"குழந்தைகளே
உங்கள் விரல்களை
நாங்கள் பிடித்துக்கொள்கிறோம்
எங்களை
உங்கள் தேவ தேசத்திற்கு
அழைத்துச் செல்லுங்கள்"
Sunday, 27 January 2019
Kavikko
Friday, 25 January 2019
கார்த்திக் நேத்தா
போறானே போறானே..
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல!
(போறானே போறானே)
பருவம் தொடங்கி ஆச வச்சேன்
இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்
மழையில் நனைஞ்ச ஆட்டப்போல
மனச நீயும் நனச்சுப்புட்ட...
ஈரக்கொலய கொஞ்சம் இரவல் தாய்யா
பொன்னு மனச கொஞ்சம் புனைய வாய்யா..
ஏற இறங்க பார்க்கும் ரோசக்காரா..
டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா..
அட நல்லாங்குருவி ஒன்னு மனச மனச
சிறு கன்னாங்குழியில பதிக்கிறுச்சே
சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு
முழியத்தான் ஈச்சங்காயா ஆஞ்சிருச்சே…
போறானே போறானே காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே போவாமத்தான் போறானே
போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல
போறாளே போறாளே போவாமத்தான் போறாளே!
கிணத்து நிலவா நான் இருந்தேன்
கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்டே!
உன்னை பார்த்து பேசையிலே
ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
மூக்கான கவுனப் போல உன் நினைப்பு
சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
அடைகாக்கும் கோழி போல என் தவிப்பு
பொசுக்குன்னு பூத்திருச்சே என் பொழப்பு
அடி மஞ்ச கிழங்கே உன்னை நினைச்சு நினைச்சு தினம்
மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன்.
உன் பிஞ்சு விரல் மிதிச்ச மண்ணை எடுத்து காயத்துக்கு பூசிக்கிட்டேன்
அழகா நீ நெறைஞ்சே… அடடா பொந்துக்குள் புகையப்போல!
கார்த்திக் நேத்தா
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
உன்தாரா உன்தாரா நானே உன்தாரா
என் வானம் பூத்ததே வீரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் வீரா
என் பார்வை ஆனதே கூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
ஏனோ இன்று ஏனோ
நான் உந்தன் நானோ
நீயோ இல்லை நானோ
நாம் என்னும் நாமோ
தூண்டிலா நீ ஊஞ்சலா
தூரலா நீ காணலா
ப்ரேத்யேக மௌனம் நீ கொண்டு வந்தாய் என் வார்த்தை ஆனதே
இல்லாத ஊரில் இல்லாத பேரில்
நம் காதல் வாழுமே ஒய் நம் காதல் வாழுமே
உன் அசைவினில் என் திசைகளை பட படவென தந்தாய்
மின்மினிகளை உன் விழிகளில் கொன்டாய்
கண் இமைகளில் என் இரவினை
கத கதப்புடன் தந்தாய்
கண் அவிழ்கையில் வென்னிலவொளி தந்தாய்
பிரம்மாண்ட காலம் நீ தந்து சென்றாய்
என் நாட்கள் தீர்ந்ததே
உன் காதல் சூட்டில் என் காதல் பூக்கும்
நம் தேடல் தீருமே
என்தாரா என்தாரா நீயே என் தாரா
என் வானம் பூத்ததே தாரா
கண்பூரா கண்பூரா நீயெ தான் தாரா
கண்ணாரக் காண்கிறேன் பூரா
தண்ணீரை பூசிக்கொண்டு
மெல்ல செல்லும் பிம்பங்கள் நீயாகினாய்
எதிரெ என்னோடு காதல் வந்தே
என்ன சொல்ல வெட்கங்கள் பேசுதே
வாசிப்பு
வாசிப்பு என்பது மகத்தானஅனுபவம். எதார்த்த வாழ்வில் நாம்காணமுடியாத பல காட்சிகளை அவைநமக்கு அடுக்கிக் காட்டுகின்றன. பலமனிதர்களைச் சந்திக்கவைக்கின்றன.பலவிதமான நிலங்கள், காடுகள், ஆறுகள்,மலைகள், மரங்கள், பூக்கள் என ஏராளமான புதுமைகளை நம் முன்காட்சிகளாக நிறுத்துகின்றன. மனஉணர்வுகளுக்கு இயைந்தவிதத்தில்அவை ஒவ்வொன்றும் உருக்கொண்டு, நம்புரிதலையும் மனத்தையும்விரிவாக்குகின்றன. நம்மையறியாமல்நமக்குள் இருந்த இருள் விலகிச்செல்வதையும் மேகங்களைப்புரட்டிக்கொண்டு மெல்ல எழும்சூரியக்கதிரென நம் நெஞ்சில் உதித்துச்சுடர்விடும் எண்ணங்களால்பெரும்பரவசமொன்று வந்து படிவதையும்உணரவைக்கின்றன. ஒரு புத்தகத்தைவாசிக்கத் தொடங்கும் முன்பு இருக்கும்‘நான்’ வேறு. வாசித்து முடித்த பிறகுஇருக்கும் ‘நான்’ நிச்சயம் வேறானது
#பாவண்ணன்
மறதி
ஒருவருக்கு வயதாகத் தொடங்கும் போது மூன்று விஷயங்கள் ஆரம்பிக்கின்றன.
ஒன்று ஞாபக மறதி.
மற்ற இரண்டும் ஞாபகமில்லை
Wednesday, 23 January 2019
குழந்தைகள்
“நமது கண்கள் பிறரின் முகங்களை எல்லாம் பார்க்கும், தன் முகத்தைப் பார்க்க இயலாது. கண்ணாடியே பார்த்தறியாத குழந்தையைக் கவனியுங்கள். தன்னைச் சுற்றியுள்ள அனைவரையும் அனைத்தையும் அது பார்க்கிறது. ஆனால் தன்னைப் பார்க்க வேண்டும் என்னும் சிந்தனையே அதனிடம் இருக்காது. கண்ணாடியை அதன் முன் காட்டினாலும் அதில் விழும் பிம்பத்தை அக்குழந்தை தான் என்று அடையாளப் படுத்திக் கொள்ளாது. தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதே ஆணவம், திரள்வதற்கான முதற்புள்ளி. அப்புள்ளி இன்னும் குழந்தையிடம் உருவாகவில்லை. ஆணவம் இல்லாத அந்த நிலையே சொர்க்கத்திற்குள் சேர்க்கும்.ஆகவே ’பிள்ளைகள் போல் ஆகுவீர்’ "
- இயேசு கிறிஸ்து
Tuesday, 22 January 2019
கார்த்திக் நேத்தா
சிறகுலர்த்தும் பறவையை ஒரு குழந்தையின் கண் கொண்டு பார்க்க விழையும் என் பேரேக்கம் , என்னை எழுதச் சொல்லிக்கொண்டே இருக்கிறது .
ஆண்களே
இந்தச்சட்டை இரண்டுநாள் முன்ன தான் போட்டீங்க,வேற சட்டை போடுங்கனு எடுத்துச்சொல்லவாவது திருமணம் செய்யுங்கள் ஆண்களே....
Monday, 21 January 2019
Sunday, 20 January 2019
கலீல் ஜிப்ரான்
“Love one another, but make not a bond of love: let it rather be a moving sea between the shores of your souls.”
Saturday, 19 January 2019
இயற்கை
நல்ல விஷயங்களின் கிறக்கம், இயற்கையின் போதை – இதையெல்லாம் அனுபவிக்க கொஞ்சம் நேரம் ஒதுக்கி பாருங்களேன். ரசனையும், மனசும் இருந்தா – நீங்களே ரம்மியமான மனுஷனா, மனுஷியா மாறிடுவீங்க
தோள் சாய்வு
சாய்ஞ்சாடம்மா சாய்ஞ்சாடு, சாயக்கிளியே சாய்ஞ்சாடு…
தாலாட்டுலயே நாம சாய்ஞ்சுக்க சொல்றோம். அப்பா தோள்ல சாய்ஞ்சு தூங்காத குழந்தைகள் குறைவு. அம்மாவோட மடில சாய்ந்து தூங்காத குழந்தைகள் ரொம்ப ரொம்ப குறைவு. கணவனின் தோள்ல சாய்ஞ்சு ஆசுவசப்படுத்திக்குற மனைவி, மனைவில் மடியில் சாய்ந்து தலைவலிக்கு நிவாரணம் தேடும் கணவன், காதலனின் தோளில் சாய்ஞ்சு கற்பனையில் தேரோட்டம் செல்லும் காதலி, காதலியின் தோளில் சாய்ஞ்சு அவள் அகத்தை தேடும் காதலன், தோல்வியின் வலிக்கு ஆதரவா தோள் கொடுத்து, அன்போடு அணைச்சு சாய்ச்சுக்குற நண்பன், தப்பு செஞ்சுட்டேன்னு தடுமாறி நிக்கும் குழந்தைய அன்போடு வாரியணைச்சுக்குற அன்னை, அன்னைக்கு ஈடான பள்ளி ஆசிரியை, பாட்டி – இன்னும் list நீண்டுக்கிட்டே போகும். சாய்ஞ்சுக்குறது அப்படிங்குற ஒரு சின்ன செயல் – அதுக்குள்ள எத்தனை உணர்வுகள் பாருங்க.
Thursday, 17 January 2019
Bible story
நீங்கள்தான் நீதிபதியா?
ஒருமுறை இயேசு ஆலய வாசலில் உட்கார்ந்து மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார். அப்போது சிலர், ஒரு பெண்ணை இழுத்து வந்து இயேசுவின் காலடியில் போட்டனர். “இயேசுவே, இந்தப் பெண் விபச்சாரம் செய்தாள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் அடித்துக் கொல்ல வேண்டும்” என்று கூறினார்கள். “இதை நாங்கள் கூறவில்லை. இது மோசேயின் கட்டளை” என்றும் ஆவேசமாகச் சொன்னார்கள்.
இயேசு பதில் எதுவும் சொல்லாமல் குனிந்து ஆலய முற்றத்து மணலில் விரலால் ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். அதற்குள் அங்கே பெரும் கும்பல் கூடிவிட்டது. இயேசு என்ன சொல்லப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்தனர்.
சிறிது நேர அமைதிக்குப் பின்னர் இயேசு, “உங்களில் பாவம் இல்லாதவன் முதலில் இவள் மீது கல் எறியட்டும்” எனக் கூறினார்.
இதைக் கேட்டதும், அங்கிருந்தவர்கள் எதுவும் சொல்ல முடியாமல் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஒவ்வொரு நாளும் நமக்கு இருக்கும் 24 மணி நேரத்தில் எவ்வளவு நேரம் தம்முடைய தவறுகள் குறித்துச் சிந்திக்கிறோம், எவ்வளவு நேரத்தை மற்றவர்கள் குற்றத்தைப் பற்றி யோசிக்கவும் பேசவும் ஒதுக்குகிறோம் என்று யோசித்துப் பாருங்கள்.
தவறே செய்யாதவர் இந்த உலகில் இல்லை. நாமெல்லாருமே ஏதோ ஒரு சூழலில் தெரிந்தோ, தெரியாமலோ தவறுகள் செய்து விடுகிறோம். இவையனைத்துக்கும் நாம் தண்டனை அனுபவிக்க வேண்டுமானால், அதற்குக் காலம் போதாது. அதை மறந்துவிட்டு, மற்றவர்களின் குற்றத்தை மதிப்பிட்டுத் தீர்ப்பு வழங்கி விடுகிறோம். தண்டனையையும் உடனே வழங்க விரும்புகிறோம். நாமும் ஒரு விதத்தில் தண்டனைக்குரியவர்கள்தாம் என்பதை மறந்து விடுகிறோம்.
அந்தப் பெண்ணைத் தண்டிக்க வேண்டும் எனக் கோரியவர்கள் இயேசுவின் சொல்லைக் கேட்டதும் தங்கள் தவற்றை உணர்ந்தார்கள். பிறரைக் குற்றம்சாட்டும் எத்தனை பேருக்கு இந்தப் பக்குவம் இருக்கும்?
குற்றம் செய்தவர்களைத் தண்டிப்பதற்குப் பதிலாக ஒருமுறை அரவணைத்துப் பார்ப்போமே. அவர்களும் நம்மைப் போலத்தானே? நமது தவறுகளை எவ்வளவு மென்மையாக, அனுசரணையோடு நாம் அணுகுகிறோம்! அந்த அனுசரணையோடு பிறரையும் அரவணைக்கலாமே.
அந்த அரவணைப்பே அவர்களை மாற்றலாம். அது நம்மையும் மாற்றலாம்!
- சா.வினிதா
கார்த்திக் நேத்தா
ஒரு வழியாக
நான் பிறந்து விட்டேன் .
பச்சிளங் குழந்தையின்
கண்களைப் போல
என் வாழ்க்கை ஒளிர்ந்து
கொண்டிருப்பதை ரசிக்கிறேன் .
பிசின் சுரக்கும்
இலைகளைப் போல
கறை இல்லாத அன்பு
என்னுள் சுரப்பதை உணர்கிறேன் .
அமைதியின் மேல் விளையாடும்
சிறு பறவையாக மாறி
நான் குதூகலிக்கிறேன் .
சுய ஜீவிய பிரக்ஞை
அழிந்து கொண்டிருப்பதை
அவதானிக்கிறேன் .
ஆண்டனா கம்பி மேல்
அமர்ந்திருக்கும்
காக்கை போல
என் தவறுகளின் மேல் அமர்ந்து
வெளிச்சத்தை
கண்டு கண்டு களிக்கிறேன்.
பாறைக் குடிசையின்
கதவைத் தட்டும்
அலையாகி மிதக்கிறேன்
இப்போதெல்லாம் ,
யாராவது என்னைப்
பார்த்தால் தான்
கண்கள் திறந்து பார்க்கிறேன்.
-கார்த்திக் நேத்தா
கவிதை
எப்போதும்,
‘ஆஃபீஸ்-ல பூச்சி இருக்கு,
போகாதே’ என்று சொல்லும்
நேயமுகில்
அன்று ஒரு கோபத்தில்
‘அப்பா, நீ ஆஃபீஸ்-க்குப் போ’
என்றுவிட்டாள்.
‘சரி, நான் போறேன்’ என்று
திரும்பி உட்கார்ந்து கொண்டேன்.
சுற்றிச் சுற்றி வந்தாள் கொஞ்ச நேரம்.
தன் சாரட்டு வண்டியைக் கொடுத்து
சமாதானம் செய்ய வந்தாள்.
நான் வாங்கிக்கொள்ளவில்லை.
திடீர் உற்சாகத்துடன்
‘அப்பா, உனக்கு லீவ் ஆச்சே’ என்றாள்.
அட, ஆமாம்.
‘எனக்கும் லீவு’ என்றாள்.
‘செக்கருக்கும் லீவு’ என்றாள்.
அது அவளுடைய கரடி பொம்மை.
தன் பொம்மைகளையெல்லாம்
ஒவ்வொன்றாக அழைத்து
விடுமுறை அறிவித்தாள்.
சமைக்க வைத்திருந்த காய்கள்,
தொலைக்காட்சி, சோபா, ஒயர் கூடை,
விளக்கு, மின்விசிறி, ஜன்னல்,
தண்ணீர் பாட்டில்,என்று
தன் பார்வையில் பட்ட எல்லாவற்றுக்கும்
விடுமுறையைக் கொடுத்தாள்.
ஒவ்வொரு அறையாக நுழைந்து
தன் பொற்பிரம்பால் தொட்டு
பொருட்களையெல்லாம் விடுவித்தாள்.
தண்ணீர் கேன் ‘அப்பாடா’ என்று
தன் பெருமூச்சை
ஒரு குமிழியாய் வெளியிட்டு
காலை நீட்டி உட்கார்ந்து கொண்டது.
-முகுந்த் நாகராஜன்
நாய்
நாய்கிட்ட நன்றிய கூட அப்பறம் கத்துக்கலாம்... மொதல்ல எலும்ப எப்படி கடிக்கனும்னு கத்துக்கறனும்...
கடிக்க முடியலயேனு தூக்கிப்போடுற எலும்ப ஒரே கடியில மடார்னு கடிச்சி துப்பிட்டு கேவளமா பார்க்குது.
Wednesday, 16 January 2019
போதும்
களிமண்ணைப்போல, காகிதங்களைப்போலகுழந்தைகளிடம் தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்கும் ஒரு வாழ்வு அமைந்திட்டால்போதும்
தேவதேவன்
உன்னுடைய சூரியன்
உனக்கு சந்தோஷம் தருவது எதுவோ
அதுவே உனக்கு சூரியன்
உதாரணமாக ஒரு சாப்பாட்டுப்பொட்டலம்
ஒரு பப்பாளிப்பழம்
ஒருநண்பனின் முகம்
ஒரு குவளைத்தண்ணீர்
ஒரு கண்ணாடி
இன்னும்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகள்
என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
ஒரு சாப்பாடுப் பொட்டலம்
அப்போதைய நிறைவை உனக்கு அளிக்கவில்லை என்றால்
ஒரு பப்பாளிப்பழம்
அன்றைய பொழுதை இனிமையாக்கவில்லை என்றால்
ஒரு நண்பனின் முகம்
உன் முகத்திற்கு ஒளியேற்றவில்லை என்றால்
ஒருகுவளைத்தண்ணீர்
உன்தாகம் தணிக்கவில்லை என்றால்
ஒரு கண்ணாடி முன்
நீ புன்னகை கொள்ள இயலவில்லை என்றால்
காகிதத்தில் பொதியப்படாத கவிதைகளாய்
உனக்கு உன் வாழ்க்கை ஒருபோதும் காணப்படவில்லையெனில்
உணர்ந்துகொள்
நீ இருக்குமிடம்
‘சூரியமறைவுப்பிரதேசம்’
- தேவதேவன்
தேவதச்சன்
இந்த நீலநிற பலூன்
இந்த நீலநிற பலூன் மலரினும்
மெலிதாக இருக்கிறது. எனினும்
யாராவது பூமியை விட கனமானது
எது என்று கேட்டால், பலூனைச் சொல்வேன்.
நீங்களாவது கூறுங்களேன், இந்த
நாற்பது வயதில் ஒரு பலூனை
எப்படி கையில் வைத்திருப்பது என்று…
பலூனை விரல்களில் வைத்திருப்பது என்பது
காற்றைக் கையில் வைத்திருப்பது போல் இருக்கிறது
பலூன்கள் கொஞ்சநேரமே இருக்கின்றன.
எனினும் சிறுவர்கள் கொஞ்சத்தை ரொம்ப நேரம்
பார்த்து விடுகிறார்கள்.
அருகிலிருக்கும் குழந்தையின் பலூன் ஒன்று
என்னை உரசியபடி வருகிறது. நான்
கொஞ்சம் கொஞ்சமாக பலூன் ஆகிக் கொண்டிருக்கிறேன்
தேவதேவன்
விரும்பினேன் நான் என் தந்தையே
விண்ணளவு பூமி விரிந்து நிற்கும் நிலங்களிலே
ஆடுகள் மேய்த்துப் புதர்நிழலில் களைத்து அமர்ந்து
அமைதிகொண்டு முடிவின்றி இப்புவியினை
நான் பார்த்துக் கொண்டே இருப்பதற்கும்
காலமெல்லாம் திருவிழாவும், மழலைகளின்
கொண்டாட்டமுமாய்
என்வாழ்வை நான் இயற்றிடலாம் என்றெண்ணி
ஊர் ஊராய் சுற்றிவரும் பலூன் வியாபாரி ஆவதற்கும்
மொய்க்கும் குழந்தைகளின் களங்கமின்மை நாடி
பள்ளிக்கூட வாசலிலே இனிப்பான
பெட்டிக்கடை வைத்து காத்துகிடப்பதற்கும்
விரும்பினேன் நான் என் தந்தையே
வியர்வை வழிந்தோட வீதியிலும் வெய்யிலிலும்
உழைப்போர் நடுவே
அடுப்புக் கனலும் சுக்கு வெந்நீர்க்காரனாகி
நடமாடவும் விரும்பினேன்
இன்று விரும்பியதெல்லாம் நான் அடைந்தேன்.
தும்பி
'தும்பி'
குழந்தைமை நோக்கி அதன் உணர்தலுக்காக
அந்த உலகின் வழித்தடமாக...
மண்வீடு கட்டி நான்கு பக்கமும் வாசல் தோண்டி நண்பனின் கை குலுக்கம் அற்புதத்தை எங்கனம் செய்வது? மண்ணை தொட்டால் அலர்ஜி வருமே. பாசிபடிந்த பாறை இடுக்கு ஊற்றுநீர் கிருமிகள் உடையதென்றால் நம் பிள்ளைகள் குடிக்கும் வேதியல் நஞ்சை இறக்கும் நெகிழி குப்பி நீர் பாதுகாப்பானதுதான்.
நெளிந்து குறுகி யானையின் துதிக்கையில் காசு திணிக்கும் தவிப்பை அனுபவிக்க மனமற்ற குழந்தைகள் ஆங்கிரி பர்ட் கேமில் லயித்து கிடக்கிறார்கள். நுங்கு வண்டி செய்யத் தெரியாமல் நம் பிள்ளைகள் கார் ரேஸ் விளையாட்டில் மூழ்கிக் கிடக்கிறார்கள். தூண்டில் போடும் அனுபவமும், களிமண்ணில் பொம்மை செய்யும் நேர்த்தியும், மூச்சடக்கி பழகும் முங்கு நீச்சலும் குளங்களற்ற நகரத்து குழந்தைகளுக்கு எப்படி கிடைக்கும்.
அவர்கள் கைகளில் முளைத்து கிடக்கும் திறன்பேசிகளுக்கு ஓய்வு கொடுங்கள். தாயை பிரிந்து தவிக்கும் அணில்பிள்ளையும், கூட்டிலிருந்து தரை விழுந்து கிடக்கும் மைனா குஞ்சுகளும், ஆடி அசைந்து காற்றில் பறந்து வரும் தாத்தா பூவும், நம் குழந்தைகளின் உள்ளங்கை அடைகாத்தலுக்காக காத்துக்கிடகின்றன. மலைகள், விண்மீன்கள், நிலா, பொன்வண்டு, பொம்மைகள், கதைகள், பிரம்மாண்டங்கள், வண்ணங்கள் நிறைந்த உலகம் அவர்களுடையது. வெறும் மதிப்பெண்களும்,கைபேசிகளும், இணையதளமும் மட்டும் அவர்களை ஆக்கிரமித்திருக்கிறது.
தந்தையை இழந்து பள்ளி வரும் நண்பனிடம் பரீட்சை மதிப்பெண்களை விசாரிக்கும் மனதை வளர்த்திருக்கிறது இன்றைய அவசர கல்வி.
பள்ளிக்கூடம் தயாரித்து அனுப்பும் மதிப்பெண் எந்திரங்களாக நம் பிள்ளைகள் வளர்ந்து வருகின்றனர். வீட்டில் வளர்க்கும் கிளியை பற்றியோ நாய்குட்டியை பற்றியோ அவர்களுடன் பேசுவதற்கு ஆளில்லை. வீடு சிறைச்சாலையாகவும், பள்ளி தொழிற்சாலையாகவும் மாறி குழந்தைகளின் உலகம் இருட்டில் மூழ்கி மிதக்கிறது.
கக்கத்து கதகதப்பில் கிடத்தி கதைகளின் வழி அன்பை, அறத்தை, பச்சையத்தை கடத்தும் பாட்டிகளை தொலைத்து நிற்கும் பிள்ளைகள், மனப்பாடம் செய்வதை தவிர வேறெதுவும் தெரியாத மந்தையாக வளர்கிறார்கள். அவர்களின் எதிர்காலம் பணம் சம்பாதிப்பதை தவிர வேறெதற்காகவும் இல்லை.
பெற்றோராகிய நம் அறியாமையும் ஆதரவும் அனுமதியும்தான் நம் பிள்ளைகளை இந்நிலைக்கு இட்டு வந்து இருக்கிறது.
வாசிப்பின் வழி, காட்சியின் வழி, கதையின் வழி அன்பையும் அறத்தையும் விதைக்கும் ஒரு பாட்டியை நம் குழந்தைகளின் தலைமாட்டில் கிடத்தவும், சக உயிர்கள் மீதான நேசத்தை வளர்க்கவும், பட்டாம்ப்பூச்சியின் சிறகை உள்ளங்கையில் வைத்து பொத்திக் கொள்ளவும், கைபேசிகளை அழுத்தும் விரல்கள் தும்பியை பிடிக்கவும், குழந்தைகள் குழந்தைகளாக இருக்கவும் ஒரு சிறு முயற்சியாக 'தும்பி' என்ற பெயரில் இதழ் ஒன்றை துவங்குகிறோம்.
பஞ்சு மிட்டாய்
குழந்தைகளுக்கு வாங்கித்தரும் சாக்கில் நாமும் ஒரு பஞ்சுமிட்டாயை வாங்கிக்கொண்டு போனால் என்ன தவறாம்.
Tuesday, 15 January 2019
தாத்தா-பேத்தி
பேத்தி பேசிய முதலாவது முழு நீள வாக்கியத்தை அடிக்கடி நினைவூட்டிக் கொண்டு சொல்லும் தாத்தாக்களுக்கு ஆயுளில் சில ஆண்டுகள் கூடக் கூடும்.
- பாதசாரி
பாதை
நீர்ப்பறவைகள் போகின்றன வருகின்றன அவற்றின் தடங்கள் மறைகின்றன. ஆனாலும் அவை, தம் பாதையை மறப்பதில்லை ஒருபோதும்
- எய்ஹெய் டோகன்.
தேவ மகன்
சுற்றுலா வந்த பிள்ளைகளின் சந்தோசம்
தேவாலயத்தின் உள்ளே இரைச்சலானதும்
பிராத்தித்துக் கொண்டிருந்தவர்கள் அதட்டினர்.
விளையாடுபவர்கள் வெளியேருங்கள்
ஜெபிப்பவர்கள் மட்டும் உள்ளே இருக்கலாம்
வேண்டுதல் முடித்து எழுந்த வாத்தியார்
சுருவத்தை பார்த்து அதிர்ந்தார்.
மாதாவின் கைகளில் மகன் இல்லை !
அன்பு
அன்பை அதன் எல்லாப் புதிர் நிறைந்த பாதைகளிலும் உடனழைத்துச் செல்வதென்பது நாம் எவ்வளவுக்கு அன்பின் கைப்பிடியளவு வெளிச்சத்தை நம்பி மட்டுமே வாழ்கிறோம் என்பதை காட்டுவதற்காக.
கவிதை
நீ வரைந்த சித்திரத்திலொன்று
தாளை விட்டிறங்கி
நீ பசித்திருக்கும் பொழுதுகளில் உனக்கு அமுதூட்டுகிறது.
நீ எழுதிய சொற்களில் ஒன்று
நீ தவறி உறங்கும் இரவுகளில்
உன் தலை கோதியபடி நெடுநேரம் நிற்கிறது.
நீ ஒரு மரத்தைப் பற்றிப் பேசுகிற போது
அதைத் தழுவி ஓடுகிற ஆறும்
அதில் நீந்தும் சிறு மீன்களும்
அங்கே ஏன் வந்துவிடுகின்றன?
பாரதி
தேடிச் சோறு நிதந் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிக் கிழப்பருவமெய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வேனென்று நினைத்தாயோ!”
வாழ்வு
வாழ்வின் சில சூட்சமங்களைப் புரிந்துகொள்ளவே முடியாது. ஏதாவது ஒரு கனவு நம்மை துரத்திக்கொண்டே இருக்கும் அல்லது அந்தக் கனவை நாம் துரத்திக்கொண்டிருப்போம். ஏதோ ஒரு கணத்தில், ஏதோ ஓர் இடத்தில் சட்டென அது வசப்பட்டுவிடும். கனவை வென்றெடுத்த அந்தக் கணமும் இடமும் அழியாத கல்வெட்டாகிவிடும்
சிறந்த வாழ்வுமுறை
பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை

-
“ தேவலோகத்துல எதோ ஒரு சின்னத்தப்பு பண்ணுனதுக்காக பூமியில மனுசனா பொறந்துட்ட ஒரு ஆள் மாதிரியே இருக்கு அவர் எழுத்து ... “
-
அவன் தவறவிட்ட பட்டாம்பூச்சிகளைப் பிடிக்கப் போய் இருக்கிறான் ஈரோட்டிற்கும் திண்டிவனத்திற்கும் இடையே ஏதோஒரு இடத்தில் ஒரு அசோக மரத்தினடியில் ...
-
காலை 7, திங்கள், 23 ஏப் 2018 சிறப்புக் கட்டுரை: வாழ்க்கையைச் செதுக்கும் உளி! ந.ஆசிபா பாத்திமா பாவா உலகப் புத்தகத் தினத்தை (ஏப்ரல் 23) ஒட...