Thursday, 10 January 2019

தாமரை

பாடகர்கள் : சத்யபிரகாஷ் மற்றும் சக்தி ஸ்ரீ

இசையமைப்பாளர் : ஹாரிஸ் ஜெயராஜ்

ஆண் : ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

ஆண் : நெடுந்தூரம் முன்னே
நீண்டு கொண்டே செல்ல
ஒரு வார்த்தையாலே
தூரத்தை நீ கொல்ல

ஆண் : ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே

பெண் : ம்ம்…ம்ம்ம்….
என்னை நீ எடுத்தாய் சிறை…
தாமரை பூ வருமோ தரை….
காற்றிலும் நீ செதுக்கும்
கானல் சிலை……

பெண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும்
அதை….
நான் சொல்ல வேண்டுமென்றால்
பிழை வேற் ஒன்றும் தோன்றவில்லை
நான் மழலை….ஈ….

ஆண் : ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

குழு : {ர்ஹு தும் ததும்
தா தத தும்
ர்ஹு தும் ததும்
தா தத தும்} (2)

பெண் : நான் மழையினில்
நனைத்தது இல்லை
ஓ மதுவினில் குளித்தது இல்லை
நான் மரகத மலைகளை பார்க்க
என் கனவிலும் வாய்த்தது இல்லை

பெண் : விலாவில் சிறகுகள் கண்டேன்
உலாவ உன்னுடன் வந்தேன்
எழுந்தேன்…. விழுந்தேன்…. கரைந்தேன்

ஆண் : ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஆண் : ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

குழு : …………..

குழு : ஓஓஓ மை லவ் ஓஹோ
ஓஹோ ஓஓ
ஓஓஓ மை லவ் ஓஹோ
ஹோ ஓஒ….ஓஒ
ஹோ….ஓஓ…..ஓஓ

ஆண் : நீ பறந்திடும்
உயரத்தில் இருந்து
குழு : இருந்து
ஆண் : ஓ பார்வையின்
பார்வையில் பார்த்தாய்
குழு : பார்த்தாய்

ஆண் : ஆ சிறு சிறு
உருவங்கள் விரைந்து
குழு : விரைந்து
ஆண் : ஓ நகர்வதை
எறும்பென நினைத்தாய்

ஆண் : எல்லாமே நடக்குது இன்று
பெண் : ம்ம்….ம்ம்….
ஆண் : உனக்கும் பிடிக்கிது நன்று
பெண் : ம்ம்ம்….ம்ம்…ம்ம்ம்
மறந்தேன் எனை நான் இழந்தேன்

பெண் : இது போலே
எந்த நாளும் என்றும் இல்லை
இனி மேலும் வரும்
என்று நம்பவில்லை

பெண் : வான் எங்கும்
குழு : ஹே ஹே
பெண் : ஓ கார்மேகம்
குழு : ஹே
பெண் : வான் என்றால்
குழு : ஹே ஹே
பெண் : ஹே நீர் வார்க்கும்
குழு : ஹே

ஆண் : ஒரு தோகை மயில்
தொற்றி கொண்ட தோளில்
மழை ஈரம் வந்து
சாரல் வீசும் நாளில்
ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே

பெண் : ஓ ஏன் என்னை நீ
எடுத்தாய் சிறை,,,,
தாமரை பூ வருமா
தரை….
காற்றிலும் நீ செதுக்கும்
கானல் சிலை…

ஆண் : நெஞ்சுக்குள் நீ நினைக்கும்
அதை….
நீ சொல்லவில்லை என்றால் பிழை
போகட்டும் நம்பிவிட்டேன்
நீ மழலை….ஈ….

குழு : …………

குழு : {ர்ஹு தும் ததும்
தா தத தும்
ர்ஹு தும் ததும்
தா தத தும்} (2)

No comments:

Post a Comment

சிறந்த வாழ்வுமுறை

பிறருக்கு துன்பத்தை தராமல் உன்னால் மிகிழ்வாக இருக்க முடிந்தால் அதுவே சிறந்த வாழ்வுமுறை