Tuesday, 8 January 2019

பாடல்


படம்: எனக்குள் ஒருவன்
இசை: சந்தோஷ் நாராயணன்
வரிகள்: விவேக்
பாடியவர்: பிரதீப் குமார்

பூ அவிழும் பொழுதில் .. ஓர் ஆயிரம் கனா.. 
ஓர் கனவின் வழியில்.. அதே நிலா…
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்..

தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே!
மேகம் கூடும் நேரம் பூ மழையே!

என் மூச்சுக் குழலிலே.. உன் பாடல் தவழுதே.. 
உண்டான இசையிலே.. உள் நெஞ்சம் நனையுதே.. (2)

வான் வெளி மீதே வெண்மதி தோன்றும்..
ஆண் வெளி மேலே அவள் உதித்தாளே..
வெண்சிறகேற்றாள் என் விரல் கோர்த்தாள்..
கண்களை மறைத்தே கனவுக்குள் இழுத்தாள்..

காலம் நேரம் மீறும் ஓர் நிலையே!
தேகம் தோறும் தூவும் பூ மழையே!

பூ அவிழும் பொழுதில் .. ஓர் ஆயிரம் கனா.. 
ஓர் கனவின் வழியில்.. அதே நிலா…
பால் சிரிப்பால் ஒளிப்பூ தெளித்தாள்..

தேகம் மேகம் ஆகும் ஓர் நிலையே!
மேகம் கூடும் நேரம் பூமழையே!

என் மூச்சுக் குழலிலே.. உன் பாடல் தவழுதே.. 
உண்டான இசையிலே.. உள் நெஞ்சம் நனையுதே.. (2

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை