தமிழில் பல தாலாட்டு ஆண் கவிஞர்களால் எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் நிஜ வாழ்வில் தாலாட்டு தாய்க்கு உரியது. முதன் முதலாக பெண் கவிஞரால் எழுதப்பட்ட தாலாட்டுப்பாடல் இதுவே .
உணர்வுகளை உணர்ந்து கொள்ள தாயை தவிர வேறு எவரும் இந்த உலகில் இல்லை. ஒரு தாய்க்கு தன் குழந்தையே உலகமாகிறது – அக்குழந்தையின் பிறப்புக்கு பின். ஒரு தாய் தான் தன் குழந்தையை எல்லாவுமாய் பாவிக்கிறாள். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்த பாடல்.
அன்னையின் பாசமும், தன் குழந்தையை வளர்க்கும் துணிவுடனும் தன் வாழ்வையை அழகாக எடுத்துரைக்கும் தாமரை அவர்களின் வரிகள் இசைக்கும் வேளைகளில் நமக்கும் தாய்மை உணர்வை ஏற்ப்படுத்தும் வரிகள். வாழ்வில் தாயின் நேசம் அது மனிதனை முழுமை படுத்துவதாக அமைகிறது. அவளின் ஒவ்வொரு அசைவிலும் தன் பிள்ளை எதிர் காண இருக்கும் காலம் பற்றி அவள் சிந்திப்பதையும் பாடல் வரிகளின் வடிவில் அருமையாக எடுத்துரைக்கிறார் பாடல் ஆசிரியர்.சில சமயங்களில் பிள்ளைகளால் தாய்க்கு தரப்படும் நேசம் அவளின் தவம் புரியா வரமாக அமைகிறது. பிள்ளையின் கண்களில் பாசமும் பெற்றவள் கண்ணில் நேசமும் அவர்களுக்கிடையில் இசையான வாழ்க்கை சுழற்சி அழகாக வரிகளாக உருப்பெற்றுள்ளது.
பாடல் : கண்கள் நீயே காற்றும் நீயே
படம் : முப்பொழுதும் உன் கற்பனையில்
பாடலாசிரியர் : தாமரை
இசையமைப்பாளர் : ஜி.வி.பிரகாஷ்
பாடியவர் : சித்தாரா
கண்கள் நீயே..காற்றும் நீயே
தூணும் நீ ..துரும்பில் நீ
வண்ணம் நீயே ..வானும் நீயே
ஊனும் நீ ..உயிரும் நீ
பல நாள் கனவே
ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீர்த்தாயே
இடையில் பிழிந்து உன்னை நான் எடுத்தேன்
நான் தான் நீ ..வேறில்லை
முகம் வெள்ளைத் தாள்
அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீர்
எனும் தீர்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
(கண்கள் நீயே..காற்றும் நீயே)
இந்த நிமிடம் நீயும் வளர்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேலை
சுவர் மீது கிறுக்கிடும்போது
ரவிவர்மன் நீ
இசையாக பல பல ஓசை
செய்திடும் .. ராவணன்
ஈடில்லா என் மகன்
எனைத் தள்ளும் முன்
குழி கன்னத்தில்
என் சொர்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனை கிள்ளும் முன்
விரல் மெத்தைக்குள்
என் முத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
பல நூறு மொழிகளில் பேசும்
முதல் மேதை நீ
பசி என்றால் தாயிடம் தேடும்
மானிட மர்மம் நீ
நான் கொள்ளும் கர்வம் நீ
கடல் ஐந்தாறு
மலை ஐநூறு
இவை தாண்டித் தானே
பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
(கண்கள் நீயே..காற்றும் நீயே)
No comments:
Post a Comment