Wednesday, 21 February 2018

இலக்கியம்

ஒரு கல்லூரியில் ஜெயமோகன் உரையாற்றிக்கொண்டிருக்கிறார். திடீரென ஒரு மாணவன் எழுந்து ‘சார் சும்மா இலக்கியம் இலக்கியம்னு சொல்றீங்களே.. இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடுமா?’ என கேட்கிறார்.சக மாணவர்களிடமிருந்து பலத்த கரகோசம் கிளம்புகிறது. ஓர் அற்புதமான கேள்வியை கேட்டு விட்ட திருப்தியில் கூட்டத்தை பெருமை பொங்க விழி தூக்கிப் பார்க்கிறார் அந்த மாணவர்.ஜெயமோகன் ஒரு கணமும் தாமதியாது உறுதியான குரலில் சொன்னார் “இலக்கியம் வாழ்க்கைக்குச் சோறு போடாது; ஆனால் சோற்றால் மட்டுமே நிரம்பி விடாத ஏதோ ஒன்று உனக்குள் இருக்குமாயின் அந்த இடத்தை இலக்கியம் நிரப்பும்” என்று. ஆம் நண்பர்களே,நாம் சோற்றால் அடித்த பிண்டங்கள் அல்ல. ஒரு மோதிர வளையம் அளவிற்கேயான மிகச்சிறிய வாழ்க்கைதான் நமக்கு கையளிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் நிகர்வாழ்க்கை வாழ்ந்த அனுபவத்தை பேரிலக்கியங்கள் நமக்களிக்கின்றன. உக்கிரமான கொந்தளிப்பை சாந்தப்படுத்துகிறது, ஆர்ப்பாட்டமான டாம்பீகத்தின் தலையிலடித்து உலகின் துயரங்களைப் பார் என்கிறது. ஆன்மீகமான தத்தளிப்பை உருவாக்குகிறது அல்லது தத்தளிப்பிற்குப் பெரும் மருந்தாகிறது.ஒட்டுமொத்தமான வாழ்க்கைப் பார்வையை உருவாக்கிக்கொள்வதில் பங்களிக்கிறது

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை