொளியில் புதிய தோற்றம் தரும் வானம், பிறகு நம் வாழ்வின் மிக இனிய நினைவுகளில் ஒன்றாக ஆகிவிடுகிறது.”

– யதி

Sunday, 2 June 2019

தாய்மை

முலைக்காம்பை வாயில் வைத்தபடி
தூங்கிப்போகிறது சிசு
திறந்தமார்பிலேயே தூங்கிப்போகிறாள் புதுத்தாய்
இப்படியான தருணங்களில் 
துண்டுத்துணியெடுத்து தோளில் போர்த்திச் செல்கிறான் சகோதரன் 
பிள்ளையை அமத்திக் கொண்டிருக்கிறாள் என்று எல்லோரையும் வாசலோடு 
நிறுத்தி வைப்பார் அவள் தந்தை.
முந்தானை இழுத்துவிட்டு நகர்வான் தலைவன்

ஒரு குழந்தை 
வீட்டிலுள்ள எல்லா ஆண்களையும் 
தாயாக்கி விடுகிறது!

Friday, 31 May 2019

Osho

இயற்கையை எதிர்த்து வெற்றி என்பது ஏதுமில்லை.


உண்மையைத் தேட வேண்டும், அதற்காக உழைக்க வேண்டும். ஆனால், நம்பிக்கைக்கு எதுவும் தேவையில்லை, நீ வெறுமனே நம்பலாம்.


அன்பும் மௌனமும் இசைந்த வாழ்க்கை உண்மையிலேயே மிகவும் வளமான வாழ்வாக இருக்கும்.


முதலில் உன்னை நேசி, பின் நேசத்தை அதிர்வலையாக உன்னிடமிருந்து பரப்பு. இந்த பிரபஞ்சம் முழுமையும் சென்றடையும் வண்ணம் அதை பரப்பு.


தான் சிறந்த மனிதன் என்று யாருக்கும் நிரூபிக்க ஆசைப்படாத மனிதன் எவனோ அவனே உண்மையில் சிறந்த மனிதன்.


முழுமையாக விழிப்புணர்வோடு வாழும் வாழ்க்கை இறைமை தன்மை கொண்ட வாழ்வாகிறது.


தர்க்கத்தின் மூலம் நீ அளவில் சிறிய மனதை மட்டுமே பெற முடியும். விரிந்து பரவ முடியாது.


நட்புணர்வுக்கு எல்லையே இல்லை, அது ஓர் உறவுமுறை அல்ல. அது உன்னுடைய இயல்பு, குணம், தன்மை.


யாராவது ஒருவரைப் பிடித்து வைத்துக்கொள்வது அவரை நேசிப்பதற்கான எல்லா வாய்ப்புகளையும் அழித்துவிடும்.


அன்பிற்குத் தடையாய் இருப்பது போலித்தனமாய் நாம் கடைப்பிடிக்கும் அன்பே.


இந்த உலகின் பிரிவினைகள் அனைத்தும் மனதின் பிரிவினைகள்தான்.


நீ வெறுமையிலிருந்து செயல்புரியும்போது அங்கு உன்னைச் சுற்றி ஒரு புத்துணர்வு இருக்கும்.


சக்தி தேங்கி நிற்காமல் ஓடும்போது நீ புத்துணர்வாக இருப்பாய், நீ நதி போல ஓடுவாய்.


சாட்சிபாவமாக இரு. நீ புத்துணர்வோடு இருக்கும்போது மட்டுமே சாட்சி பாவமாக இருக்கமுடியும்.


பக்குவப்படுதல் என்பது புத்துணர்வுடன் வெகுளித்தனமாகத் தூய்மையாக இருத்தலாகும்.


கடந்த காலத்தைப் பொறுத்தவரை இறந்துவிடு. அப்போதுதான் நீ புத்துணர்வுடன் புதிதாக இருக்க முடியும்.


ஒருவர் இந்தக் கணத்தை முழுமையாக வாழும்போது புத்துணர்வு பிறக்கும்


Thursday, 30 May 2019

பரிசுத்த வாழ்வு

வாழ்வின் மிக அற்பமான விஷயங்களில் கூட உண்மையைக் கடைபிடிப்பதுதான் பரிசுத்த வாழ்வின் ரகசியமாகும்.

--காந்தி

Tuesday, 28 May 2019

பசி

திரும்பத் திரும்ப பிக்பாக்கெட் அடிச்சிட்டு ஜெயிலுக்கு வர்றியே, நீ திருந்தவே மாட்டியா?” என்று கேட்ட நீதிபதியிடம், எத்தனை முறை பிக்பாக்கெட் அடிச்சாலும் அதே தண்டணைய திரும்ப திரும்ப தர்றீங்களே, சட்டத்த எப்பதான் திருத்தப்போறீங்க என்று கேட்டான் மாரியப்பன் என்ற கைதி.


பதிலேதும் சொல்ல முடியாத நீதிபதி தண்டணையை அறிவித்துவிட்டு ஜெயிலரைத் தனியே அழைத்துப் பேசினார்.


அடுத்த நாள் ஜெயிலர் பிக்பாக்கெட் அடித்த 10 பேரை ஒரு இடத்தில் தனியாக வைத்தார். அவர்களுக்குச் சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டன.


உங்களுக்கு தினமும் இலவச சாப்பாடு கிடையாது. உழைத்து சம்பாதிக்க வேண்டும். தினமும் 200 ரூபாய் சம்பளம். இங்குள்ள கேண்டீனில் டிபன் ஐம்பது ரூபாய், மதிய உணவு 100 ரூபாய் எனச் சொல்ல, மாரியப்பன் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டான். மற்ற 9 திருடர்களையும் ஜெயிலர் தனியே அழைத்து, ஒவ்வொரு நாளும் தினம் ஒருவராக மாரியப்பன் வாங்கும் சம்பளத்தை பிக்பாக்கெட் அடிக்க வேண்டும். வெளியே தெரியக் கூடாது. தெரிந்தால் உங்கள் 9 பேருக்கும் சாப்பாடு கிடையாது என்று கூறினார்.


அதன்படியே ஒவ்வொரு நாளும் ஆளுக்கொருவராக மாரியப்பனின் பணத்தைத் திருட, கையில் காசில்லாமல் அவனும் பசியால் வாட, ஏதோ அரைக் கவளம், ஒரு வாய் என இரக்கப்பட்டுச் சிறிதளவே உணவு கொடுக்கப்பட்டது. மற்ற 9 பேருக்கும் அது வருத்தமளித்தாலும், ஒரு ஆள் பட்டினி கிடைப்பது பெரிதா? 9 பேர் பட்டினி கிடப்பது பெரிதா என்ற நோக்கத்தில் யோசித்து செய்தனர்.


ஒவ்வொரு நாளும் ஜெயிலில் இருக்கும் நாட்களில் பசியின் கொடுமை, வேதனை, வலி மட்டுமல்லாது பிக்பாக்கெட் அடிப்பதால் வரும் இழப்பினையும் கஷ்டத்தையும் மாரியப்பன் உணர்ந்தான். உடனிருக்கும் மற்ற 9 பிக்பாக்கெட் திருடர்களும் உணர்ந்தனர்.


பசியின் வேதனையும் கொடுமையும் உணர்ந்தால் மட்டுமே உணவு வீணாவதைத் தடுக்க முடியும். பட்டினியால் வாடுபவர்களை காக்க முடியும்


Sunday, 26 May 2019

வண்ணதாசன்

நேற்று என்னைக் கொன்றீர்கள்.


அதற்காக


நான் இன்று பிறக்காமலா இருப்பேன்?


- வண்ணதாசன்


Friday, 24 May 2019

வண்ணதாசன்

தேவையற்ற இலைகளை உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாகப் பறவைகளும் இருக்கையில்,
-தேவையற்றதெல்லாம் உதிரும் படியாகவே வாழ்வும் இருக்கும்.

Saturday, 13 April 2019

வண்ணதாசன்

என் பள்ளிக்கூடப் பருவத்தில், என் கால்சட்டையின் வலப்பையில் இட்டிருந்த கருப்பட்டி/வெல்ல இனிப்புகளை இன்னும் எறும்புகள் தின்றுமுடித்திருக்காது என்று இந்த மழைக்காலத்தில் நம்புகிறேன்.

வண்ணதாசன்

எனக்கும் சொல்ல முடியாத கவலைகள் தான். ஆனால் மிகச் சிரத்தையோடும் நேர்த்தியோடும் என் கைவிரல் நகங்களை வெட்டிக்கொண்டு இருக்கிறேன்.

நியதி

இயற்கையின் பிரம்மாண்ட அமைப்பில் எந்த உயிரும் தனக்கென வாழ்வதில்லை என்பதே அடிப்படை நியதி.

செய்யாதீர்

"அடுத்த மனிதன் வீழ்ச்சியடையும்படியாக அமையக் கூடிய தவறை ஒருபோதும் செய்யாதீர்"

Sunday, 27 January 2019

Kavikko

"குழந்தைகளே 
உங்கள் விரல்களை 
நாங்கள் பிடித்துக்கொள்கிறோம் 
எங்களை 
உங்கள் தேவ தேசத்திற்கு 
அழைத்துச் செல்லுங்கள்"

Friday, 25 January 2019

கார்த்திக் நேத்தா

போறானே போறானே..

போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல!

(போறானே போறானே)

பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்
மழையில் நனைஞ்ச ஆட்டப்போல
மனச நீயும் நனச்சுப்புட்ட...
ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா
பொன்னு மனச கொஞ்சம் புனைய வாய்யா..
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா..
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா..
அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே
சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு
முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே…

போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே

போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே!

கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே!
உன்னை பார்த்து பேசையிலே
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
மூக்கான கவுனப் போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு
அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம்
மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்.
உன் பிஞ்சு விரல் மிதிச்ச மண்ணை எடுத்து காயத்துக்கு பூசிக்கிட்டேன்
அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல!

கார்த்திக் நேத்தா

என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே

உன்தாரா உன்தாரா நானே உன்தாரா
என் வானம் பூத்ததே வீரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் வீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே

ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ

தூண்டிலா நீ ஊஞ்சலா

தூரலா நீ காணலா

ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்

நம் காதல் வாழுமே ஒய் நம் காதல் வாழுமே

உன் அசைவினில் என் திசைகளை பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில் கொன்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வென்னிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே

என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா

தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே

நிலவு

நிராதரவாய் நிற்கும் 
பறவையின் தலையைக் கோதிவிடுகிறது
நிராதரவாய் காயும் நிலவு 

- பழநிபாரதி

வாசிப்பு

வாசிப்பு என்பது மகத்தானஅனுபவம். எதார்த்த வாழ்வில் நாம்காணமுடியாத பல காட்சிகளை அவைநமக்கு அடுக்கிக் காட்டுகின்றன. பலமனிதர்களைச் சந்திக்கவைக்கின்றன.பலவிதமான நிலங்கள்,  காடுகள், ஆறுகள்,மலைகள், மரங்கள், பூக்கள் என ஏராளமான புதுமைகளை நம் முன்காட்சிகளாக நிறுத்துகின்றன. மனஉணர்வுகளுக்கு இயைந்தவிதத்தில்அவை ஒவ்வொன்றும் உருக்கொண்டு, நம்புரிதலையும் மனத்தையும்விரிவாக்குகின்றன. நம்மையறியாமல்நமக்குள் இருந்த இருள் விலகிச்செல்வதையும் மேகங்களைப்புரட்டிக்கொண்டு மெல்ல எழும்சூரியக்கதிரென நம் நெஞ்சில் உதித்துச்சுடர்விடும் எண்ணங்களால்பெரும்பரவசமொன்று வந்து படிவதையும்உணரவைக்கின்றன.  ஒரு புத்தகத்தைவாசிக்கத் தொடங்கும் முன்பு இருக்கும்‘நான்’ வேறு. வாசித்து முடித்த பிறகுஇருக்கும் ‘நான்’ நிச்சயம் வேறானது
#பாவண்ணன்

மறதி

ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி. 
மற்ற இரண்டும் ஞாபகமில்லை

Wednesday, 23 January 2019

குழந்தைகள்

“நமது கண்கள் பிறரின் முகங்களை எல்லாம் பார்க்கும், தன் முகத்தைப் பார்க்க இயலாது. கண்ணாடியே பார்த்தறியாத குழந்தையைக் கவனியுங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அனைத்தையும் அது பார்க்கிறது. ஆனால் தன்னைப் பார்க்க வேண்டும் என்னும் சிந்தனையே அதனிடம் இருக்காது. கண்ணாடியை அதன் முன் காட்டினாலும் அதில் விழும் பிம்பத்தை அக்குழந்தை தான் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதே ஆணவம், திரள்வதற்கான முதற்புள்ளி. அப்புள்ளி இன்னும் குழந்தையிடம் உருவாகவில்லை. ஆணவம் இல்லாத அந்த நிலையே சொர்க்கத்திற்குள் சேர்க்கும்.ஆகவே ’பிள்ளைகள் போல் ஆகுவீர்’ "

- இயேசு கிறிஸ்து

Tuesday, 22 January 2019

கார்த்திக் நேத்தா

சிறகுலர்த்தும் பறவையை ஒரு குழந்தையின் கண் கொண்டு பார்க்க விழையும் என் பேரேக்கம் , என்னை எழுதச் சொல்லிக்கொண்டே இருக்கிறது .

ஆண்களே

இந்தச்சட்டை இரண்டுநாள் முன்ன தான் போட்டீங்க,வேற சட்டை போடுங்கனு எடுத்துச்சொல்லவாவது திருமணம் செய்யுங்கள் ஆண்களே....

Sunday, 20 January 2019

கலீல் ஜிப்ரான்

“Love one another, but make not a bond of love: let it rather be a moving sea between the shores of your souls.”

Saturday, 19 January 2019

வாடா மாப்ள

கசடதபற - வல்லினம்

ஙஞணநமன - மெல்லினம்

யரலவழள - இடையினம்

வாழாமாழ்ப்ள - டாஸ்மாக்கினம்

இயற்கை

நல்ல விஷயங்களின் கிறக்கம், இயற்கையின் போதை – இதையெல்லாம் அனுபவிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்களேன். ரசனையும், மனசும் இருந்தா – நீங்களே ரம்மியமான மனுஷனா, மனுஷியா மாறிடுவீங்க

தோள் சாய்வு

சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு, சாயக்கிளியே சாய்ஞ்சாடு…

தாலாட்டுலயே நாம சாய்ஞ்சுக்க சொல்றோம். அப்பா தோள்ல சாய்ஞ்சு தூங்காத குழந்தைகள் குறைவு. அம்மாவோட மடில சாய்ந்து தூங்காத குழந்தைகள் ரொம்ப ரொம்ப குறைவு. கணவனின் தோள்ல சாய்ஞ்சு ஆசுவசப்படுத்திக்குற மனைவி, மனைவில் மடியில் சாய்ந்து தலைவலிக்கு நிவாரணம் தேடும் கணவன், காதலனின் தோளில் சாய்ஞ்சு கற்பனையில் தேரோட்டம் செல்லும் காதலி, காதலியின் தோளில் சாய்ஞ்சு அவள் அகத்தை தேடும் காதலன், தோல்வியின் வலிக்கு ஆதரவா தோள் கொடுத்து, அன்போடு அணைச்சு சாய்ச்சுக்குற நண்பன், தப்பு செஞ்சுட்டேன்னு தடுமாறி நிக்கும் குழந்தைய அன்போடு வாரியணைச்சுக்குற அன்னை, அன்னைக்கு ஈடான பள்ளி ஆசிரியை, பாட்டி – இன்னும் list நீண்டுக்கிட்டே போகும். சாய்ஞ்சுக்குறது அப்படிங்குற ஒரு சின்ன செயல் – அதுக்குள்ள எத்தனை உணர்வுகள் பாருங்க.

மரங்கள்

மரத்தடிகள்... மருத்துவர்கள் இல்லா மனோதத்துவ மருத்துவமனைகள்...

Thursday, 17 January 2019

Bible story

நீங்கள்தான் நீதிபதியா?

ஒருமுறை இயேசு ஆலய வாசலில் உட்கார்ந்து மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிலர், ஒரு பெண்ணை இழுத்து வந்து இயேசுவின் காலடியில் போட்டனர். “இயேசுவே, இந்தப் பெண் விபச்சாரம் செய்தாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று கூறினார்கள். “இதை நாங்கள் கூறவில்லை. இது மோசேயின் கட்டளை” என்றும் ஆவேசமாகச் சொன்னார்கள்.

இயேசு பதில் எதுவும் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அதற்குள் அங்கே பெரும் கும்பல் கூடிவிட்டது. இயேசு என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்தனர்.

சிறிது நேர அமைதிக்குப் பின்னர் இயேசு, “உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்” எனக் கூறினார்.

இதைக் கேட்டதும், அங்கிருந்தவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ஒவ்வொரு நாளும் நமக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் தம்முடைய தவறுகள் குறித்துச் சிந்திக்கிறோம், எவ்வளவு நேரத்தை மற்றவர்கள் குற்றத்தைப் பற்றி யோசிக்கவும் பேசவும் ஒதுக்குகிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.

தவறே செய்யாதவர் இந்த உலகில் இல்லை. நாமெல்லாருமே ஏதோ ஒரு சூழலில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்து விடுகிறோம். இவையனைத்துக்கும் நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமானால், அதற்குக் காலம் போதாது. அதை மறந்துவிட்டு, மற்றவர்களின் குற்றத்தை மதிப்பிட்டுத் தீர்ப்பு வழங்கி விடுகிறோம். தண்டனையையும் உடனே வழங்க விரும்புகிறோம். நாமும் ஒரு விதத்தில் தண்டனைக்குரியவர்கள்தாம் என்பதை மறந்து விடுகிறோம்.

அந்தப் பெண்ணைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரியவர்கள் இயேசுவின் சொல்லைக் கேட்டதும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். பிறரைக் குற்றம்சாட்டும் எத்தனை பேருக்கு இந்தப் பக்குவம் இருக்கும்?

குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக ஒருமுறை அரவணைத்துப் பார்ப்போமே. அவர்களும் நம்மைப் போலத்தானே? நமது தவறுகளை எவ்வளவு மென்மையாக, அனுசரணையோடு நாம் அணுகுகிறோம்! அந்த அனுசரணையோடு பிறரையும் அரவணைக்கலாமே.

அந்த அரவணைப்பே அவர்களை மாற்றலாம். அது நம்மையும் மாற்றலாம்!

- சா.வினிதா

கவிதை

இருக்கின்ற 
விதைகளே போதும். 
இல்லாத காடுகளை 
உருவாக்கிவிடலாம்

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை