Saturday, 2 June 2018

பாவண்ணன்

மரங்களைப் பார்க்கும் ஆசையை என்னால் எப்போதும் கட்டுப்படுத்த முடிந்ததில்லை. கம்பீரமான அதன் தோற்றமும் எல்லாத் திசைகளையும் நோக்கி விரிந்த அதன் கிளைகளும் விதம்விதமான இலைகளும் காய்களும் பூக்களும் ஆச்சரியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அவற்றைப் பார்க்கும்போது யாரோ ஒரு முப்பாட்டனைப் பார்ப்பதைப்போலத் தோன்றும். எல்லாமே எப்போதோ தோன்றி வளர்ந்தவை. எனக்குப் பின்னாலும் உயிர்த்திருக்கும் வாழ்க்கை அமைப்பை உடையவை.  அதன் நீண்ட ஆயுளின் முன்னால் மானுட ஆயுள் அற்பமானதாகும். எல்லாம் தனக்காக என்று மார்தட்டுகிற மானுட அகங்காரம் அவற்றின்முன் மெளனமாக கரைந்துபோகும்.

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை