ஒரு இரவில் சென்னை தாஷ்பிரகாஷ் ஹோட்டல் சிக்னலில் ஒரு தந்தைக்கும் மகளுக்குமான உரையாடல் இது.
சிறுமி தாஷ்பிரகாஷ்ஹோட்டல் இருந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள புதிய உயர்ரக அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் விளக்குகளை பார்த்து தந்தையிடம் கேட்கிறாள்.
சிறுமி: அப்பா! அது என்னாதுப்பா?
தந்தை: அது அபார்ட்மென்ட்ஸ் டா.
சிறுமி: அபார்ட்மென்ட்ஸ்னா?
தந்தை: நிறைய வீடுங்க இருக்கும்டா.
சிறுமி: அந்த வீட்டுலலாம் யாருப்பா இருப்பாங்க?
தந்தை: ஆளுங்கதான்டா.
சிறுமி: நம்மளும் இங்க வந்திரலாமா?
தந்தை: (பீதியடைந்த நிலையில்)
ஐயய்யோ! பணக்காரங்கதான்டா இங்க வரமுடியும்.
சிறுமி: பணக்காரங்கனா யாருப்பா?
தந்தை: நிறைய காசு வச்சிருக்கவங்க.
சிறுமி: அப்ப நாம்ப?
தந்தை: ஏழைங்க.
சிறுமி: நம்ம கிட்ட காசு இருக்காதா?
தந்தை: (சோகத்துடன்) இருக்காதுடா.
சிறுமி: (சிறு யோசனைக்கு பிறகு உற்சாகமாக) ஆய்ய்! பொய் சொல்லாதிங்க, ஏடிம்ல நிறைய காசு எடுத்திங்களே? அந்த காசு இருக்கில்ல.
தந்தை: அது சம்பளக்காசுடா, அந்த காசு பத்தாது, இன்னும் நிறைய காசு வேணும்டா.
சிறுமி: அப்ப ஏடிம்ல போய், போய் எடுத்துட்டுவரலாம்.
தந்தை: அப்படிலாம் காசு வந்துக்கிட்டே இருக்காது atmல, நம்ம வேலை செஞ்ச காசு மட்டும்தான் வரும், அது பத்தாது குட்டி.
சிறுமி: (காண்டாகிய நிலையில்) அப்ப எப்பதா நிறைய காசு வரும்?
தந்தை: நீ நல்லா படிச்சி, நல்ல வேலைக்கு போனாதான் வரும்.
அடுத்த கேள்வி கேட்பதற்குள் பச்சை விளக்கு எரிந்ததால் எஸ்கேப் ஆனார் அந்த தந்தை.
பி.கு.: மனைவிக்கு தெரியாமலாவது தன் நான்கு வயது மகளுக்கு பொத்துனாப்புல பொதுவுடைமை கற்பிக்க ஆசைப்பட்டார் அந்த பைக் ஓட்டிய தந்தை.
No comments:
Post a Comment