ஒரு வழியாக
நான் பிறந்து விட்டேன் .
பச்சிளங் குழந்தையின்
கண்களைப் போல
என் வாழ்க்கை ஒளிர்ந்து
கொண்டிருப்பதை ரசிக்கிறேன் .
பிசின் சுரக்கும்
இலைகளைப் போல
கறை இல்லாத அன்பு
என்னுள் சுரப்பதை உணர்கிறேன் .
அமைதியின் மேல் விளையாடும்
சிறு பறவையாக மாறி
நான் குதூகலிக்கிறேன் .
சுய ஜீவிய பிரக்ஞை
அழிந்து கொண்டிருப்பதை
அவதானிக்கிறேன் .
ஆண்டனா கம்பி மேல்
அமர்ந்திருக்கும்
காக்கை போல
என் தவறுகளின் மேல் அமர்ந்து
வெளிச்சத்தை
கண்டு கண்டு களிக்கிறேன்.
பாறைக் குடிசையின்
கதவைத் தட்டும்
அலையாகி மிதக்கிறேன்
இப்போதெல்லாம் ,
யாராவது என்னைப்
பார்த்தால் தான்
கண்கள் திறந்து பார்க்கிறேன்.
-கார்த்திக் நேத்தா
No comments:
Post a Comment