Tuesday, 15 January 2019

கவிதை

நீ வரைந்த சித்திரத்திலொன்று
தாளை விட்டிறங்கி
நீ பசித்திருக்கும் பொழுதுகளில் உனக்கு அமுதூட்டுகிறது.
நீ எழுதிய சொற்களில் ஒன்று
நீ தவறி உறங்கும் இரவுகளில்
உன் தலை கோதியபடி நெடுநேரம் நிற்கிறது.
நீ ஒரு மரத்தைப் பற்றிப் பேசுகிற போது
அதைத் தழுவி ஓடுகிற ஆறும்
அதில் நீந்தும் சிறு மீன்களும் 
அங்கே ஏன் வந்துவிடுகின்றன?

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை