Friday, 4 September 2020

நெருக்கடி

நெருக்கடியிலிருந்து தப்பிக்க மனிதர்களுக்கு ஒரு பற்றுக்கோல் தேவை. எதுவாகயிருந்தாலும் அந்த ஒன்றைப் பற்றிக் கொண்டு வாழத் துவங்கிவிடுவார்கள்.es.ra

இலக்கியம்

இலக்கியம் பலநேரம்வாழ்க்கையின் முன்னறிவிப்பு போலவே இருக்கும்....எஸ்ரா

Saturday, 29 August 2020

நாய்கள்

மனிதர்கள் தவிர எந்த உயிருக்கும் மகிழ்ச்சியாக இருப்பது எப்படி என்ற கேள்வியே எழுவதில்லை.
ஜெயமோகன்

Friday, 28 August 2020

குழந்தைமை

குழந்தைமை என்பது ஒரு பொற்காலம். அது அப்போது பேசும் சொற்கள் நம் மொழியைச் சேர்ந்தவைதான் என்றாலும் உண்மையில் அது மனிதமொழியல்ல, தேவதைகளின் மொழி. அதனாலேயே, அந்த மொழி குழலைவிட இனியது. யாழைவிட இனியது. அது வழங்கக்கூடிய ஆனந்தத்துக்கு அளவே இல்லை. 
பாவண்ணன்

Thursday, 20 August 2020

குடை

நாம் எல்லோரும் ஞாபகம் என்ற குடையை ஏந்தியபடியே தான் எப்போதும் செல்கிறோம்.
எஸ்.ரா

Wednesday, 19 August 2020

இசை

கடவுளுக்கு அருகேயோர் இடத்தை ரசிகன் மூடிய கண்களினூடாகப் பெற்றுக் கொள்ள இயலுகிறது. இசையால் மட்டுமே ஆகிற மாயவேலை அது.

Thursday, 30 July 2020

துயரமும் தீர்வும்

மனிதனின் எல்லாத் துயரங்களுக்கும் இயற்கை தீர்வை  வைத்திருக்கின்றது

Saturday, 25 July 2020

பெரிய உள்ளம்

பெரிய உள்ளம் கொண்டவர்கள். எவ்வளவு பெரிய குற்றத்தையும் மன்னிக்க தயாராக இருப்பார்கள். #அ.முத்துலிங்கம்

வறுமை

வறுமையின் காரணம் தெரியாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய கொடுமை # அ.முத்துலிங்கம்

Sunday, 19 July 2020

புத்தகம்

புத்தகங்கள் சூழ வாழுவது மகத்தானது. எஸ்.ரா

புத்தகம்

வீடு. பெற்றோர். சொந்தஊர் என இருந்த தனது வாழ்க்கைக்கு வெளியே வேறு உலகம் இருப்பதையும், அதன் விசித்திரங்களையும் புத்தகங்கள் தான் அறிமுகம் செய்தன. புத்தகம் படிக்க ஆரம்பித்த பின்பு தான் சகமனிதர்களின் மனதும் இயல்பும் செயல்களும் புரிய ஆரம்பித்தன. தன்னையும் உலகையும் அறிந்து கொள்வதற்கான சாளரமாகவே புத்தகங்கள் இருக்கின்றன. -பார்ன்ஸ்

புத்தகங்கள்

பெற்றோர்கள் என்னை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றதை விடவும் நூலகத்திற்கு அதிக முறை அழைத்துப் போயிருக்கிறார்கள்- ஜுலியன் பார்ன்ஸ்

Monday, 29 June 2020

வண்ணதாசன்

தனியாக சீட்டு விளையாடுபவர்களை
தனியாக சமைத்துச் தனியாக சாப்பிடுகிறவர்களை
தனியாக பழைய பாடல்கள் கேட்பவரை
தனியாக மது அருந்துகிறவர்களை
தனியாக அமர்ந்து நூலகங்களில் வாசிப்பவர்களை
தனியாக உலர்சலவையகங்களுக்கு வருபவர்களை
தனியாக நகராட்சிப் பூங்காவில் அமர்ந்திருப்பவர்களை
தனியாக தேவாலயங்களில் பிரார்த்திப்பவரை
தனியாக கிளிஜோஸ்யம் பார்ப்பவரை
தனியாக அரசமர இலையை அவதானிக்கிறவரை
தனியாக நின்று காக்கை கொத்தி இழுக்கும்
பெருச்சாளியின் திறந்த வயிற்றைக் காண்கிறவரை
தனியாக இருக்கும் அவர் பக்கம் உருண்டுவரும்
விளையாட்டுப் பந்தை எடுத்து வீசாதவர்களை
தன்னுடைய கால்பக்கம் நிழற்குடையில் ஒதுங்கும்
நாய்க்குட்டியைக் குனிந்து பார்க்காதவர்களை
ஒன்றும் செய்ய முடியாததற்கு வருத்தப்படாதீர்கள்.
அவர்கள் தேர்ந்தெடுத்த தனிமையில்
அப்படியே பத்திரமாக இருக்கட்டும்.
அவர்களின் தீவைச் சுற்றியே இருக்கிறது
அத்தனை திசைகளிலும்
நம் கடல்.

Saturday, 27 June 2020

ஆசிரியர்

அன்பை சம்பாதிக்க ஆசைப்பட்டவர் ஆசிரியர் ஆனார்.

Friday, 26 June 2020

இலக்கியம்

இலக்கியம் என்பது ஒரு கண்டடைதல் செயல்பாடு #ஜெயமோகன்

Sunday, 21 June 2020

பாஷைகள்

இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை# நா.முத்துக்குமார்

Monday, 8 June 2020

தீராத புத்தகம்

தீராத
வாசிப்புக்குறிய ஒரு புத்தகம் உண்டென்றால் அது மனிதர்களாகத் தான்
இருக்கமுடியும் அல்லது இந்த வாழ்க்கையாகத்தான் இருக்கும் என்று
நம்புகிறேன்
கல்யாணி.சி

சிரிப்பு

தொட்டில் குழந்தையின் முகத்தில் வரும் நரிவிரட்டும் அற்புதச்  சிரிப்பு,ஒரு எழுபது வயது மனுஷியின் முகத்தில் வரும் எனில் அது எவ்வளவு கனிவாக இருக்கும்.!
*வண்ணதாசனின் சமவெளி

Sunday, 7 June 2020

Google

கூகுள் இல்லாமல் போயிருந்தால்..

புத்தகங்களையும், பெரியவர்களையும் தேடி போயிருப்போம்..!!

Wednesday, 3 June 2020

இளையராஜா

மனசொன்னுதான் மனுஷனுக்கு
துணை இருக்கும்

கவிஞர் வாலி

தினமும் ஓர் கோலம்..
இளமை திருவிழா காலம்...

Tuesday, 2 June 2020

வாழ்வும் சிக்கல்களும்

'இந்த வாழ்க்கை சிக்கல்கள் நிறைந்தது. ஆனால் சிக்கல்கள் மட்டுமே அல்ல.. முற்றிலும் வெறுப்புக்குரிய கோளமாக என்றாவது இந்தப் பூமி பெயர் கொள்ளும் எனில், அது துக்கத்துக்குரியதே. அது ஒருபோதும் அப்படி ஆகாத அளவுக்கு அடையாளம் காட்டத் தெரியாத ஒரு சமன்பாடு நம் மத்தியில் எப்போதும் இருக்கும் என்று நம்பத் தோன்றுகிறது'

- வண்ணதாசன்

Monday, 1 June 2020

மதிப்பீடு

நான் ரொம்ப அறிவாளி என்பதை விட பிறரை முட்டாள் என மதிப்பிடுவது பெரும் ஆபத்து !!

Friday, 29 May 2020

துன்பமும் எழுச்சியும்

வாழ்வின் எந்தத் துயரில் இருந்தும் அல்லது தோல்வியில் இருந்தாலும் ஒருவன் அதனைக் கடந்து எழுச்சி பெற முடியும்

வெற்றி

வெற்றி என்பது வாழ்க்கையில் வந்து போகும் ஒரு வானவில் மட்டுமே. அதுவே வாழ்க்கை அல்ல... எஸ்.ராமகிருஷ்ணன்

Saturday, 23 May 2020

எஸ்.ராமகிருஷ்ணன்

மண்ணை நேசிக்கும் ஒருவன் அதன் வழியே spiritual wisdom ஒன்றினை அடைகிறான், அந்த மெய்ஞானமே அவனது விவசாயத்திற்கும், வாழ்க்கை முறைக்கும் அடிப்படையானது, இன்று அது போன்ற  spiritual wisdom அற்றுப்போயவிட்டது, ஆகவே மனிதர்கள் தங்களின் தொழில்சார்ந்து எவ்விதமான ஆத்மஞானத்தையும் பெறுவதில்லை, அதை உள்ளுற நேசிப்பமில்லை,

அன்பு

மனசிலே அன்பை வச்சுகிட்டு அதை காட்டத்தெரியாம இருக்கானுக மனுஷனுங்க. நாய் அப்டி இல்லை. மனசிலே அன்பிருந்தா வால் டான்ஸ் ஆட ஆரம்பிச்சிரும்… அன்பு அப்டியே துள்ளிகிட்டே இருக்கும்… அத்தனை அன்பை வேற எங்க அப்டி கண்ணாலே பாத்துக்கிட முடியும்? *ஜெ

அன்பு

இந்த உலகின் மிகப்பெரிய அற்புதம் அன்புதான்...  I mean compassion 💙
#Jeyamohan

Saturday, 16 May 2020

தோழமை

ஒருவரை ஒருவர் கண்டதும் முகமலர்ச்சி சிரமமின்றி ஏற்படவேண்டும். பயன் கருதி அல்ல - பாசாங்குக்கு அல்ல - அர்த்தமற்று அல்ல - கண்டதும் களிப்பு - நம்மைப்போல ஒருவன் என்ற நினைப்பிலிருந்து களிப்பு மலர வேண்டும். அந்த அகமலர்ச்சிக்குப் பெயர்தான் தோழமை.

–அண்ணா

Thursday, 14 May 2020

சிறிய சந்தோஷங்கள்

சிறிய சந்தோஷங்கள் வாழ்வில் ஒரு போதும் மறப்பதேயில்லை # எஸ்.ராமகிருஷ்ணன்

Saturday, 9 May 2020

தேவதேவன் கவிதை

உனக்குச் சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்குச் சூரியன்
உதாரணமாய் ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒரு நண்பனின் முகம்
ஒரு குவளை தண்ணீர்
ஒரு கண்ணாடி
இன்னும்,,,
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என சொல்லிக்கொண்டே போகலாம்
ஒரு சாப்பாட்டுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லையெனில்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லையெனில்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லையெனில்
ஒரு குவளை தண்ணீர்
உன் தாகம் தணிக்கவில்லையெனில்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகைகொள்ள இயலவில்லையெனில்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்
உணர்ந்துகொள்:
‘நீ இருக்குமிடம் சூர்யமறைவுப் பிரதேசம்!’

Wednesday, 6 May 2020

விதையும் மரமும்

எல்லாக் குழந்தைகளும் ஒரே ஒரு தடவை, ஒரே ஒரு விதையையாவது
அவர்களுடைய கையில் வைத்திருக்க வேண்டும்.  ஒரு விதையை வைத்திருப்பது ஒரு முழு வாழ்வையே வைத்திருப்பது என்பதைப் பின்னர் ஒரு நாள் அக் குழந்தை உணரக் கூடும். அப்பா, அம்மா, அண்ணன், தங்கை என, எல்லோரும் ஒன்றாக நிற்பதற்குப் போதுமான நிழலை, அந்த ஒரே ஒரு சின்ன விதை தனக்குள் வைத்திருக்கிறது என்பதை அந்தக் குழந்தை அறியும் எனில், இப்போது நம்முடன் இருக்கும் மரங்கள், இன்னும் ஆனந்தத்துடன் காற்றின் பாடல்களைப் பாடும்.

Tuesday, 5 May 2020

பிரபாகரன் சேரவஞ்சி

இந்த வாழ்வில் எல்லாமே அதிசயங்கள் தான். அதைப் புரிந்துகொள்ள ஒரு மனிதன் எத்தனை நேர்மையாய், சிரத்தையுடன் அதை நோக்கிப் பயணிக்கிறான் என்பதைப் பொறுத்தே அவனுக்கு அதிசயத்தின் தரிசனம் கிடைப்பது சாத்தியமாகிறது.எதையாவது தீர்க்கமாக நம்புங்கள். எதையாவது தீர்க்கமாக நேசியுங்கள். அது உங்களுக்குக் கைகொடுக்கும். இந்த வாழ்க்கை ஒவ்வொரு நாளும் வரம். அனுபவியுங்கள் இதை அணுவணுவாய்.

Monday, 4 May 2020

கல்யாண்ஜி கவிதை

ஒரு வானத்தை.

மூடிய அறை
ஒரு பொருட்டல்ல ஓவியனுக்கு.
ஒரு பறவையை வரைகிறான்.
பறந்து அது
ஒரு வானத்தை
உண்டாக்கிவிடுகிறது
உடனடியாக.

கடவுள்

காதலோடு செய்யப்படும் பணி தான் கடவுள்.#கார்த்திக் நேத்தா

Sunday, 3 May 2020

வாழ்வு

இப்படித்தானே நாம் இருக்க வேண்டும், இப்படி இருக்கத் தானே நாம் எல்லாம் வந்திருக்கிறோம். துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம் அன்பில் அழியும் எனில், இந்தச் சிரிப்பிலும் அழியும் அல்லவா. இது வெறும் சிரிப்பா?  ஆனந்தமே அல்லவா? எதையும்ஒளித்துவைக்காமல், பொத்திவைக்காமல், எதிராளிக்கு மறைக்காமல் ஒரு காட்டு ஓடையென ஆரவாரமற்று கூழாங்கல் உருட்டிப் பிரவகிக்கும் நீர்மையின்  பளிங்கும்  துல்லியமும் உடைய  இந்த   ஊனமறு    நல்லழகு   எவ்வளவு மடங்குகள்  அருமையானது.

Saturday, 2 May 2020

வண்ணதாசன்

ஒருகனியை முன்னிட்டு இதுவரை எந்த ஒரு  பறவையும் எந்த ஒரு மிருகமும் இதுவரை ஒரு சிறு யுத்தம் கூடச் செய்திராதபடியே தான் காலம் காலமாக எல்லா மரக் கிளைநுனிகளும் காய்த்தும் கனிந்தும்  தன்னைத் திறந்துவைத்திருக்கின்றன.

அணில்கள்

Friday, 1 May 2020

ஸ்டார்ஸ்

கன்னங்கரிய வானத்தில் கண்கூசவைக்கும் அளவுக்கு நட்சத்திரங்கள்

Tuesday, 28 April 2020

பொறாமை

சில விசயங்கள் எப்போதும் மகிழ்ச்சி தராது

பொறாமையும் அதில் ஒன்று !

சொந்த ஊர்

சொந்த ஊரோட அருமை

வந்த ஊருல சோறு கிடைக்காதபோது தான் தெரியும்

Monday, 27 April 2020

காலமும் துன்பமும்

காலம் கடந்த பின்னாடி துன்பங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிடுகின்றன.
#அசோகமித்திரன்

அடி மற்றும் அழுகை

'அம்மாதான அடிச்சேன்'

என்பது குழந்தையின் அழுகைக்கான ஆயின்மென்ட்

இசை

‘மனித சமுதாயத்துக்குப் பொருந்திய நற்குணங்களில்லாத மனிதனுக்குத்தான் சங்கீதம் பயன்படாமல் போகும்.’’
கன்பூசியஸ்

கன்பூசியஸ்

‘‘நாம் வாயால் தெரிவிக்கும் விஷயத்தை நம் எழுத்துக்கள் பரிபூரணமாகத் தெரிவிக்காது. நாம் நினைக்கக் கூடிய விஷயங்களைப் பரிபூரணமாக நம் பேச்சிலே தெரிவித்து விட முடியாது’’.
கன்பூசியஸ்

கூழாங்கற்களின் அழகு

கூழாங்கற்கள் அளவில் சிறியதென்றாலும் தனித்துவமான அழகு கொண்டவை.
எஸ்.ரா

Friday, 24 April 2020

இலக்கியப் படைப்பாளி

வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும். சோதனைச்சாலை முடிவுகள்
போல மற்றவர்கள் தன் அவதானிப்புகளை முன்வைக்கும்போது, படைப்பாளிமட்டுமே துடிப்பின் சாரத்தையும் உண்மையையும் நோக்கித் தன் கவனத்தைச் செலுத்துகிறான். என்னைப் பொறுத்தவரை, இவ்வகையிலான படைப்பாளியாக இயங்கவே விரும்புகிறேன். அன்புணர்ச்சியோ, கனிவுணர்ச்சியோ சிறிதும் இல்லாமல் இருக்கும்போதுதான் ஒவ்வொருவருக்கும் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் வேகமும் பூசலும் எழுகின்றன. அந்த இடத்தில் எனக்கு ஆர்வம் இல்லை. 
பாவண்ணன்

பாவண்ணன்

வாழ்வின் உயிர்த்துடிப்பை, உற்றறிந்து அதை எழுத்தில் சிறிதும் பிசகாமல் வடிக்க எண்ணுகிறவனே படைப்பாளி. அப்படி எழுதப்படுவதே இலக்கியம். அன்பும் கனிவும் நிறைந்தவனால்மட்டுமே அந்த உயிர்த்துடிப்பை உணர முடியும்.
#பாவண்ணன்

வாழ்வு

‘வாழ்வியலில் நம் கருத்துக்குச் சிறிதும் ஒவ்வாதவர்கள் பலரை நாம் எதிர்கொள்ளக்கூடும். எளிய ஓர் உண்மையைக்கூட இந்த மண்ணில் நிலைநிறுத்த முடியவில்லையே என்கிற ஆதங்கம் எழக்கூடும். சீற்றம்கூட எழலாம். ஆனால் அது ஒருபோதும் நம்மை வெறுப்பின் எல்லைவரை அழைத்துச் செல்லக்கூடாது. மனிதர்கள்மீதுள்ள நேசம் ஒருபோதும் குறையக்கூடாது. அறியாமையால் அவர்கள் செய்யும் பிழையையும் பாவத்தையும் மன்னிக்கும்படி பிரார்த்தனை செய்வதற்கு மகாத்மாவாகத்தான் இருக்கவேண்டும் என்றில்லை. எளிய மனிதர்களுக்கும் அது சாத்தியம்.’ 
#பாவண்ணன் 

Tuesday, 21 April 2020

வாழ்க்கை

வாழ்க்கை என்பது கணவன்மனைவிகுடும்ப வாழ்க்கை இவற்றுக்கும் அப்பாற்பட்டு மேலானதுவிரிவானது.

பிரபஞ்சன்

உயர்ந்த நிலைக்கு வர்றதுக்கு ஒரு பெண்ணோட தூண்டுதல் நிச்சயமா வேணும்.

Sunday, 12 April 2020

வாழ்வின் தொடக்கம்

வாழ்வென்பதை எங்கிருந்தும் தொடங்கலாம்...
#பவா

Wednesday, 8 April 2020

நோய்

“அளவுக்கு அதிகமாக சிந்திப்பதும் நோய் தான்”.

தாஸ்தாவெய்ஸ்கி

Tuesday, 7 April 2020

உதவி

”ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்குத்தான் அடுத்தவரின் கஷ்டம் தெரிகிறது; உதவி என்று செய்பவர்கள் நடுத்தர வர்க்கத்தினரோ கீழ்நடுத்தர வர்க்கத்தினரோதான்; பணக்காரர்களில் மிகச் சிலர்தான் உதவி செய்கிறார்கள்” 
Here, There and Everywhere

வாசிப்பு

வாசிப்பினால் காலத்தையும் (Time) இடத்தையும் (Space) கடக்கலாம்.

Sunday, 5 April 2020

செல்வம்

உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வமடி....

நா.மு

கருவிழி  ரெண்டும்  கருவறை  தானோ....

Friday, 3 April 2020

அன்பு

அன்பு என்பது அனைத்தையும் கடந்து பரந்து விரிந்து செல்லக்கூடிய ஆற்றல் உள்ளது.

சலனமற்ற மனம்

சலனமற்ற மனம் மிகப்பெரிய வரம்.

வாழ்வு

நாம் விழைந்ததே நமக்குக் கிடைத்திருக்கிறது என்னும் நிறைவு ஒருவருக்கு மிகமிக முக்கியம். ஆனால் எதார்த்த வாழ்வில், ஒவ்வொருவரும் தன் நிறைவைப்பற்றி நினைப்பதைவிட, அடுத்தவனுடைய நிறைவைப்பற்றிச் சிந்தித்து பொறாமையில் புழுங்குவதே வழக்கமாகிவிட்டது. அடுத்தவன் நிழல் கூட தன் நிழலைவிட நீண்டதாக இருப்பதைப் பார்த்தாலே மனம் குமுறும் மோசமான மனநிலையுடையவர்களுக்கு நடுவில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்பதை நாம் மறக்கக்கூடாது.
#பாவண்ணன்

வாழ்வது

சாவதைவிட எப்படியாவது வாழ்வது நல்லதுதான்

Sunday, 29 March 2020

பவா

மனதில் சில லட்சியங்கள் பறந்துவிடும் போது அதன் நிறைவேறல் மிகச் சுலபம்.

Saturday, 28 March 2020

வண்ணதாசன்

வாழ்வை அதன் போக்கில் மலர்ந்த நிம்மதியுடன்  வாழ்கிறவர்களுக்குஒரு தாமரைக்குளத்தின் பறிக்காத பூவின் அப்படியொரு அழகு வாய்த்துவிடுகிறது

Thursday, 26 March 2020

பிரபஞ்சன்

எப்போது குழந்தைகளிடம் எனக்கு வெறுப்பு வருகிறதோ, எப்போது மனிதர்களைப் பார்க்கக் கசக்கிறதோ, எப்போது காலைவேளைகள் சுவாரஸ்யம் அற்றுப் போகிறதோ, எப்போது நல்ல இசை எனக்கு எரிச்சல் தருகிறதோ, எப்போது உலகம் கெட்டு விட்டது என்று நோய்க்கூறாகச் சிந்தனை தோன்றுகிறதோ, அப்போது எனக்கு மரணம் நெருங்குகிறது என்று பொருள்

- பிரபஞ்சன்.

மகிழ்ச்சிக்கான வழி

உள்ளத்தை தூய்மையாக, உயர்வாக வைத்துக்கொள்ளுதலே மகிழ்ச்சியாக இருப்பதற்கான ஒரே வழி...

மு.சுயம்புலிங்கம்

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை.

டவுசர் இல்லை என்று குழந்தைகள் அழுகும்

ஒரு அடி கொடுப்போம்

வாங்கிக்கொண்டு ஓடிவிடுவார்கள்.

தீட்டுக்கறை படிந்த,

பூ அழிந்த சேலைகள்

பழைய துணிச் சந்தையில்

சகாயமாகக் கிடைக்கிறது.

இச்சையைத் தணிக்க

இரவில் எப்படியும் இருட்டு வருகிறது.

கால் நீட்டி தலை சாய்க்க

தார் விரித்த பிளாட்பாரம் இருக்கிறது.

திறந்தவெளிக் காற்று

யாருக்குக் கிடைக்கும்

எங்களுக்குக் கொடுப்பினை இருக்கிறது.

எதுவும் கிடைக்காதபோது

களிமண் உருண்டையை வாயில் போட்டு

தண்ணீர் குடிக்கிறோம்

ஜீரணமாகிவிடுகிறது.

எங்களுக்கு ஒரு குறையும் இல்லை

நாங்கள் சந்தோசமாக இருக்கிறோம்

Sunday, 22 March 2020

அன்பு

எல்லாவற்றுக்கும் மேலான அதிக ஆற்றல் வாய்ந்தது அன்பு

~ மரியா மாண்டிசோரி

Sunday, 8 March 2020

பிரபஞ்சன்

எப்போது குழந்தைகளிடம் எனக்கு வெறுப்பு வருகிறதோ, எப்போது மனிதர்களைப் பார்க்கக் கசக்கிறதோ, எப்போது காலைவேளைகள் சுவாரஸ்யம் அற்றுப் போகிறதோ, எப்போது நல்ல இசை எனக்கு எரிச்சல் தருகிறதோ, எப்போது உலகம் கெட்டு விட்டது என்று நோய்க்கூறாகச் சிந்தனை தோன்றுகிறதோ, அப்போது எனக்கு மரணம் நெருங்குகிறது என்று பொருள்

- பிரபஞ்சன்.

Friday, 6 March 2020

எஸ்.ரா

சிரிப்பு எல்லா நேரத்திலும் மகிழ்ச்சியிலிருந்து மட்டும் பிறப்பதில்லை

ரகசியமாய்

சிரித்துச் சிரித்துச் சிறையிலே சிக்கிக்கொள்ள அடம் பிடிக்கும்...

Wednesday, 19 February 2020

Pondy

ஏன்யா, பாண்டிச்சேரி போறேன்னு சொல்லிட்டு எந்த பஸ்லயும் ஏற மாட்டேங்கறே...?

எல்லா பஸ் கண்டக்டரும் 'பாண்டி' மட்டும் ஏறுங்கன்னு தானே சொல்றாங்க, என் பேரு கிஷோருங்க...!

Tuesday, 18 February 2020

பொம்மைகள்

பொம்மைகள் எல்லோரையும்
குழந்தைகளாக்கி விடுகிறது

Karthik netha

JOURNEY SONG :

பல்லவி :

நான் என்பது யாரோ 
பெருந்திரளினிலே - ஏடே
நான் என்பதை வீசி 
எழுந்தேனே மனமே

தான் என்பது போகும் 
பெருங்கணத்தினிலே - கூவி
வாவென்றொரு வாழ்க்கை 
சிறுகுரலாய் அருளாய்ப் பேச

போகாதொரு ஆழம்தேடி
நீந்தி நீந்தி மூழ்கிப் போவேன்
வாழாதொரு வாழ்வைத் தீண்டித்
தெளி தெளி தெளி தெளி
தெளிவில் பூப்பேன்

காணாதொரு வெளிச்சத்தில்
எனை நானே அட முழுதாய்ப் பார்ப்பேன்
வீழாதொரு நிலையினிலே
அடப் பித்தேறிச் சத்தேறிச் சித்தேறி மிதப்பேன்

ஆழ் என்றது மெய்ஞான போதம் 
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்

போல் என்பது பகட்டு வாதமே
இப்போதில் இப்போதில் இப்போதில்
எல்லாமும்

நாள் என்பதும் பொய்யான காலம் 
இப்போதில் இப்போதில் இப்போதில் 
எல்லாமும்

கேள் என்குதே தெளிந்த ஞானமே
கேட்க கேட்க ஓசை மீறிக்
கேட்கிறதே....

சரணம் 1:

ஆறறிவென்றே
அலட்டாமல் எளிதாய் நானும்
ஓர்உயிர் என்றே இருப்பேனே
குழம்பாமல்

யார் உடைத்தாலும் 
சிரிக்கின்ற பொம்மைப்போலே
நான் என் இயல்பில் இருப்பேன்

ஓடும்நதியின் மேலே
உட்காரும் தட்டான் போலே
லேசாக அமர்ந்தே பறப்பேனே 
புவிமேலே

தாய் தூங்கும் அழகைப் பார்த்துத்
தான் தூங்கும் மழலைப்போலே
பேரன்பைப் போலி செய்வேனே 
நிறுத்தாமல்

பேரெல்லையில் உட்கார்ந்து பார்த்தேன் 
இப்போது இப்போது இப்போது
கண்ணாக

பேருண்மையில் கலந்துபோகிறேன் 
இப்போது இப்போது இப்போது 
ஒன்றாக

பேரன்பிலே தள்ளாடிப் பூத்தேன் 
இப்போது இப்போது இப்போது
நன்றாக

பேராற்றலில் கரைந்துபோகிறேன்
பூத பேத வாத மோகம்
மறைகிறதே...

சரணம் 2 :

நான் எனக்குள்ளே
அசைந்தேனே ஊஞ்சல்போலே
யார் எனை அசைத்தே ரசித்தாரோ 
சலிக்காமல்

பேரலைமேலே
விளையாடும் காகம்போலே
யார் எனைத் துணிவாய்ப் படைத்தார்

சீறும் புலியைப் பார்த்தே
சிரிக்கின்ற சிசுவைப் போலே
கோபங்கள் மறந்தே சிரிப்பேனே
பதறாமல்

பூவீழும் குளத்தின்மேலே 
உருவாகும் வளையல்போலே
நான் வாழ்ந்த அதிர்வைக் கொடுப்பேனே
கதறாமல்

வாகாய் வாகாய்
வாழ்கிறேன்
பாகாய்ப் பாகாய் 
ஆகிறேன்

தோதாய்த் தோதாய்ப்
போகிறேன்
தூதாய்த் தூதாய்
ஆகிறேன்

போதாய்ப் போதாய்ப்
பூக்கிறேன்
காதாய்க் காதாய்க்
கேட்கிறேன்

ஆரோ ஆராரிரிரோ
தாலாட்டும் காலம்
தலையாட்டும் ஞானம்
ஆரோ ஆராரிரிரோ
தாய்ப்போல் பாடுதே

ஆரோ......

Monday, 17 February 2020

பறத்தல்

சிறகு இருக்கு, வானம் இருக்கு என்பதற்காகலாம் பறவை பறந்துவிடாது...

அதற்கு விருப்பம் இருக்க வேண்டும்,

தேவை இருக்க வேண்டும்!

Saturday, 15 February 2020

குழந்தைகளின் முகம்

சற்றுமுன் விரிந்த மொட்டுக்களை போல எப்பொழுதும் புத்துணர்வுடன் காட்சியளிப்பது குழந்தைகளின் புன்னகை சிந்தும் முகம் தான்...

கடைசி முறை

"உன்னைக் காணும் கடைசி முறை இது தான் என்று எனக்கு தெரிந்தால், உன்னை இறுக்கி அணைத்துக்கொள்வேன். இறைவனிடம் உன்னுடைய ஆன்மாவைக் காக்கும்படி இறைஞ்சுவேன்.

நீ கதவைக் கடந்து போகும் கடைசி கணம் இது தான் என்று தெரிந்தால் உன்னை தழுவிக்கொண்டு, முத்தமிடுவேன். உன்னை இன்னுமொரு முறை பெயரிட்டு அழைப்பேன்.

இது தான் உன்னுடைய குரலை கேட்கும் இறுதிப் பொழுது என்று அறிந்தால், நீ உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தையையும் சேகரித்து மீண்டும், மீண்டும் கேட்க பத்திரப்படுத்திக்கொள்வேன்.

உன்னைக் காணும் இறுதித்தருணம் இது தான் என்று உணர்ந்தால் நான் உன் மீது கொண்டிருக்கும் பிரியம் உனக்கு ஏற்கனவே தெரியும் என மூடனைப் போல கருதாமல் 'உன்னை நான் காதலிக்கிறேன்' என்று சொல்லியிருப்பேன். "

கேப்ரியேல் கார்ஸியா

Friday, 14 February 2020

கதை

'இளம் வெயிலும் மிதமான காற்றும் இசைவான கடலலையும் எல்லோருக்கும் வாய்க்க நாம் கதை எழுதுவதுதான் ஒரே வழி’ ச.தமிழ்ச்செல்வன்

Wednesday, 12 February 2020

அன்பின் கொடி

அன்பின் கொடிகள் திசைகள் தீர்மானித்து படர்வதே இல்லை..

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை