Saturday, 24 February 2018

அப்பா அம்மா

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே
தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே
ஏப்ரல் மே வெயிலும் நீயே
ஜூன் ஜூலை தென்றலும் நீயே... ஐ லைக் யூ
செப்டம்பர் வான் மழை நீயே
அக்டோபர் வாடையும் நீயே... ஐ தேங்க் யூ
உன்னை போல் ஓர் தாய் தான் இருக்க
என்ன வேண்டும் வாழ்வில் ஜெயிக்க

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

என் கண்ணில் ஈரம் வந்தால்
என் நெஞ்சில் பாரம் வந்தால்
சாய்வேனே உன் தோளிலே
கண்ணீரே கூடாதென்றும்
என் பிள்ளை வாடாதென்றும்
சொல்வாயே அந்நாளிலே
இனியொரு ஜென்மம் எடுத்து வந்தாலும்
உன் மகனாகும் வரம் தருவாய்
உன் வீட்டு சின்ன குயில் 
நீ கொஞ்சும் வண்ணக் குயில் நாந்தானே
நான் வயதில் வளர்ந்தால் கூட
மடி ஊஞ்சல் வேண்டும் ஆட

வேருக்கு நீரை விட்டாய்
நீராய் கண்ணீரை விட்டாய்
பூவாச்சு என் தோட்டமே
உன் பேரை சொல்லும் பிள்ளை
போராடி வெல்லும் பிள்ளை
பூமாலை என் தோளிலே
இளம்பிறை என்று இருந்தவன் என்னை
முழு நிலவாய் நீ வடிவமைத்தாய்
வற்றாத கங்கை நதியாய்
தேயாத மங்கை மதியாய் நீ வாழ்க
புது விடியல் வேண்டும் எனக்கு
எந்த நாளும் நீதான் கிழக்கு

நீயே நீயே நானே நீயே
நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே

தந்தை நீயே தோழன் நீயே
தாலாட்டிடும் என் தோழி நீயே

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை