எவ்வளவு தான் தோல்விகள் நிகழ்ந்தாலும் தடுமாற்றத்தில் நிலைகுலைந்து சரிந்தாலும் மீண்டும் மீண்டும் பறத்தலையே சுதந்திரமாக எண்ணிச் சிறகுகளை விரிக்கவே முயல்கிறது மனம்.
Sunday, 31 December 2017
Saturday, 30 December 2017
Pazhani Bharathi
வசந்தம் வந்த செய்தியை வண்டுக்கு எப்படி சொல்வாயோ
வண்ணத்திலா வாசத்திலா இரண்டிலுமா
தேனை நீ தந்து எதை நீ பெறுவாய் பூவே பூவே
உன் தேகம் தீண்டி பறந்து சென்ற வண்டு
பிற பூவை பார்த்தால் கோபம் உனக்கு வருமா
Wednesday, 27 December 2017
Kadal
கடல் என்பது தாய்மையின் அடையாளம். ஒருவன் தோல்வியின் உச்சத்தில் இருந்து மீள, சிறிது நேரம் கடற்கரையில் சென்று நின்றிருந்தாலே போதும். அது எக்கச்சக்கப் பாடங்களை மறைமுகமாகப் பயிற்றுவிக்கும்..
Monday, 18 December 2017
Sunday, 17 December 2017
Saturday, 16 December 2017
Azhagi
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
பச்ச பசுஞ்சோலையிலே பாடி வந்த பைங்கிளியே
இன்று நடைப் பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே
கொத்து நெரிஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள
சொன்னாலும் சோகமம்மா தீராத தாகமம்மா
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
நிலவோடு மணலோடு தெருமண்ணு உடம்போடு
விளையாண்டதொரு காலம்...
அலைஞ்சாலும் திரிஞ்சாலும் அலையாத கலையாத
கனவாச்சி இளங்காலம்
என்ன எதிர் காலமோ...
என்ன எதிர் காலமோ என்ன புதிர் போடுமோ
இளமையில் புரியாது முதுமையில் முடியாது
இன்பத்திற்கேங்காது இளமையும் இங்கேது
காலமும் போடுது கோலங்களே
என் குத்தமா... உன் குத்தமா...
யாரை நானும் குத்தம் சொல்ல
இது என் குத்தமா...
பேசாம இருந்தாலும் மனசோட மனசாக
பேசியதொரு காலம்
தூரத்தில் இருந்தாலும் தொடர்ந்து உன் அருகிலே
குலவியதொரு காலம்
இன்று நானும் ஓரத்தில்...
இன்று நானும் ஓரத்தில் என் மனது தூரத்தில்
வீதியில் இசைத்தாலும் வீணைக்கு இசையுண்டு
வீணாகிப் போகாது கேட்கின்ற நெஞ்சுண்டு
வேங்குழல் பாடுது வீணையொடு
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
இது உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
பச்ச பசுஞ்சோலையிலே பாடி வந்த பைங்கிளியே
இன்று நடைப் பாதையிலே வாழ்வதென்ன மூலையிலே
கொத்து நெரிஞ்சி முள்ளு குத்துது நெஞ்சுக்குள்ள
சொன்னாலும் சோகமம்மா தீராத தாகமம்மா
இது உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
உன் குத்தமா என் குத்தமா
யாரை நானும் குத்தம் சொல்ல
திரைப்படம்: அழகி
இசை: இளையராஜா
பாடியவர்: இளையராஜா
சாமுராய்
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றிச் சுட்டியில் ஒட்டியவள்
ஆகாயச் சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்
நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்
இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்
கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடி நான் என் எண்ணம் எதுவோ
கிளி நான் உனை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும்
கிளி நான் உன்னை கொஞ்சும் எண்ணமோ
(ஆகாயச்..)
அடியே நான் என் தேகம் முற்றும் சுற்றிக் கொண்ட
கொடியே உன் எண்ணம் என்னவோ
சகியே எனைக் கொஞ்சம் கொஞ்சம் கொத்தித் தின்னும்
கிளியே என்னைக் கொல்லும் எண்ணமோ
காதல் பந்தியில் நாமே உணவுதான்
உண்ணும் பொருளே ஒண்ணை உண்ணும் விந்தை இங்குதான்
காதல் பார்வையில் பூமி வேறுதான்
மார்கழி வேர்க்கும் சித்திரை குளிறும்
மாறுதல் இங்கேதான்
உன் குளிருக்கு இதமாய்
எனை அடிக்கடி கொளுத்து
என் வெயிலுக்கு சுகம்தான்
உன் வேர்வையில் நனைத்து
காதல் மறந்தவன் காமம் கடந்தவன்
துறவை துறந்ததும் சொர்க்கம் வந்தது
(ஆகாய..)
என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோராபோரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே
உன்னை நீங்கினால் எங்கே செல்வது
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே
ஒளிந்து கொள்கின்றேன்
அடி காதல் வந்து என் கண்ணாமூச்சி
நீ கண்டு கண்டு பிடித்தால்
பின் காமன் ஆட்சி
கத்தியை பறித்து நீ பூவை திணிக்கிறாய்
பாரம் குறைந்ததில் ஏதோ நிம்மதி
(ஆகாய..)
படம்: சாமுராய்
இசை: ஹாரிஸ் ஜெயராஜ்
பாடியவர்கள்: ஹரீஷ் ராகவேந்திரா, ஹரிணி
பாடல்
கவிஞர் தாமரை:
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
---
மரகத சோம்பல் முறிப்பளே
புல் வெளி போலே சிலிர்ப்பாளே
விரல்களை ஆட்டி ஆட்டி பேசும் போதிலே
காற்றிலும் வீணை உண்டு என்று தோன்றுமே
அவள் கன்னத்தில் குழியில் சிறு செடிகளும் நடலாம்
அவள் கன்னத்தில் குழியில் - அழகழகாய்
சிறு செடிகளும் நடலாம் - விதவிதமாய்
ஏதொ ஏதொ தனித்துவம் அவளிடம்
ததும்பிடும் ததும்பிடுமே
---
ஒரு ஊரில் அழகே அழகே
ஒரு ஊரில் அழகே உருவாய் ஒருத்தி இருந்தாளே
அழகுக்கே இலக்கணம் எழுத அவளும் பிறந்தாளே
---
மகரந்தம் தாங்கும் மலர் போலே
தனி ஒரு வாசம் அவள் மேலே
புடவையின் தேர்ந்த மடிப்பில் விசிறி வாழ்கள்
தோள்களில் ஆடும் கூந்தல் கரிசல் காடுகள்
அவள் கடந்திடும் போது தலை அனிச்சையாய் திரும்பும்
அவள் கடந்திடும் போது - நிச்சயமாய்
தலை அனிச்சையாய் திரும்பும் - அவள் புறமாய்
என்ன சொல்ல என்ன சொல்ல இன்னும் சொல்ல மொழியினில் வழி
இல்லையே
---
அவள் பழகும் விதங்களை பார்க்கையிலே
பல வருட பரிட்சயம் போலிருக்கும்
எதிலும் வாஞ்சைகள் தான் இருக்கும்
முதலாம் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
முதல் முதல் பார்வையிலே மனதை ஈர்ப்பாளே
இசை
கடுமையான வெயிலும் கடுப்பேற்றும் மழையும் இல்லாத, மிதமான பருவ நிலை நிலவும் அச்சமயத்தில் மனதுக்கு இதமான இசையைக் கேட்பது சுகமான அனுபவம்.
வரதட்சணை
வரதட்சணை வேண்டாமென்று கூறி பெண் பார்க்கச் சொல்லும் ஆண்கள் பலர் வந்துவிட்டனர்.
ஆனால், பண வசதி இல்லாத ஆண்களை மணமுடித்து வைக்க பெண் வீட்டார்கள் தயாராக இல்லை
ரகசிய கனவுகள்
ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
என் இமைகளை கழுவது
சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது
செல் செல்
முதல் பிழை போல்
மனதினிலே
விழுந்தது உனதுருவம்
ஓ..
உதடுகளால்
உனை படிப்பேன்
இருந்திடு
அரை நிமிடம்
தொலைவது போல்
தொலைவது தான்
உலகில் உலகில் புனிதம்
இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே
இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே
—
மறுபடி ஒரு முறை
பிறந்தேனே
விரல் பட புருவம்
சிவந்தேனே
ஓ..
இல்லாத வார்தைக்கும்
புரிகின்ற அர்த்தம் நீ
சொல்லாத இடமெங்கும்
சுடுகின்ற முத்தம் நீ
சுடும் தனிமையை
உணர்கிற
மர நிழல் போல
எனை சூழ
நரம்புகளோடு
குரும்புகள் நாடும்
எழுதிய கணக்கு
எனது இரு கைகள்
தழுவிட நீங்கும்
இருதய சுளுக்கு
—
ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
என் இமைகளை கழுவது
சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது
செல் செல்
—
உயிர் அணு முழுவதும்
உனை பேச (உனை பேச)
இமை தொடும் நினைவுகள்
அனல் வீச (அனல் வீச)
ஓ.. நெனைச்சாலே சிவப்பாகும்
மருதாணி தோட்டம் நீ
தலை வைத்து நான் தூங்கும்
தலகாணி கூச்சம் நீ
எனதிரவினில்
திசை தரும்
நிலவொளி நீயே
படர்வாயே
நெருங்குவதாலே
நொருங்கிவிடாது
இருபது வருடம்
ஓ.. தவறுகளாலே
தொடுகிற நீயோ
அழகிய மிருகம்
—
ரகசிய கனவுகள்
ஜல் ஜல்
உன் இமைகளை கழுவது
சொல் சொல்
இளமையில் இளமையில்
ஜில் ஜில்
என் இருதயம் நழுவுது
செல் செல்
குயிலினமே
குயிலினமே
எனக்கொரு சிறகு
கொடு
முகிலினமே
முகிலினமே
முகவரி எழுதி
கொடு
அவனிடமே
அவனிடமே
எனது கனவை அனுப்பு
இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே
இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே
இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே
இறகே இறகே
மயிலிரகே
வண்ண மயிலிரகே
வந்து தொடு அழகே
தொட தொட பொழிகிற
சுகம் சுகமே
கண் பட பட
புதிர்களும்
அவிழ்ந்திடுமே
படம் : பீமா
பாடல் : ரகசிய கனவுகள்
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்
பாடலாசிரியர்: பா.விஜய்
பாடியவர்கள் : ஹரிஹரன், மதுஸ்ரீ
Friday, 15 December 2017
வாழ்க்கை
குழந்தைப் பருவத்திலிருந்தே, இதைச் செய், அதைச் செய்யாதே என்று பல போதனைகளை நமக்கு கொடுத்து சில பழக்கவழக்கங்களை திணித்திருப்பார்கள். அது சரி, இதில் எந்தப் பழக்கம் நல்ல பழக்கம், எந்தப் பழக்கம் கெட்ட பழக்கம்?
சத்குருவிடம் கேட்கலாம்...
சத்குரு: நீங்கள் பிறந்த தினத்திலிருந்தே, ‘கெட்ட பழக்கங்களுக்கு அடிமை ஆகாதே, நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்’ என்று அடிக்கடி போதனை செய்திருப்பார்கள்.
என்னைக் கேட்டால், அனுபவித்துச் செய்யாமல் பழக்கத்தினால் எதைச் செய்தாலும் அது கெட்டதுதான்!
காலை அலாரம் வைத்து எழுந்திருப்பீர்கள். பரபரவென்று தினப்படி வேலைகளைச் செய்வீர்கள். குளித்து முடித்து டிபனைத் திணித்துக் கொண்டு, ஸ்கூட்டரிலோ, காரிலோ, பஸ்ஸிலோ அலுவலகம் போய்ச் சேர்வீர்கள். மாலை வரை அங்கேயும் பழகிப்போன விஷயங்கள். வேலை முடிந்து வீடு திரும்பி, சாப்பிட்டு, தூங்கி, மறுபடி எழுந்து... பூட்டப்பட்ட மாடு, வண்டியை இழுத்துக்கொண்டு தினமும் ஒரே இடத்துக்குப் போய் திரும்புவது போல், நாற்பது ஐம்பது வருடங்களை இப்படியே தேய்த்துவிட்டு அடங்கிப் போவதற்குப் பெயர் வாழ்க்கையா?
ஒரு பெரிய இயந்திரத்தில் பொருத்தப்பட்ட நூற்றுக்கணக்கான பல் சக்கரங்களில் ஒன்றுபோல் ஆவீர்கள். பக்கத்தில் இருக்கும் சக்கரம் உங்களைக் கொஞ்சம் நகர்த்தும். அதன்படி உங்களை அடுத்துள்ள சக்கரத்தை நீங்கள் நகர்த்துவீர்கள். மற்ற சக்கரங்கள் சுழல்வதைப் பொறுத்துத்தான் உங்கள் இயக்கமே தீர்மானிக்கப்படும் என்ற பரிதாப நிலைக்கு வந்துவிட்டீர்கள். நீங்கள் ஒரு நிறுவனத்தின் முதலாளியாகக்கூட இருக்கலாம். ஆனாலும், பழக்கத்துக்கு அடிமையாகிவிட்டால், உங்கள் சுதந்திரம் பறிபோய் விடுகிறதல்லவா?
சங்கரன்பிள்ளையின் சுதந்திரம்:
சங்கரன்பிள்ளை ஒருமுறை குடித்துவிட்டு ‘பாரை’ விட்டுப் புறப்பட வெகு நேரமாகிவிட்டது. ‘எட்டு மணிக்குள் வீட்டில் இருந்தாக வேண்டும் என்பது உன் மனைவியின் நிபந்தனையாயிற்றே?’ என்று நண்பர்கள் கிண்டலடித்தார்கள். சங்கரன்பிள்ளை ஜம்பமாக ‘நோ, நோ! என் வீட்டில் எனக்கு முழு சுதந்திரம் இருக்கிறது’ என்று தலைநிமிர்த்திச் சொன்னார். தெனாவட்டாக வீட்டுக்கு நடந்தார். வாசலிலேயே ஆபத்தைப் புரிந்து கொண்டார். மனைவியின் பலவீனம் அவருக்குத் தெரியும். சரேலென அவரைக் கடந்து உள்ளே ஓடினார். பருமனாக இருந்த மனைவியால் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுத்துத் துரத்த முடியவில்லை. வீட்டின் பல இடங்களுக்கும் துரத்தப்பட்ட சங்கரன்பிள்ளை கடைசியில் கட்டிலுக்கு அடியில் போய்ப் படுத்துக் கொண்டார். மனைவியால் கட்டிலுக்குக் கீழே இருந்த இடைவெளிக்குள் நுழைய முடியவில்லை.
“நீ என்ன எலியா? ஆண்மகனா? வெளியே வாய்யா!” என்று அவள் கத்தினாள். சங்கரன்பிள்ளை ஹாயாக பதில் சொன்னார்... “நான்தான் இந்த வீட்டின் ராஜா. எங்கே படுத்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் முழு சுதந்திரம் எனக்கு இருக்கிறது.”
சங்கரன்பிள்ளையைப் போல்தானே உங்களில் பலரும் சுதந்திரத்துடன் வாழ்வதாக நினைத்துக்கொண்டு, உங்களையே ஏமாற்றிக் கொள்கிறீர்கள்?
முதன்முதலில் நீங்கள் வேலைக்குப் போனபோது, எந்த நாற்காலி உங்களுக்குச் சொர்க்கத்துக்கு நிகராகத் தோன்றியதோ, அதே நாற்காலிதான் இன்றைக்கு உங்கள் ரத்த அழுத்தத்தையும், அல்சரையும், இதய வலியையும் உற்பத்தி செய்யும் நரகமாகிவிட்டது. சந்தோஷம் கொடுக்கும் என்றுதானே இந்தப் பணியைத் தேர்ந்தெடுத்தீர்கள்? பழகிப்போன பின் சந்தோஷத்தைத் தவிர மற்ற எல்லாவற்றையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்களே, ஏன்? படகில் பயணம் செய்வதற்காகத் துடுப்பை எடுத்தவன், படகை விட்டுவிட்டு துடுப்பை மட்டும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதுபோல் ஆகிவிட்டீர்களே!
உங்கள் புத்திசாலித்தனத்தையும், விழிப்பு உணர்வையும் பயன்படுத்தாமல், செய்ததையே திரும்பத் திரும்பச் செய்வதற்கு நீங்கள் என்ன இயந்திரமா? ஒரே பக்கத்தைப் பல நூறு ஜெராக்ஸ் பிரதிகள் எடுத்து வைத்துக் கொண்டு, அடுத்தடுத்துப் படித்துக்கொண்டிருப்பதுபோல் உங்கள் தினங்களை காலண்டரில் கிழித்துக்கொண்டிருப்பதா வாழ்க்கை? முழுமையாக வாழ்வது என்றால் என்ன என்று நீங்கள் எப்போதேனும் யோசித்தது உண்டா?
என்றைக்காவது காலையில் பட்சிகள் விழிக்கும்போது, சந்தோஷமாகக் குரல் கொடுப்பதைக் கேட்டு உற்சாகமாகியிருக்கிறீர்களா? எத்தனை நாள்கள் உடலின் ஒவ்வொரு புள்ளியையும் தண்ணீர் நனைத்து இறங்குவதை ரசித்துக் குளித்திருக்கிறீர்கள்? வண்டி ஓட்டும்போது சிந்தனையை எங்கேயோ வைக்காமல், எத்தனை நாள்கள் அனுபவித்து ஓட்டியிருக்கிறீர்கள்? மிக ருசியான உணவாக இருந்தாலும் முதல் கவளத்தைத்தான் அனுபவித்துச் சாப்பிடுவீர்கள். அடுத்தடுத்த கவளங்களை, கை தன் பழக்கப்படி வாயில் கொண்டு போடும். வாய் தன் பழக்கப்படி கடித்துக் கூழாக்கி உள்ளே தள்ளும். வாயில் போட்ட உணவு எப்படி மெல்லப்பட்டு உணவுக் குழாயின் வழியே இறங்கி வயிற்றுக்குப் போகிறது என்பதை ஒரு தடவையாவது முழுமையாகக் கவனித்திருக்கிறீர்களா? ஆனந்தமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் ஆசையை மறந்துவிட்டு, வேலையில் சிக்கிக்கொண்டதால் இதற்கெல்லாமா நேரத்தை வீணடிப்பார்கள் என்றுதான் உங்களிடமிருந்து பதில் வரும். சும்மா முக்கால் மூச்சுவிட்டுக் கொண்டிருப்பதற்காகவா வந்தீர்கள்? உயிரை உடலில் இருத்திவைத்துக் கொள்வதற்குத்தான் அது பயன்படும். உயிரோடு இருப்பது வேறு, வாழ்வது என்பது வேறு. ஒரு கணம்... ஒரே ஒரு கணத்தையாவது முழு விழிப்பு உணர்வோடு வாழ்ந்து பாருங்கள். வாழ்க்கையின் போக்கே மாறிவிடும்.
# சத்குரு
அன்புள்ள சந்தியா
அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
இங்கே எனது இதயம்
எங்கே எனது இதயம்
அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
—
எந்தப்பக்கம் நீ செல்லும்போதும்
எந்தன் காதல் ஆகாயம் ஆகும்
கண்ணை மூடிக்கொண்டாலும் மறையாதே
தூரல் வந்தால் கோலங்கள் அழியும்
காலம் வந்தால் கல்வெட்டும் அழியும்
என்றும் பெண்ணே என் காதல் அழியாதே
அடி கோயில் மூடினால் கூட
கிளி கவலைப்படுவதே இல்லை
அந்த வாசல் கோபுரம் மீது
அதன் காதல் குறைவதே இல்லை
உந்தன் காலடி எந்தன் வாழ்வின் வேரடி
—
அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
—
தாயை கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளை போலே என் காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அரியாதா…
என்றோ யாரோ உன் கையை தொடுவார்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவாய்
அன்பே அது நானாகக்கூடாதா
உன் காதல் என்னிடம் இல்லை
நான் கரைக்க நினைக்கிறேன் கல்லை
இந்த காதல் என்பதே தொல்லை
உயிரோடு எரிக்குதே என்னை
உன்னை நீங்கினால் எங்கே போவேன் நானடி
—
அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
என்னை எனக்கு தருவாயா
இல்லை காட்டில் விடுவாயா
உன் பதிலை எதிர்ப்பார்த்து
ஓ…
அன்புள்ள சந்தியா உனை நான் காதலிக்கிறேன்
நீ சொல்லும் ஒரு வார்தை அதற்காக
நான் காத்திருப்பேன்
ஓ….
Lyrics: Na. Mu
Music : YSR
Thursday, 14 December 2017
Wednesday, 13 December 2017
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...