Tuesday, 12 December 2017

பயணம்

சமீபகாலமாக புத்தகங்கள் படிப்பதை வழக்கமான ஒன்றாகக் கொண்டிருக்கிறேன். அப்படி புத்தகங்கள் ஏற்படுத்தும் உணர்வுகள் யாவும் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை. அது ஒரு சுகந்தம். பரவசம். தியான நிலை. அவை மழைவிட்ட தெருவைப் போல் மயக்கம் தருபவை. அப்படித்தான் ....ஆம். நம்பித்தான் ஆகவேண்டும். புத்தக வாசிப்பு எனக்குள் பல மாற்றங்களை உண்டாக்கின. எத்தனை எத்தனையோ .. அதிலொன்று இது. ஊர் சுற்றுதல். இது வேறு ..... திட்டமிடலும் எந்தவொரு முன்னேற்பாடும் இல்லாமல் நாம் மேற்கொள்ளும் பயணங்கள் யாவுமே அதி அற்புதமான அனுபவங்களாகவே அமைகின்றன. அத்தகைய பயணங்களில் ஒன்று தான் புதுக்கோட்டை பயணம். என் நண்பன் சேசு (கல்லூரியில் பழக்கம்) . அவனும் நானும் சேர்ந்துதான் அந்த பயணம் மேற்கொண்டோம். அவனுக்கு சொந்த ஊர் புதுக்கோட்டை மாவட்டத்தில் கடுக்காக்காடு என்றவொரு கிராமம்.. வெள்ளந்தியான மனிதர்கள் நிரம்பிய ஊர். எல்லா கிராமங்களிலும் மனிதர்கள் குணம் ஒரே மாதிரி தான். அவங்களுக்கு படிக்க வராது , நடிக்க வராது. மாறாக அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் உபசரிப்பு மட்டுமே...
கொஞ்சம் ஓவரா போறேன்னு நெனைக்கிறேன்..

. நம்ப மேட்டருக்கு வருவோம்.. நமணசமுத்திரம், புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து இராமநாதபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஊரது. அங்க ரொம்ப காலத்துக்கு முன்னாடி செஞ்ச மண்குதிரைங்க இருக்ரத்தா பேச்சு. அதப்பாக்கத்தான் நானும் நண்பனும் போனோம். அம்புட்டு குதிர.. எல்லாமே அய்யனார் சாமிக்குன்னு வேண்டிக்கிட்டது...  பிரபஞ்சப் பெருவெளியின் பேரமைதியை ஒற்றையாளாய் உணரும் தருணமாக உணரும் அளவிற்கு மிகவும் நிசப்தமாக இருந்தது அந்த வெளி. இன்னொரு முறை கண்டிப்பா போவேன்... நீங்களும் வேணா ட்ரை பண்ணுங்கோ.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை