Tuesday, 1 January 2019

Kabilan

பாடகி : சின்மயி

இசையமைப்பாளர் :ஸௌரப் – துர்கேஷ்

பெண் : மந்திர கண்ணிலே
காதல் மின்னுதே
புன்னகை ஓவியம் நீயே

பெண் : பின்னலை காட்சிகள்
முன்னே தோன்றுதே
நீர்த்திடா வண்ணங்கள் நீயே

பெண் : ஓ காலை நேர தூறல்
பொழிவும் நீயே
சாலை ஓர கள்ள வளைவும் நீயே
உள்ளம் போகும் செல்ல
பயணம் நீதானே

பெண் : தாவுகின்ற புள்ளி மானின்
மேலே
பாயுகின்ற வெயில் கீற்று போலே
நெஞ்சின் மீது
நெஞ்சின் மீது வந்தாயே

பெண் : வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
கவிதையில் சொன்னால் காதல்… புரியுமோ
பொன் நிற மாலை சரியா
மெல்லொலி இரவு சரிதானா
காதலை சொல்லும் காலம்….எதுவோ…ஓஒ

பெண் : என் பெயரை மெல்ல மறந்தேன்
உன் பெயரால் என்னை அழைத்தேன்
உன் தோளில் சாயும்போது
என் கனவை உன்னில் வரைந்தேன்

பெண் : நடை பாதை பூக்களை போல்
பொது வெளியில் ஆசை வளர்த்தேன்
இள மார்பு வழிந்திடாமல்
உன் வாசம் என்னில் நிறைத்தேன்

பெண் : வானம்
பெண் : குளியல் அறை புகுந்திட
பெண் : மேகம்
பெண் : உன்னை தெளிக்க
பெண் : வாழ்வே
பெண் : வானவில் ஆகிறதே

பெண் : தாவுகின்ற புள்ளி மானின்
மேலே
பாயுகின்ற வெயில் கீற்று போலே
நெஞ்சின் மீது
நெஞ்சின் மீது வந்தாயே

பெண் : ஓ பாதி மனதில்
உன்னை பிரியும் வேலை
இதழின் நுனியில் இதயம்
துடிக்கும் தொல்லை
வார்த்தை இன்றி
மூர்ச்சையாகி போவேனே

பெண் : ஓ வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
கவிதையில் சொன்னால் காதல்… புரியுமோ

பெண் : ……………………..

பெண் : சந்திய கரையிலே
காதல் நுரைக்குதே
கண்களில் காண்பது மெய்யா
கொஞ்சம் காட்சியாய்
கடலே சாட்சியாய்
காதலை சொன்னதும் நீயா

பெண் : ஓ வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தாய்…நாயனே
ஓ பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
காதலின் முதாலாம் ஸ்பரிசம்….போதுமே

பெண் : ஓ வாலிபம் நனைத்தவன் நீயே
நாழிகை எல்லாம் நீதானே
நாடகம் ஆடி தீர்த்தாய்…நாயனே
ஓ பௌர்ணமி நிலவுகள் வேண்டாம்
ஆயிரம் பிறவிகள் வேண்டாமே
காதலின் முதாலாம் ஸ்பரிசம்….போதுமே

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை